Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

எனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி 100 நாட்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கும் `விக்ரம் வேதா' படம் எனது வரலாறில் முக்கிய இடத்தில் இருக்கும் என்று விஜய் சேதுபதி கூறினார்.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் கடந்த ஜுலை 21-ஆம் தேதி வெளியாகியது.
விஜய் சேதுபதி - மாதவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படம் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. கதிர், வரலட்சுமி, ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த படத்தின் 100-வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி, கதிர், இயக்குநர் புஷ்கர் - காயத்ரி, தயாரிப்பாளர் சசிகாந்த், சாம்.சி.எஸ் உள்ளிட்ட `விக்ரம் வேதா' படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
இதில் விஜய் சேதுபதி பேசும் போது,
எனக்கு தெரிந்தவரை, தர்மதுரை படத்திற்கு பிறகு, எனது நடிப்பில் 100 நாட்களை கடந்து ஓடும் படமாக `விக்ரம் வேதா' அமைந்ததில் மகிழ்ச்சி. பலரும், பல்வேறு விதத்தில் பாராட்டிய படம் தான் `விக்ரம் வேதா'. ஆனால் இந்த படத்தால் சுயநலமாக நான் அடைந்தது என்னவென்றால், மக்களின் அன்பையும், நன்மதிப்பையும் சம்பாதித்திருக்கிறேன். என்னை வேறுவிதமாகக் காட்டி மக்களிடம் கொண்டு சேர்த்த புஷ்கர் - காயத்ரிக்கு நன்றி. அதே போல் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. எனக்கு வரலாறு என்று ஒன்று எழுதினால் அதில் இந்த படம் முக்கிய இடத்தில் இருக்கும் என்றார்.

The post எனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

எனது வரலாறில் முக்கிய இடத்தை பிடித்த படம் `விக்ரம் வேதா' - விஜய் சேதுபதி நெகிழ்ச்சி

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×