Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மாணவி அனிதா தற்கொலையால் கடும் அதிர்ச்சி: பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் சாலை மறியல்

மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து அவரது உறவினர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நீட் தேர்வுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி, தனக்கு மருத்துவம் படிக்க சீட் கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வுக்கு காரணமான மத்திய அரசு மீது அரசியல் தலைவர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்த வண்ணம் உள்ளனர்.

அனிதாவின் இல்லத்திற்கு மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரெண்டு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

இதற்கிடையே அனிதாவின் தற்கொலையால் கடும் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அரியலூரில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதேபோல் சென்னை, திருவாரூர், செந்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர். உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

The post மாணவி அனிதா தற்கொலையால் கடும் அதிர்ச்சி: பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் சாலை மறியல் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

மாணவி அனிதா தற்கொலையால் கடும் அதிர்ச்சி: பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் சாலை மறியல்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×