Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்

 அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வகம் அமைத்து வருகின்றனர். அங்கு சென்று விண்வெளி வீரர்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் விண்வெளி ஆய்வகத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த  பெக்கி விட்சன் (57) நீண்ட நாட்கள் தங்கி சாதனை படைத்துள்ளார். இவர் அங்கு 288 நாட்கள் தங்கி பணியாற்றியுள்ளார். பெக்கி தனது பயணத்தை முடித்து விட்டு இன்று பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் பயணம் செய்யும் சோயுஸ் விணகலம் கஜகஸ்தானில் தரையிறங்கியதும் அங்கிருந்து ஹூஸ்டன் புறப்படுகிறார். இவர் தன் வாழ்நாளில் 655 நாட்களை விண்வெளியில் கழித்துள்ளார்.

இவர் இதற்கு முன் விண்வெளி ஆய்வகத்துக்கு 2 தடவை கமாண்டர் ஆக பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெக்கி விட்சன் பெற்றுள்ளார். மேலும் விண்வெளி ஆய்வகம் சென்ற நாசா விஞ்ஞானிகள் குழுவுக்கு தலைமை தாங்கிய ஒரே ஒரு பெண் விஞ்ஞானி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.

The post 288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன் appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

288 நாட்கள் விண்வெளி பயணத்தை முடித்துக்கொண்டு பூமி திரும்புகிறார் பெக்கி விட்சன்

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×