
புதுச்சேரியில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வந்த 4 பேர் கொண்ட கும்பலை கைது செய்த போலீசார் அங்கிருந்த 6 பெண்களையும் மீட்டுள்ளனர்.
புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரில் ட்ரெடிஷனல் ஸ்டைல் பியூட்டி & ஆயுர்வேதிக் கிளினிக் என்ற பெயரில் மசாஜ் சென்டர் ஒன்று உள்ளது. இங்கு கண்ட நேரத்துக்கு ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.
மேலும் அங்கு வருபவர்களின் நடத்தையில் வித்தியாசம் தெரிய அங்குள்ள பொதுமக்களுக்கு மசாஜ் சென்டர் மீது சந்தேகம் வந்து பொலீசில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து மசாஜ் சென்டரை ரகசியமாக கண்காணித்த காவல்துறையினர் அங்கு விபச்சாரம் நடப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து அங்கு அதிரடியாக சென்று சோதனை நடத்திய போலீசார் விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரை அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 12 செல்போன்கள், பணம் மற்றும் காண்டங்களை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவர்கள் விபச்சாரத்திற்கு பயன்படுத்தி வந்த கடலூர் மற்றும் பெங்களூரை சேர்ந்த 6 பெண்களை மீட்ட போலீசார் அந்த பெண்களை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்க உள்ளதாக கூறினர்.
The post பார்க்கதான் மாசாஜ் சென்டர் ஆனா பன்றது பலான வேலை appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.