Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவில் அதிவேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. இந்த படகில் 40 பேர் பயணம் செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோரை மீட்பு குழுவினர் தீவிரமாக தேடிவருகின்றனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தோனேசியா-மலேசியா இடையேயான நீர் வழிப்போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துக்கள் ஏற்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடற்பாறையில் மோதி ஒரு படகு விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு appeared first on GoldTamil- Tamil News l Sri lanka Tamil News l Tamil Media News l India Tamil News l Tamil Breaking News l Jaffna News.



This post first appeared on Goldtamil, please read the originial post: here

Share the post

இந்தோனேசியாவில் வேகமாக சென்ற படகு கவிழ்ந்து விபத்து: 10 பேர் உயிரிழப்பு

×

Subscribe to Goldtamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×