Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை பேர் படித்து இருக்கிறீர்கள்?

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு இருந்தார் இயக்குனர் ராஜூமுருகன். குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கியவர் இயக்குனர் ராஜூமுருகன். இவருடைய மூன்றாவது படத்தின் தலைப்பு தான் ஜிப்ஸி.

இயக்குனர் ராஜூமுருகன் விகடனில் பணியாற்றிக்கொண்டு இருக்கும் போது வட்டியும் முதலும், ஜிப்ஸி என்று இரண்டு கட்டுரைத் தொடர்கள் எழுதி வந்தார். அதில் வட்டியும் முதலும் கட்டுரைத் தொகுப்பு புத்தகம் வெளியான வருடத்திலயே சென்னை புத்தகத் திருவிழாவில் அதிக அளவு வியாபாரமான புத்தகம் என்ற பெயர் பெற்றிருந்தது. இன்றுவரை வியாபாரத்தில் பட்டாசு கிளப்பி வருகிறது வட்டியும் முதலும். அவருடைய அடுத்த கட்டுரைத் தொகுப்பு தான் ஜிப்ஸி.

ஜிப்ஸி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இந்தியாவில் உள்ள மதங்களை சுட்டும் வகையில் அமையப் பெற்றிருந்தது. போஸ்டரே வித்தியாசமாக இருக்கிறது என்று பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வந்தனர். அந்தக் கருத்துக்களுக்கு கீழே சிலர் ஜிப்ஸி புத்தகம் இருக்கிறது அதைப் படித்து பாருங்கள். இன்னும் வித்தியாசமாக இருக்கும் என்று கமெண்ட் செய்து இருந்தனர்.

அந்த ஜிப்ஸி புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது.

நாம் அன்றாடம் பேருந்து நிலையங்களில் புளியமரத்தடியில் பார்க்கும் மனிதர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்த புத்தகம்.

இந்தியா முழுக்க உள்ள நரிக்குறவர்கள் பற்றிய பயணக் கட்டுரைத் தொகுப்பு இது. காசியில் தொடங்கி தமிழகத்தின் தென்கோடி மாவட்டங்கள் வரை என்று பல இடங்களில் சுற்றித் திரிந்து நரிக்குறவர்களின் வாழ்க்கையை கட்டுரையாகத் தந்து உள்ளார் ராஜூ முருகன் . இந்தியாவில் நரிக்குறவர்களின் தாயகம் எது? பன்றி மேய்ப்பவர்களின் வாழ்க்கை எப்படிப்பட்டது, தமிழகத்தில் வாழும் நரிக்குறவர்களைப் பற்றி தெரிந்து கொள்ள எந்த எந்த எழுத்தாளர்களை அணுக வேண்டும், எந்த பேராசிரியரை அணுக வேண்டும் போன்ற பல முக்கியமான தகவல்கள் இந்தப் புத்தகத்தின் வாயிலாகக் கிடைக்கப் பெறும்.

பெரியார், சே குவேரா, அன்னை தெரசா, வைக்கம் முகமது பஷீர் போன்றோர் வாழ்வில் பயணங்கள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கிறது என்பதை இந்தப் புத்தகத்தின் வாயிலாகத் தெரிந்துகொள்ளலாம். அதேபோல பயணங்களின் நடுவே தான் சந்தித்த வித்தியாசமான மனிதர்களையும் அவர்கள் இந்தியாவில் காலங்காலமாக நடக்கும் சமூக அவலங்களைப் பற்றியும் எப்படி புரிந்து வைத்து இருக்கிறார்கள் என்பதை பதிவு நமக்கு ஏராளமான மனிதர்களை இந்தப் புத்தகத்தின் வழியாக அறிமுகம் செய்து இருக்கிறார்.

படிக்க படிக்க சுவாரஸ்யம் இம்மியும் குறையாது. குறைந்த பக்கங்களே உடைய புத்தகம் என்பதால் இந்தப் புத்தகத்தை ஒரே நாளில் கூட படித்து முடித்துவிடலாம். பேருந்து நிலையத்தில் தன் உடல் மீது சாட்டை வீசி தன்னை வறுத்திக் கொண்டு, தன் பிள்ளையை அந்தரத்தில் நடக்கவிட்டு பயணிகளிடம் கையேந்தி நிற்கும் மனிதர்கள் மீது உங்களுக்கு அன்பும் அக்கறையும் இருக்கும் ஆனால் உங்களுக்கு இந்தப் புத்தகம் நிச்சயம் பிடிக்கும்.

The post “ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை பேர் படித்து இருக்கிறீர்கள்? appeared first on TON தமிழ்.



This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

“ஜிப்ஸி” புத்தகத்தை எத்தனை பேர் படித்து இருக்கிறீர்கள்?

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×