Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

European Style Mashed Potatoes

தேவையான பொருட்கள்:
========================
யுகான் கோல்ட் பொடேடோஸ் - மூன்று
Soar Cream / Whipping Cream - அரை கப்
பட்டர் - ஒரு ஸ்டிக்/ஐந்து டேபிள்ஸ்பூன்
Whole Milk - கால் கப்
மிக பொடியாக நறுக்கிய பூண்டு - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெள்ளை மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்

செய்முறை:
===========

* முதலில் உருளை கிழங்குகளை நன்றாக கழுவி தோல் உரித்து கொள்ளவும்.

*  நடுவாந்திர சதுரங்களாக நறுக்கி நீரில் போட்டு நறுக்கிய பூண்டையும் சேர்த்து  வைக்கவும்.

* ஒரு பெரிய பாத்திரத்தில் முக்கால் பங்கு நீர் விட்டு 1/8  டீஸ்பூன் உப்பு சேர்த்து கொதிக்க ஆரமித்ததும் உருளை கிழங்கை சேர்த்து மிதமான தீயில் வைக்கவும்.

* Fork tender/கைகளால் மசித்தால் கட்டி இல்லாமல் மசியும் பதம் வந்ததும் நீரை வடிகட்டி Potato Masher உபயோகித்து கட்டி இல்லாமல் மசித்து கொள்ளவும். potato masher இல்லையென்றால் அகப்பை உப்பயோகித்து மசித்து கொள்ளவும்.

* பாலையும்,கிரீமையும் ஒன்றாக கலந்து ஒரு கொதி வந்ததும் இறக்கி விடவும்.

* உருளை கிழங்கு மசித்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கிரீம் கலவையை கொஞ்சம் கொஞ்சமாக விட்டு கிளறவும்.தணலை மிக குறைவாகவே probably in 2 or 3 வைக்கவும்.

* வெண்ணையையும்  உருளையுடன் சேர்த்து உருக விடவும்.

* வெண்ணை எல்லாம் உருகியதும் மிளகு தூள் சேர்த்து  எடுத்து சூடாக பரிமாறவும்.

* சுவையான Mashed Potatoes தயார்.

* சாப்பிடும் முன்பு தேவையான அளவு உப்பு சேர்த்து கொள்ளவும்.

குறிப்பு:
========

ஐரோப்பியா,அமேரிக்கா,இத்தாலி,பிரான்ஸ் ஆகிய நாடுகளில் மதிய உணவில் கண்டிப்பாக Mashed Potatoes இடம்பெறும்.
வெண்ணைக்கு பதிலாக நெய் உபயோகிக்க கூடாது.
வெண்ணையை உருளையில் சேர்க்கும் முன்பு தனி அடுப்பில் வைத்து உருக்கி சேர்க்ககூடாது.அதற்க்கு பதிலாக உருளையில் சேர்ப்பதற்கு ஒரு பத்து நிமிடம் முன்னாடி உளிர்சாதன பெட்டியில் இருந்தது வெளியில் எடுத்து வைக்கலாம்.
வீட்டில் தயாரித்த வெண்ணையை விட கடையில் வாங்கும் வெண்ணையை வைத்து செய்தால் தான் ருசி சரியாக வரும்.
உப்பு மிக குறைந்த அளவே தேவைப்படும்.
உருளையை அடுப்பில் வைத்து அதிக நேரம்  கிளறிக்கொண்டே இருக்க கூடாது வெண்ணை உருகி உருளையுடன் சேர்ந்த உடன் இறக்கி விட வேண்டும்.
எல்லாம் சரியாக வந்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும்.
இதில் உருளையை அரைக்க கூடாது மென்மையாக வர வேண்டும் என்பதற்காக.


This post first appeared on Http://ammus-recipes.blogspot.com, please read the originial post: here

Share the post

European Style Mashed Potatoes

×

Subscribe to Http://ammus-recipes.blogspot.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×