Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஊக்கமருந்து விவகாரம்: ஷரபோவாவின் தடை 15 மாதங்களாக குறைப்பு!

ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு தடையை 15 மாதங்களாக குறைத்துள்ளது விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றம்.

கடந்த ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின்போது நடத்தப்பட்ட ஊக்கமருந்து சோதனையில் மெல்டோனியம் என்ற மருந்தை ஷரபோவா பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது.

மெல்டோனியத்தை பயன்படுத்த கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்ட நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அந்த மருந்தை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எடுத்து வந்ததாக ஷரபோவா தெரிவித்திருந்தார். பின்னர் தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து ஸ்விட்சர்லாந்தின் லாசனில் உள்ள விளையாட்டுக்கான சர்வதேச நடுவர் மன்றத்தில் மேல்முறையீடு செய்தார் ஷரபோவா.

ஷரபோவாவின் மனுவை விசாரித்த நடுவர் மன்றம், அவருக்கு விதிக்கப்பட்டிருந்த 2 ஆண்டு தடையை 15 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் 2017 ஏப்ரல் முதல் சர்வதேச போட்டியில் மீண்டும் களமிறங்கவுள்ளார் ஷரபோவா.

தடை குறைக்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஷரபோவா, "டென்னிஸ் விளையாடுவது எனக்கு பிடித்த விஷயம். அதற்கு தடை விதிக்கப்பட்டபோது என்னிடம் இருந்து ஏதோ ஒன்று பறிக்கப்பட்டதாக உணர்ந்தேன். இப்போது எனக்கு விதிக்கப்பட்ட தடை குறைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நான் மீண்டும் டென்னிஸ் விளையாடும் நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்' என்றார்.

டபிள்யூடிஏ போட்டியில் ஒற்றையர் பிரிவில் மட்டும் 35 பட்டங்களை வென்றுள்ள ஷரபோவா, அதிக வருவாய் ஈட்டும் டென்னிஸ் வீராங்கனைகளின் வரிசையிலும் முதலிடத்தில் இருந்தார். ஆனால் தடை விதிக்கப்பட்டதன் காரணமாக அவர் சரிவைச் சந்தித்தார்.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

ஊக்கமருந்து விவகாரம்: ஷரபோவாவின் தடை 15 மாதங்களாக குறைப்பு!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×