Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மீடியாக்களால் அஜித் படும் பாடு



எந்தத்துறையை எடுத்தாலும் பிரபலங்கள்(celebrities) என்ற நிலையில் இருப்பவர்களின் சுதந்திரம் வரையரைக்குட்பட்டதாகவே இருக்கும். ரசிகர்கள்,மீடியாக்கள் எப்போதுமே அவர்களை சுற்றியே வட்டமிட்டுக்கொண்டிருக்கும். இது தமிழ் சினிமாத்துறையில் கொஞ்சம் அதிகப்படியாகவே இருக்கிறதென்று சொல்லலாம். தமிழ் ரசிகர்கள் சினிமா, நடிகர்கள்,நடிகைகள்,இசையமைப்பாளர்கள் என அத்துறையில் இருப்பவர்களை மற்றைய துறைகளிலுள்ள பிரபலங்களை காட்டிலும் இவர்களில் அதிகப்படியான கிரேசியை கொண்டிருக்கின்றனர் என்பது உண்மையே! அதிலும் ரஜினி,அஜித் போன்ற முன்னணி நடிகர்களுக்கு எப்பவுமே ரசிகர்கள் மத்தியில் ஒரு கிரேஸி இருக்கும். இவர்களின் ஒவ்வொரு அசைவுமே மீடியாக்களால் உன்னிப்பா அவதானிக்கப்பட்டு அவைகளை மக்களுக்கு தெரியப்படுத்தி அம்மீடியாக்கள் மக்கள் மத்தியில் பிரபல்யமடைகின்றன.



சில காலங்களுக்கு முன்னரெல்லாம் இதில் வசமாக மாட்டுப்பட்டவர் சூப்பர்ஸ்டார்தான். இவருக்கு மக்கள் மத்தியில் உள்ள செல்வாக்கை சாதகமாக பயன்படுத்தி இவர் தும்மினாலும் அதை பெருதுபடித்தி மீடியாக்கள் காசு சம்பாதித்துக்கொண்டன. தற்போது சூப்பர்ஸ்டார் வெளியே தலைகாட்டுவதை குறைத்துவிட்டதால் மீடியாக்களின் அடுத்த இலக்கு ரஜினிக்கு அடுத்தாற்போல் செல்வாக்குள்ள அஜித் மீதுதான். இரண்டு நாட்களுக்குமுதல் பரபரப்பா பேசப்பட்ட ஒரு விடயம் "படப்பிடிப்பின் ஓய்வு நேரங்களில் மொபைலில் ஆத்திசூடி படிக்கும் அஜித்". மொபைல்ல ஒரு விடயத்தை படிக்கிறதுக்கும் சுதந்திரம் இல்லையா? சில்லறை வெப்சைட்டுக்களில் மட்டுமல்லாது behindwoods.com (link) போன்றவற்றிலும் இதை பெரியவிடயமாக போட்டார்கள். என்ன பிரச்சினை எண்டால் இதுபோன்ற தேவையில்லாத மீடியாக்களின் புகழ்ச்சி அஜித்தை பிடிக்காது என்று சொல்லித்திரியும் கொஞ்சப்பேருக்கு ரெம்பவே கடுப்பேத்திவிட்டது. அவர்களுக்கு ஏற்கனவே உள்ள கடுப்பு என்னவென்றால் அஜித் மற்றையோருக்கு உதவி செய்யும்போது அதை ஒருபோதும் பப்ளிசிட்டி பண்ணுறேலை. அதனால் பலருக்கு அந்த செய்திகள் காதுக்கு போவதில்லை, அவர்களின் நினைப்பு என்னவென்றால் அஜித் கோடி கோடியா சம்பாதிக்கிறார் ஆனா ஒருத்தருக்கும் உதவி செய்வதில்லை என்று. மாறாக விஜய் எப்பிடிஎண்டால் தனது படங்கள் ரிலீஸ் ஆகும் நேரங்களில்(மட்டும்) சில உதவித்திட்டங்களை வழங்குவார், ஆனா வழங்குறதுக்கு ஒரு மாதத்துக்கு முதல்லே இதுபற்றி பில்டப் விட தொடங்கிடுவார். இதுபோல சூர்யாவும் அகரம் பவுண்டேசன் மூலமாக அநாதரவான குழந்தைகளுக்கு உதவி செய்து வருகின்றார். ஆனால் யார் என்ன செய்தாலும் அஜித்தைதான் எல்லோருமே தூக்கிவைச்சு கொண்டாடுறார்கள். இதுதான் அஜித் எதிர்ப்பாளர்களின் ஆதங்கம்.


Billa 2 படம் ரிலீசாவதுக்கு சில நாட்களின் முன்னர் அஜித் சத்தியம் தியேட்டருக்கு சென்றபோது அவர் என்ன நிற டீசேட் போட்டிருந்தார், ஹெயார் ஸ்டைல், போட்டிருந்த கண்ணாடி எண்டதையெல்லாம் விபரமாக செய்தியா போட்டிருந்தார்கள் behindwoods இனர். அது மட்டுமல்ல ஜி.வி.பிரகாஸ்-சைந்தவி திருமணத்துக்கு சம்பந்தப்பட்ட அரசியல்,சினிமா தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டாலும் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அஜித்துக்கு நேரில் சென்று அழைப்பு விடுத்ததை தனி செய்தியாக எல்லா இணையத்தளங்களும் வெளியிட்டன. இது மட்டுமல்ல சூட்டிங் ஸ்பொட்டில் அஜித்தால் வழங்கப்படும் பிரியாணி முதல் கொண்டு அஜித் மற்றைய சகபாடிகளுடன் எவ்வாறு பழகுறார் என்றதுவரை எல்லாமே மீடியாக்களால் புட்டுப்புட்டு வைக்கப்படுகின்றன. யாராவது ஒருவருடன் அஜித் கதைத்தாலே போதும் அவர் என்ன கதைத்தார் என்பதை மீடியாக்களுக்கு கதைகேட்டவர் சொல்லி பப்ளிசிட்டி ஆக்கிடுவார். இதே மற்றைய நடிகர்களுக்கு இப்பிடியான செய்திகள் வருவதில்லை. இதெல்லாம் அஜித்துக்கு சமுகத்தில் உள்ள செல்வாக்கால்தான். எனினும் இது எங்குபோய் முடியப்போகுதோ தெரியவில்லை! ஓவர் புகழ்ச்சி என்ன வினையை கொண்டுவரப்போகுதோ தெரியவில்லை. என்னதான் இவ்வாறு அஜித் புராணத்தை மீடியாக்கள் பாடினாலும் படங்கள் வெளியாகி முக்கிய தருணங்களில் எதிர்த்தரப்பினரின் பண மற்றும் இதர செல்வாக்குக்கும், அவர்களின் கையேந்தல்களுக்கும் கட்டுப்பட்டு அஜித்துக்கு பாதகமாகவே மீடியாக்கள் செயற்படுகின்றன. அஜித் படங்கள் ரிலீசானால் அதனுடன் என்னதான் மொக்கை படங்கள் வெளிவந்தாலும் அதையே சண் டீவி டாப் டென்னில் முதலில் போடுவார்கள். வரலாறு-வல்லவன் இல் வல்லவனை முதலிலும் பரமசிவன்-ஆதி இல் ஆதியை முதலும்.... இப்பிடி சொல்லிடே போகலாம். அதுமட்டுமல்ல முன்னர் சண் மியுசிக்கில் அஜித் பட பாடல்களை யாராவது கேட்டால் அழைப்பை துண்டித்துவிடுவார்கள். ஆனா இதே சண்ணுக்கு பட விநியோகஸ்தத்தில் ரீ.என்றி குடுத்ததே அஜித்தின் மங்காத்தாதான். sify.com போன்ற இணையத்தளங்கள் வரலாறு படம் வந்து நிறைய நாட்களுக்கு பின்னரே வேறு வழியில்லாமல் பிளக்பஸ்ட்டர் எண்டு அறிவித்தது.ஆனா சுறா வந்தபோது மூன்றாவது நாளே ஹிட் எண்டு அறிவித்துவிட்டார்கள். பிற்பாடுதான் திருத்தத்தை செய்தார்கள். இப்படியா மீடியாக்களின் ஓர வஞ்சகத்தனத்தையும் சொல்லிட்டே போகலாம்.


ஒரு நிதர்சனமான உண்மை என்னவென்றால் சண்,விஜய் டிவிகளை பொறுத்தவரையில் தங்கள் டீவிக்கு யார் வருகை தந்து பேட்டியோ இல்லை நிகழ்வுகளில் பங்குபற்றுகிரார்களோ அவர்களையே தூக்கிவைத்து கொண்டாடுவார்கள். அஜித் இதற்கேல்லாம் செவிசாய்க்காததும் அவர் ஓரங்கட்டப்படுவதட்கு ஒரு காரணமாச்சு. எனினும் சமுகவலைத்தளங்கள் வந்ததின் பிற்பாடு சண் டீவி,விஜய் டீவி போன்றவற்றின் இப்பாகுபாடு சாதாரண ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு தெரியவந்துவிட்டது. இப்பவெல்லாம் சண்ணில் ஒளிபரப்பாகும் டாப் டென் படங்களின் வரிசையை யாராவது நம்புறார்களா?? காமேடியாய்தான் பார்கிறார்கள். ஆகவே வேறு வழியில்லாமல் முன்னர் உள்ளதைவிட அஜித்துக்கு கொஞ்சம்கூடுதலாக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். தற்போது புதிதாக என்ன நடந்ததெண்டே தெரியவில்லை, விகடன் இணையத்தளம் அஜித்துக்கு எதிராக கடுமையாக செயற்பட்டு வருகிறது. கேலிச்சித்திரம் முதற்கொண்டு அண்மையில் நடந்த வாக்கெடுப்பிலும் அஜித்தை(39%) விஜய்(44%) வென்றதாக அறிவித்துள்ளது. நேர்மையான வாக்கெடுப்பில் வெற்றி பெற்றால் சல்யுட் அடிக்கலாம். ஆனா இந்த வாக்கெடுப்பில் ஒருவர் எத்தனைமுறை வேண்டுமானாலும் வாக்களிப்பதற்கான கள்ளவழிகள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதை உண்மையென்று விஜய் ரசிகர்கள் போட்ட அலம்பல்கள் தாங்க முடியவில்லை.இதை உண்மை என்று சொல்பவர்களுக்கு இதே 2011 ஆம் ஆண்டில் நடந்த வாக்கெடுப்பில் அஜித் 68%  வாக்குகளை பெற்றாரென்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது இரண்டாம் இடத்தை பிடித்த நடிகரைக்காட்டிலும் இரண்டு மடங்கிற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றாறேன்பதும் குறிப்பிடத்தக்கது. இம்முறையப்போல் மட்டுமட்டாக வெல்லவில்லை. கீழுள்ள செய்திகளை படிக்கவும்.



இளைஞர்களின் 'யூத் ஐகான்' அஜீத்... இணையதள சர்வே முடிவு!

"AJITH - YOUTH ICON NOW & FOREVER"

ஆக மொத்தத்தில் மீடியாக்கள் பெயரும்,புகழுமடையணும் எண்டா முன்னர் ரஜினியைப்போல இப்போ அஜித் தேவைப்படுகிறார். ஆனா அதே மீடியாவுக்கு அஜித்தின் போட்டி நடிகர்கள் யாராவது மண்டி போட்டாலோ,காசை கொடுத்தாலோ இதே மீடியாக்கள் அஜித்துக்கு எதிராகவும் முக்கிய தருணங்களில் பல்டியடிப்பார்கள். ஆனா எதுவுமே தெரியாததுபோல் அஜித் காட்டிக்கொள்ளும் மௌனமும் பொறுமையும், அதேபோல பெருகிக்கொண்டிருக்கும் அஜித்தின் ரசிகர்களின் ஆதரவும் என்றும் அஜித்தை டாப்பிலே வைத்திருக்கும் என்பதில் சந்தேகமே இல்ல.

Source:  http://sajirathan.blogspot.in/2013/06/blog-post.html
Thanks for your posting....


This post first appeared on Ajithforall.blogspot.com, please read the originial post: here

Share the post

மீடியாக்களால் அஜித் படும் பாடு

×

Subscribe to Ajithforall.blogspot.com

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×