Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பூஜை நடந்தால் உலகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை நடக்கும்


இவ்வுலகில் வாழ விரும்பாதவர்கள், கடவுளிடம் இவுலகிலிருந்து தன்னை எடுத்துச் சென்றுவிடு என்று சொல்லும் மனிதர்கள் ஏறலாம். மனிதன் மனிதரால் ஏமாற்றப்படுகிறான் என்பதே அதற்குச் சான்று. பிரச்சினைகளைச் சந்திக்க மனிதன் பயப்படுகிறான். ஆன்மீகம் பிரச்சனைகளைத் தீர்க்கிறது. உங்கள் பிரச்சினைகளைக் கடவுளிடம் விட்டு விடுங்கள் என்று ஆன்மீகம் கூறுகிறது. ஆன்மீகத்தைத் தேடுவது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ வழி வகுக்கிறது. திருவண்ணாமலை கோயில் 21 தலைமுறைகளுக்கு மோட்சத்தை அளிக்கிறது. மாணிக்கவாசகர், சேக்கிழார், அப்பர் ஆகியோர் திருவண்ணாமலை கோயிலைப் பற்றி 1000 ஆண்டுகளுக்கு முன்பே புகழ்ந்துள்ளனர். தென்னிந்தியாவின் மிக நீளமான கிழக்கு கோபுரம் மற்றும் 9 கோபுரங்களுடன் 24 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ளது இக்கோயில். மேலே உள்ள படம் மலைகளுக்கு அடியில் அமைந்துள்ள திருவண்ணாமலை தளத்தைக் காட்டுகிறது.

கோயிலின் வரலாறு

திருநீர்மலை வரலாறை பற்றிப் பார்த்தோம். இங்கே திருவண்ணாமலையை பற்றிப் பார்ப்போம். பிரம்மாவும் (படைத்தவர்) திருமாலும் (பாதுகாவலர்) தங்கள் படைப்புகளுக்கு யார் சிறந்தவர் என்று சண்டையிட்ட நேரத்தில், சிவபெருமான் ஜோதியாக (நெருப்பாக) தோன்றி, என் கால்களையோ முடியையோ தொடுபவர் யாரோ அவரே சிறந்தவர் என்றார். திருமால் பன்றி அவதாரம் எடுத்துச் சிவனின் பாதங்களைக் கண்டுபிடிக்க மணலில் புதைந்தார், மற்றொரு முனையில் பிரம்மா அன்னமாக மாறி மேலே பறந்து 
சிவன் முடியைத் தொட தேடினார். இருவரும் தங்கள் முயற்சியில் தோல்வி அடைந்தனர். சிவனின் பாதங்களையும், முடியையும் கண்டுபிடிக்கத் தவறிவிட்டனர். அவர்கள் தங்கள் தவறுகளை உணர்ந்து கொண்டனர். சிவபெருமான் பிரம்மா மற்றும் திருமாலின் ஆணவத்தை அழித்தார். பின்னர் சிவனின் பாதங்கள் கீழேயும் தலை வானத்தை நோக்கியும் அமைந்து காட்சி தந்த இடம் இது. மலையில் வானம் முதல் அடிவரை கட்சி தந்ததால் அண்ணாமலை என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள் இன்று வரை இவ்மலையைய் வலம் வருவதால் கிரிவலம் என்று அழைக்கின்றனர். கோயிலின் மலைகளில் ஏற்றப்படும் விளக்கு, மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

திருவண்ணாமலையின் பக்தர்கள்

சிவன் அருணாசலேஸ்வரர்ராக வணங்கப்படுகிறார். டிசம்பர் மாதத்தில் வரும் கார்த்திகை தீபத்தன்று, திருவண்ணாமலைக்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுகின்றனர். கிருத்திகை நட்சத்திரத்தின்போது திருவண்ணாமலையில் ஏற்றிய தீபம் சுற்றியுள்ள இடங்கள் முழுவதும் காட்சியளிக்கும். பக்தர்கள் மலையில் ஏறும் போதும் சுற்றி வரும்போதும் 21 தலைமுறையினருக்கு மோட்சம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள். 
​ஒவ்வொரு பௌர்ணமி தினத்தன்று கோயிலைச் சுற்றி பல பூஜைகள் நடத்தப்படுகின்றன. மலையைச் சுற்றி ஏராளமான லிங்கங்கள் உள்ளன. இறுதியாக, திருவண்ணாமலை கோயிலில் பூஜை நடந்தால் உலகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை நடக்கின்றதாகக் கருதப்படுகின்றது. திருவண்ணாமலை கோவிலில் பூஜை நடக்கவில்லை என்றால் உலகில் எந்தக் கோயில்களிலும் பூஜை நடக்கவில்லை என்றே அர்த்தம். எனவே 21 தலைமுறைகளுக்கு மோட்சம் தரக்கூடிய கோயில் திருவண்ணாமலை. வாழ்நாளில் ஒருமுறை திருவண்ணாமலை கோயிலுக்குச் செல்ல வேண்டும். மேலே உள்ள படம் பக்தர்களின் கிரிவல ஊர்வலத்தைக் காண்பிக்கிறது.

திருவண்ணாமலை கோயில் நேரம் 
காலை 05.30 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை  
மாலை 03.30 
மணிமுதல் இரவு 09.30 மணிவரை  

திருவண்ணாமலை கோயிலின் சிறப்பு
21 தலைமுறையினருக்கு மோட்சம் கிட்டும். 

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு எப்படி செல்வது

விமானம் 
திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு அருகில் உள்ள விமான நிலையம் 106 கிமீ தொலைவில் உள்ள புதுச்சேரி விமான நிலையம். சென்னை விமான நிலையம் 174 கிமீ தொலைவில் உள்ளது.

ரயில் 
திருவண்ணாமலை ரயில் நிலையம் அருணாசலேஸ்வரர் கோயிலிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றது.

பேருந்து 
திருவண்ணாமலை பேருந்து நிலையம் அருணாசலேஸ்வரர் கோயிலிலிருந்து 1 கிமீ தொலைவில் உள்ளது. சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பிற நகரங்களிலிருந்தும்  திருவண்ணாமலைக்கு பேருந்து வசதிகள் உள்ளன. 

அருணாசலேஸ்வரர் கோயில் அமைந்துள்ள இடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது



This post first appeared on Indiantravelstory, please read the originial post: here

Share the post

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பூஜை நடந்தால் உலகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் பூஜை நடக்கும்

×

Subscribe to Indiantravelstory

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×