Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

போன வாரம் இந்தியாவில் அறிமுகமான Tecno Spark 7T, அவற்றின் விலை!

வழக்கம் போல இதுவும் “விலை மீறிய” சில சுவாரஸ்யமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகளுடன் வருகிறது.இந்த் ஸ்மார்ட்போன் சிங்கிள் ரேம் + ஸ்டோரேஜ் விருப்பத்தின் கீழ் வெளியாகியுள்ளது, ஆனால் மூன்று வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும்.

டெக்னோ ஸ்பார்க் 7டி சுற்றிலும் தடிமனான பெசல்களையும், டிஸ்பிளேவில் செல்பீ கேமராவிற்கான ஒரு இடத்தையும் கொண்டுள்ளது, பின்பக்கத்தை பொறுத்தவரை இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாரைக் கொண்ட டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்தியாவில் டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விற்பனை:

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 4 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும். இது ஜுவல் ப்ளூ, மேக்னட் பிளாக் மற்றும் நெபுலா ஆரஞ்சு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வரும்.

இந்த லேட்டஸ்ட் டெக்னோ ஸ்மார்ட்போன் ஆனது வருகிற ஜூன் 15 ஆம் தேதி மதியம் 12 மணி (நண்பகல்) முதல் அமேசான் வழியாக வாங்க கிடைக்கும். அறிமுக சலுகையின் ஒரு பகுதியாக, டெக்னோ நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனின் மீது, விற்பனையின் முதல் நாளில் ரூ.1,000 என்கிற தள்ளுபடியை அறிவித்துள்ளது.

டெக்னோ ஸ்பார்க் 7டி ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள்:

– 6.5 இன்ச் எச்டி + டிஸ்ப்ளே

– 720 × 1600 பிக்சல் ரெசல்யூஷன்

– 20: 9 திரை விகிதம்

– 90.34% ஸ்கிரீன்-டு-பாடி விகிதம்

– 480 நிட்ஸ் ப்ரைட்னஸ்

– 269 பிபிஐ பிக்சல் அடர்த்தி

– 2.3GHz ஆக்டா கோர் சிப்செட்

– 4 ஜிபி ரேம் மற்றும் 64 இன்டர்னல் ஸ்டோரேஜ்

– மைக்ரோ எஸ்.டி உடன் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் விரிவாக்கம்

– டூயல் ரியர் கேமரா அமைப்பு

– 48 எம்பி மெயின் கேமரா சென்சார் (எஃப் / 1.8, குவாட் எல்இடி ஃப்ளாஷ்)

– இரண்டாம் நிலை ஏஐ கேமரா

– எஃப் / 2.0 லென்ஸ் டூயல் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8 எம்பி செல்பீ கேமரா

– 2K Quality ரெக்கார்டிங், 120 fps வேகத்தில் Slow Motion வீடியோ பதிவு, 10X zoom, Short Video, Video Bokeh Mode மற்றும் 20 AI Scene Detection போன்ற ரியர் கேமரா அம்சங்கள்

– ஸ்மைல் ஷார்ட், போர்ட்ரெய்ட் மோட், AI HDR மோட், AR ஷாட், வைட் செல்பீ, பர்ஸ்ட் ஷாட், 7 AI ஸீன் டிடெக்ஷன் AI கேமரா மற்றும் பியூட்டிப்பை மோட் போன்ற செல்பீ கேமரா அம்சங்கள்

– ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்ட ஹையோஸ் 7.6

– 6000 எம்ஏஎச் பேட்டரி

– இது 36 நாட்கள் வரை காத்திருப்பு நேரம், 41 மணிநேர அழைப்பு நேரம், 18 மணிநேர வெப் ப்ரவுஸிங், 193 மணிநேர ம்யூசிக் பிளே டைம், 18 மணிநேர கேம் பிளேமிங் மற்றும் 29 மணிநேர வீடியோ பிளேபேக் ஆகியவற்றை வழங்குகிறது.

– இதன் பேட்டரி AI பவர் சேவிங் மோட்-ஐ கொண்டுள்ளது. அதாவது முழுமையாக சார்ஜ் ஆகிவிட்டது என்பதை எச்சரிப்பது, அதிக சார்ஜ் ஆகுவதை தவிர்க்க ஸ்மார்ட்போன்முழுமையாக சார்ஜ் செய்யப்படும்போது தானாகவே பவரை குறைப்பது போன்ற வேலைகளை செய்யும்.

– ஃபேஸ் அன்லாக் 2.0 மற்றும் ஸ்மார்ட் கைரேகை சென்சார்

– 4G VoLTE, Wi-Fi 802.11 a / b / g / n, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக்.



This post first appeared on Tamiltech, please read the originial post: here

Share the post

போன வாரம் இந்தியாவில் அறிமுகமான Tecno Spark 7T, அவற்றின் விலை!

×

Subscribe to Tamiltech

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×