Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி?

Tags: gtgt whatsapp

உலகின் பெரும்பகுதி மக்களால் பயன்படுத்தப்படுகின்ற முன்னனி சாட் ஆப்பாக இருப்பது வாட்ஸ்ஆப். இதனை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தினாலும் கூட விதிமுறைகளை மீறினால் வாட்ஸ்ஆப் தங்களது மொபைல் எண்ணை BAN செய்துவிடும் என்பது பலருக்கு தெரிவது இல்லை. வாட்ஸ்ஆப் ஒரு மொபைல் எண்ணை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ வாட்ஸ்ஆப்பில் இருந்து BAN செய்ய வாய்ப்பு இருக்கிறது. ஏன் Whatsapp ஒரு மொபைல் எண்னை BAN செய்கிறது? எப்படி அதனை சரி செய்து Activate செய்வது என்பதை இங்கே பார்க்கலாம். 

Why whatsapp ban your mobile number?

WhatsApp ஒரு மொபைல் எண்ணை ban செய்வதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. 

>> உங்களின் Contact List இல் இல்லாத பலருக்கு அதிகப்படியான மெசேஜ்களை அனுப்புவது 

>> இணையதள முகவரிகளையும் விளம்பரங்களையும் அதிகப்படியான முறை பகிர்வது 

>> பாலியல் சம்பந்தப்பட்ட வீடியோக்களை பகிரவும் அது தொடர்பான உரையாடல்களை மேற்கொள்ளவும் குரூப்களை உருவாக்குவது 

>> குழந்தைகள் சம்பந்தப்பட்ட பாலியல் வீடியோக்களை பகிர்வது 

>> உங்களின் Contact List இல் இல்லாத நபர்களுக்கு நீங்கள் மெசேஜ் அனுப்ப முயலும் போது அவர்கள் அதிகப்படியாக ரிப்போர்ட் செய்தால் 

How to Know if WhatsApp Account is Banned?

உங்களது மொபைல் எண் வாட்ஸ்ஆப்பில் இருந்து BAN செய்யப்படுவதற்கு முன்பாக உங்களுக்கு எந்தவொரு எச்சரிக்கை செய்தியும் விடப்படுவதில்லை. உங்களது மொபைல் எண் BAN செய்யப்பட்டால் நீங்கள் பின்வரும் செய்தியை உங்களது வாட்ஸ்ஆப்பில் காணலாம். 

“Your phone number is banned from using WhatsApp. Contact support for help.”

தற்காலிகமாக உங்களது எண் முடக்கப்பட்டு இருந்தால் எத்தனை நாட்களுக்கு அந்த முடக்கம் என்ற தகவல் இருக்கும். நிரந்தரமான முடக்கம் என்றால் மேற்கூறிய புகைப்படத்தில் உள்ளது போல இருக்கும். 

வாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப்பில் ஒரு எண் நிரந்தரமாக முடக்கப்பட்டால் அந்த தடையை நீக்குவது அவ்வளவு எளிதான விசயம் இல்லை. ஒருவேளை அவர்கள் தவறுதலாக தடை செய்திருந்தால் நிச்சயமாக நாம் முறையீடு செய்திடும் போது அந்த தடையை நீக்குவார்கள். 

>> நீங்கள் உங்களது மொபைல் எண்ணை வாட்ஸ்ஆப்பில் கொடுத்து உள்ளீடு செய்திடும்போது நிரந்தரமாக முடக்கப்பட்டிருந்தால் படத்தில் இருப்பது போன்று காட்டப்படும். 

>> நீங்கள் “support” என்ற ஆப்சனை கிளிக் செய்திட வேண்டும் 

>> Describe your problem – என்ற பகுதியில் நீங்கள் உங்களது தரப்பு வாதத்தை வைக்கலாம். அதவாது, நான் எந்தவிதமான தவறான நடவெடிக்கைகளிலும் ஈடுபடவில்லை. ஆகவே எனது தடையை நீக்குங்கள் என கேட்கலாம். 

>> Add Screenshots என்ற பகுதியில் தேவைப்பட்டால் புகைப்படங்களை இணைக்கலாம் 

>> “Next” ஐ அழுத்துங்கள் 

>> “This does not answer my problem” என்ற ஆப்சனை அழுத்துங்கள் 

>> இப்போது உங்களது மின்னஞ்சல் ஆப் ஓபன் ஆகும்

>> அதில் உங்களுடைய பல தகவல்கள் தானாகவே எடுக்கப்பட்டு மின்னஞ்சல் உருவாக்கப்படும். 

>> நீங்கள் அதனை “send” பட்டனை அழுத்தி அனுப்பலாம். 

The post வாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி? appeared first on Tamiltech.



This post first appeared on Tamiltech, please read the originial post: here

Share the post

வாட்ஸ்ஆப்பில் Ban செய்யப்பட்ட எண்ணை Activate செய்வது எப்படி?

×

Subscribe to Tamiltech

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×