Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஸ்படிக மாலை


பல நுறு  வருடங்களாக பூமிக்கு அடியில்
தேங்கியுள்ள நீர் பாறையாக மாறும். அந்த பாறையில் இருந்து சுத்தமான கற்களை தேர்வு செய்து. அதில் தான் ஸ்படிக மாலை, ஸ்படிக லிங்கம் செய்வார்கள். ஸ்படிகம். சிறுவர் முதல் பெரியவர் வரை. ஆண்கள், பெண்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம். ஸ்படிக மாலை பற்றித் தெரியாதவர்களே இருக்க முடியாது. மிகவும் குளிர்ச்சியான பிரதே சங்களில் வசிப்பவர்களும், குளிர்ச்சியான உடல் நிலை கொண்டவர்களும் ஸ்படிகம் அணிவதைத் தவிர்க்கவேண்டும். மற்றவர்கள் யார் வேண்டுமானாலும் அணியலாம்.

தற்போது அனைவரும் ஸ்படிக மாலையினை விரும்பி அணிகின்றனர். ஸ்படிக மாலை அணிவதில் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. ஸ்படிக மாலையை ஒருநாள் முழுவதும் கன்று ஈன்ற பசுவின் சாணத்தில் மூழ்க வைத்திருந்து, பிறகு தண்ணீர், பால் போன்றவற்றால் சுத்தம் செய்து தகுந்த ஒரு குருவின் மூலம் அணிய வேண்டும். தங்களுக்கென்று குரு இல்லாதவர்கள், கோயிலில் அனுபவம் வாய்ந்த குருக்களிடம் (அர்ச்சகர்) மூலமாக தெய்வ சன்னிதானத்தில் அணிய வேண்டும். இதனால் கிரகங்கள் மூலமாக ஏற்படும் இன்னல்கள் விலகும். உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். மேலும் பௌர்ணமி அன்று இம்மாலையை அணிவதால் உடலில் சக்தி கூடும் என்று சாஸ்திரம் கூறுகிறது.

ஸ்படிக மாலையை இரவில் தூங்கும் போதும், கழிவறை செல்லும் நேரம் தவிர மீதி அணைத்து நேரங்களிலும் கழுத்தில் போட்டு கொள்ளலாம். முக்கியமாக குளிக்கும் பொழுது. கழுத்தில் ஸ்படிக மலையோடு குளிப்பது நல்லது.

ஸ்படிக மாலையில் மொத்தம் பத்து விதமான Quality இருக்கு. ஸ்படிக மாலையில் கை வைத்தவுடன் ஒரு வித குளிர்ச்சியை உணர்வீர்கள். உணர்ந்தால் அது நல்ல உயர் தரமானது.

ஸ்படிக மாலையை ஒருவர் அணிந்த பின் மற்ற வர்கள் மாற்றி அணியும் போது தண்ணீருக்குள் குறைந்தது 3 1/2 மணி நேரமாவது ஊறவிட வேண்டும். மற்ற ரத்தின உபயோகத்திற்கும் ஸ்படிக மாலை உபயோகத்திற்கும் ஒரு வித்தியாசம் உண்டு. ஸ்படிகத்தைத் தவிர மற்ற அனைத்து ரத் தினங்களையும் இரவில் அணியலாம். ஆனால் ஸ்படிகத்தைக் கண்டிப்பாக இரவில் அணியக்கூடாது. காரணம், அது உப ரத்தின வகையைச் சார்ந்தது மட்டுமல்ல. தானாகத் தன் அதிர்வுகளை வெளியேற்றும் சக்தி ஸ்படிகத்திற்குக் கிடையாது என்பதும்தான். காலையில் இருந்து இரவு வரை ஒருவர் ஸ்படிக மாலை அணியும் போது அவரது உடற்சூட்டை இந்த ஸ்படிகம் தன்வசம் இழுத்துக் கொள்ளும். காலையில் ஒருவர் ஸ்படிகத்தை அணியும் முன் அது குளிர்ச்சியாகவும் இரவில் அதை கழட்டும்போது உஷ்ணமாக இருப்பதைக் கொண்டு இதை நீங்கள் உணரலாம்.

இந்த ஸ்படிக மாலையை இரவில் கழற்றித் தரையில் வைக்க வேண்டும். அப்போது பூமியின் ஈர்ப்பு சக்தியினால் மறுபடியும் ஈர்ப்புப் பெறும். தினமும் இதைச் செய்ய வேண்டும். அந்த தரு ணத்தில் உங்கள் மன, உடல் அழுத்தம் குறை வதை நீங்கள் உணரலாம். எத்தனை நாட்க ளுக்கு அணிந்தாலும் அதன் சக்தி குறையவே குறையாது.
ஸ்படிகத்தை நேரடியாகவோ, வெள்ளி அல்லது தங்கத்துடன் இணைத்தோ அணியலாம். வீட்டிற்கு ஒரு ஸ்படிகமாலை இருந்தாலே போதும். அதிக உஷ்ணம் உள்ள குழந்தைகள் ஸ்படிகத்தை அரைஞாணில் அணியலாம். இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம். ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது ஈர்ப்பு சக்தி நன்றாக இருக்கும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்யும் போது அதன் சக்தி அப்படியே இருக்கும்.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மெகரு. இந்த மெகரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மெகருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டிலோ வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும்.

 ஸ்படிக லிங்கத்துக்கு விபூதியால் அபிஷேகம் செய்தால் கர்ம வினைகள் நீங்கும். முன்பு சொன்னது போல இதன் நேர்மறையான அதிர்வுகள் நவகிரகங்களின் கெட்ட பலனை பெரிதும் அழிக்கும். ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து தூய மனதோடு சிவனின் பஞ்சாட்சர மந்திரத்தை 108 தடவை ஜபிக்க எல்லா பாவங்களிலிருந்தும் விமோசனம் கிடைக்கும்.பொதுவாகவே மந்திர சித்தி, அதாவது சொல்லும் மந்திரங்களுக்கு முழுமையான பலன் கிட்ட வேண்டுமானால் அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து பய பக்தியுடன் ஜபித்தால் பலன் பல மடங்கு கிட்டும். ஸ்படிக லிங்கத்தின் முன் சிவனை மட்டும்தான் வழிபட வேண்டும் என்றில்லை. உதாரணமாக லட்சுமியின் அருள் வேண்டி லட்சுமி அஷ்டோத்திர மந்திரம் சொல்வோர், அம்மந்திரத்தை ஸ்படிக லிங்கத்தின் முன் அமர்ந்து ஒன்றுபட்ட சிந்தனையோடு சொன்னால் பலன் பல மடங்கு பெருகி வரும். ஸ்படிகம் என்பது நம் மனதை அப்படியே பிரதிபலிக்கும் தன்மையது. அதனால் அதை வணங்கும்போது தூய்மையான மனதோடு வணங்குதல் அவசியம். தீய எண்ணங்கள், பிறரைக் கெடுக்கும் நோக்கத்துடன் செய்யப்படும் பிரார்த்தனைகள், அலைபாயும் மனம், தெளிவற்ற சிந்தனை இவற்றோடு வணங்கினால் எதிர்மறையான பலன் ஏற்பட்டுவிடும். அதனால் ஸ்படிகத்தை வணங்கும்போது மிகவும் கவனம் தேவை. ஸ்படிக லிங்கத்தைப் போலவே ஸ்படிக மணி மாலையும் மிகவும் புனிதமானது. விசேஷமானது.ஸ்படிக மணி மாலையை வைத்து மந்திரங்கள் ஜபிப்பவர்களுக்கு பலன் முழுவதுமாகவும், விரைவிலும் கிட்டும். மகாபாரதத்தில் பீஷ்மர் ஸ்படிக மணி மாலை அணிந்து இருந்ததால்தான் அவருக்கு மனத்திண்மையும், தோற்றப் பொலிவும், திடமனதும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஸ்படிகம் நம் மனதில் தன்னம்பிக்கையையும், எதையும் எதிர் கொள்ளும் நெஞ்சுரத்தையும் வழங்கும் தன்மை உடையது. அதனால் நம் தோற்றத்திலும் ஒரு பொலிவு உண்டாகும். தன்னம்பிக்கையும், தைரியமும் இருந்து விட்டால் வாழ்வில் துன்பங்கள் ஏது? இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்களாக.


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

ஸ்படிக மாலை

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×