Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சித்தர்பீடங்கள்

ஓம் நமசிவாய 

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,

தமிழ்நாட்டில் இருக்கும் சித்தர்பீடங்கள்,சூட்சுமமாக இருந்து நம்மைக் காக்கும் மகான்களின் ஜீவசமாதிகளை வழிபடும் சூட்சும வழிபாட்டு முறை


சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரையிலும், ஆவி வழிபாடுதான் நமது தமிழ்நாட்டில் இருந்துவந்தது.அக்காலத்தில் இருந்த ஆன்மீக அருளாளர்கள் " கலிகாலத்தில் மனிதர்களின் வாழ்க்கை,சிந்தனை முறை எப்படி இருக்கும்?" என்பதை சிந்தித்தன் விளைவாக ஆவி வழிபாட்டு ஸ்தலங்களான ஜீவசமாதிகள் மற்றும் சித்தர்களின்  ஜீவசமாதிகளை கோவில்களாக மாற்றினார்கள்.எந்த மகான் எந்த கடவுளின் மீது பிரியமாக இருந்தாரோ, அல்லது எந்த கடவுளை வழிபட்டாரோ அந்த தெய்வத்தின் சிலை அவரது ஜீவசமாதியின் மீது அல்லது அருகில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.பெரும்பாலான மகான்களும்,சித்தர்களும் சிவனை வழிபட்டிருக்கின்றனர்.அபூர்வமான சிலர் விநாயகரையும்,முருகக்கடவுளையும்,சக்தியையும்,முனீஸ்வரரையும், கருப்பசாமியையும் வழிபட்டிருக்கின்றனர்.அதனால்,அந்த ஜீவசமாதிகளின் மீது அல்லது அருகில்(ஒரே கோவிலுக்குள்) உரிய தெய்வங்கள் சமைக்கப்பட்டு,கோவில்களாக மாற்றப்பட்டுள்ளன.
உதாரணமாக சித்தர் போகரின் வழிபாடு முருகக்கடவுளின் வழிபாடு ஆகும்.அதனால்,பழனிமலையில் முருகக்கடவுளின் கோவில் உருவானது.நாம் பழனி முருகக்கடவுளை தொடர்ந்து,முருகக்கடவுளின் வழிபாட்டுமுறைகளுக்கு ஏற்றவாறு வழிபட்டால்,போகர் அகமகிழ்ந்து,நமது கோரிக்கைகளை நிறைவேற்றுவார்;பிரச்னைகளைத் தீர்ப்பார்;நோய்களைக் குணப்படுத்துவார்;துன்பங்களை நீக்குவார்;இந்த அரிய ஆன்மீக ரகசியத்தை நமக்காக 40 ஆண்டுகளாக ஆராய்ந்து சொன்னவர் ருத்ராட்சத் துறவி,சிவகாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஆவார்.எனவே,நாம் அவருக்கு இந்த ஜன்மம் முழுவதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.
 ஜீவசமாதிகளை நாம் எப்படி வழிபட வேண்டும்?
முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை,ஒருகிலோவுக்கு குறையாமல் டையமண்டு கல்கண்டு,அரை கிலோவுக்குக் குறையாமல் விதையில்லாத கறுப்பு திராட்சைப்பழங்கள்,கொஞ்சம் விதையில்லாத பேரீட்சைப்பழங்கள் இத்துடன் கொஞ்சம் வெற்றிலையும்,கொட்டைப் பாக்கும்,சந்தனபத்திக் கட்டும்,ஆறு நாட்டு வாழைப்பழங்களும் கொண்டு வந்து பத்தி பொருத்தி,தேங்காய் உடைத்து,கற்பூரம் கொளுத்தி,சிகப்பு ரோஜாக்களால் கட்டப்பட்ட மாலையை ஜீவசமாதியில் உள்ள தெய்வச்சிலைக்கு அணிவிக்க வேண்டும். நெய்தீபம் ஜீவசமாதியின் முன்பு ஏற்ற வேண்டும்.
                    
எந்த எந்த நாட்களில் ஜீவசமாதி வழிபாடு செய்யலாம்?
பகைவரோடு போராடி,போராடி களைத்துபோன நேர்மையாளர்கள், தங்களது நியாயமான பிரச்னைகள் தீர திங்கட்கிழமை மாலை 5 மணி முதல் 7 மணிக்குள் இவ்வாறு 8 திங்கட்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்ய வேண்டும்;
குலதெய்வம் தெரியாதவர்கள்,குலதெய்வத்தின் கோபத்துக்கு ஆளானவர்கள்,குலதெய்வ வழிபாட்டை மறந்தவர்கள்,குல தெய்வத்தை அறியாமல் இருந்து ,அதனால் கஷ்டப்படுபவர்கள் அனைவரும் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும்;இப்படி 8 செவ்வாய்க்கிழமைகளுக்கு தொடர்ந்து ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்;

வேலைக்குப் போய்க்கொண்டிருப்பவர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள் பொருளாதார முன்னேற்றம் அடைய விரும்புவோர்,புதன் கிழமைகளில் மாலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்;இவ்வாறு தொடர்ந்து 8 புதன்கிழமைகளுக்குச் செய்து வர ,நல்ல பொருளாதாரத் தன்னிறைவை அடைய முடியும்.
தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தகுந்த குருவைத் தேடுபவர்கள்,வியாழக்கிழமைகளில் மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி 8 வியாழக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;
பணரீதியான பிரச்னைகள் இருப்போர்,பண நெருக்கடியில் இருப்பவர்கள் அதிலிருந்து மீள வெள்ளிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்தாலே போதுமானது;

பண நெருக்கடி,தொழில் மந்தநிலை,குடும்பப் பிரச்னைகள் என எல்லாவிதமான பிரச்னைகளும் தீர விரும்புவோர் சனிக்கிழமை மாலை 5 முதல் 7 மணிக்குள் இவ்வாறு ஜீவசமாதி வழிபாடு செய்துவர வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 சனிக்கிழமைகளுக்கு மட்டும் வழிபாடு செய்துவிட்டாலே போதுமானது.

நீண்டகாலமாக வழக்குடன் போராடிக்கொண்டிருப்பவர்கள்(எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சரி) ஞாயிறு மாலை 5 முதல் 7 மணிக்குள் மேற்கூறியவாறு ஜீவசமாதி வழிபாடு செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து 8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கு வழிபாடு செய்தால் போதுமானது.

இந்த ஜீவசமாதி வழிபாடு செய்பவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை அடியோடு நிறுத்தியாக வேண்டும்;இது ரொம்ப முக்கியம்.முட்டை,முட்டை கலந்த கேக்,புரோட்டா என மறைமுக அசைவ உணவுகளையும் தவிர்த்துவிட்டே இந்த ஜீவ சமாதி வழிபாடு செய்ய வேண்டும்.யார் எந்த ஊரில் இருக்கிறார்களோ,அந்த ஊரில் இருக்கும் ஏதாவது ஒரு ஜீவசமாதியில் இந்த வழிபாடுகளை முடிக்கலாம்;துக்கம்,பிறப்பு முதலியவற்றால் தொடர்ந்து 8 வாரங்கள் செய்ய முடியாவிட்டாலும்,விட்டு விட்டு செய்தாலும் போதுமானது.அதே சமயம் 8 வாரத்துக்கு மேல் இந்த ஜீவ சமாதி வழிபாடுகளை பின்பற்றக் கூடாது.எச்சரிக்கை!!!

இந்த தெய்வீக ரகசியத்தை எனக்கும்,நமக்கும் அருளிய ருத்ராட்சத் துறவி,சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன்,புளியங்குடி அவர்களுக்கு கோடி கூகுள் நன்றிகள்!!!

ஓம்சிவசிவஓம்                             

தமிழ்நாட்டில் இருக்கும் மகான்கள்,துறவிகள்,சித்தர்களின் ஜீவசமாதிகள் இருக்குமிடங்கள்: 






நாம் நமது வீட்டில் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜபித்தால்,பத்துமுறை ஜபித்தமைக்கான பலன்கள் கிடைக்கும்;
நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு முறை ஒரு மந்திரத்தை ஜபித்தால்,1000 முறை ஜபித்ததற்கான பலன்கள் கிடைக்கும்;
மலை மேலே இருக்கும் ஒரு கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,1,00,00,000 தடவை ஜபித்தபலன்கள் நம்மை வந்து சேரும்;
கடலோரக்கோவிலில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால்,2,00,00,000 தடவை ஜபித்ததற்குரிய மந்திர ஜபசக்தி நமக்கு உருவாகும்;
இந்த எண்ணிக்கை சாதாரண நாட்களில்,ஜபித்தால் கிடைக்கும் எண்ணிக்கை ஆகும்.இதே மந்திரஜபத்தை தமிழ் வருடப்பிறப்பு,தமிழ்மாதப்பிறப்பு,அமாவாசை,பவுர்ணமி,கிரகண நாட்களில் ஜபித்தால்,மேலே கூறிய எண்ணிக்கையோடு 100 கோடி மடங்கு பலன்களாக நம்மை வந்து  சேரும்.
எந்த ஒரு மந்திரத்தையும் நாம் 1,00,000 தடவை ஜபித்தபின்னரே,அந்த மந்திரத்துக்கு உயிர் உண்டாகி,நம்மை பாதுகாக்கத் துவங்கும்;ஆனால்,நாம் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் மட்டும் 10,000 தடவைகளுக்கு ஜபித்துவிட்டாலே,ஓம்சிவசிவஓம் நம்மை பாதுகாக்கத் துவங்கும்;1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்கும்வரையிலும்,நமக்கு ஓம்சிவசிவஓம் ஜபிக்கமுடியாத அளவுக்கு பல தடைகள் வரத்தான் செய்யும்;நமது மன உறுதியாலும்,குருபக்தியாலும்,சிவபெருமானாகிய அண்ணாமலையாரின் மீதான பாசத்தாலும் அந்த தடைகளை முறியடித்து,ஓம்சிவசிவஓம் ஜபத்தை ஒரு லட்சம் தடவை வரை ஜபித்துமுடித்துவிட வேண்டும்;அதன் பிறகு ஒரு நாளுக்கு 108 முறை அல்லது 15 நிமிடம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவது நல்லது & அவசியம்.இப்படி தினமும் 108 முறை வீதம் நமது ஆயுள் முழுவதும் ஒரு நாள்கூட விடாமல் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
நீதி ,நேர்மை,தர்மப்படி வாழ்ந்துவருபவர்களில் பெரும்பாலானவர்களை உடன்பிறந்தோர்,பெற்றோர்,வாழ்க்கைத் துணை,குழந்தைகள் கூட ஆதரிப்பதில்லை;உதவுவதில்லை;அதே சமயம்,நீதியை நேர்மையைப் பின்பற்றுபவர்களுக்கு ஒரு நிரந்தரமான வேலை அல்லது தொழில் அல்லது போதுமான செல்வச் செழிப்பு இல்லாத நிலை இருந்தால்,அவர்கள் பணத்துக்கு அடிமையாகியிருக்க வேண்டும்.பணத்துக்காக பலர் தனது நேர்மையான,நீதியான வாழ்க்கையை தொலைத்துவிட்டு,கலியின் கொடுமையால் அநீதியான,பேராசை மிகுந்த வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.இப்படிப்பட்ட சூழ்நிலையே இந்த கலிகாலத்தில் இருக்கிறது.இருந்தும் கூட,பணக்கஷ்டம் வந்தபோதும் கூட,தர்மம்,நீதி,நேர்மையைக் கைவிடாதவர்கள் சில ஆயிரம் பேர்கள் தமிழ்நாடு முழுவதும் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்களைத் தான் ஆன்மீகக்கடல் தேடிக்கொண்டிருக்கிறது;இவர்களுக்குத் தேவையான தெய்வீக சக்தியை,நியாயமான செல்வ வளத்தை இந்த ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் தரும்;


இவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பின்வரும் ஜீவசமாதிகளில் தினமும் 15 நிமிடம்,மஞ்சள் துண்டு விரித்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ,இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்து,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இப்படிச் செய்துகொண்டே வர வேண்டும்.இதுவே இந்த தர்மவான்களுக்குத் தேவையான தெய்வீக பாதுகாப்பு,செல்வ வளம்,மன வலிமை,உடல் நலத்தைத் தந்துவிடும்.


இப்படி இருப்பவர்களும் தொடர்ந்து தர்மப்படி வாழமுடியாத அளவுக்கு ஏதாவது ஒரு கெட்டபழக்கத்தில் வீழ்ந்து கிடக்கிறார்கள்;உதாரணம் :காதல்,கள்ளக்காதல்,இணையத்தில் இருக்கும் காம இணையதளங்களுக்கு அடிமையாகிவிடுதல்,சூதாட்டம்,கிரிக்கெட் பைத்தியம்,குடிப்பழக்கம்,போதை மருந்துகள் அடிக்கடி பயன்படுத்துவது, மனைவி அல்லது சகோதரி அல்லது மகள் அல்லது தாயை தினமும் அழவைத்துப் பார்ப்பது(அப்படி ஒரு வக்கிரமான குணம்=சாடிஸ்ட்);அரசியலில் ஜெயிக்க மாட்டோம் என்று தெரிந்தும் கூட அரசியல் கட்சியில் தீவிரமாக உழைப்பது;யாருக்கோ உழைத்து அவர்களை பணக்காரராக்குவது; காம மயத்தால் தனது மனைவி மற்றும் குழந்தைகளை கவனிக்காமல் இருப்பது; வாரம் ஒருமுறை கூட மனைவியிடம் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ளாமல் இருப்பது; தனது குழந்தைகளின் பாச ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது; பிறரது கள்ள உறவுகளுக்கு பக்கபலமாக இருப்பது.  . . என்று பலவிதமான தவறுகளில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்துமீள முடியாமல் தவிப்பார்கள்;


அப்படி  மீள விரும்புவோர்,ஒரு நாளுக்கு 15 நிமிடம் வீதம் தினமும் ஓம்சிவசிவஓம் ஏதாவது ஒரு ஜீவசமாதிக்குச் சென்று  ஜபித்து வர வேண்டும்;45 முதல் 90 நாட்களுக்குள் தவறான பழக்கம் எதுவாக இருந்தாலும்,தவறான குணம் எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதிலிருந்து மீண்டு விடுவார்கள்.அதன்பிறகும் விடாமல் தினமும் உங்களது ஊரில் இருக்கும் ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவர வேண்டும்.
சென்னையில் இருக்கும் ஜீவசமாதிகளின் பட்டியலும்,இருப்பிடமும்

திருவொற்றியூர்: பட்டினத்தார்= கடற்கரையை ஒட்டி பட்டினத்தார் கோவில் வீதி.ஆவணி மாதத்தில் வரும் உத்ராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குருபூஜை.
பாடகச்சேரி ராமலிங்கசாமிகள்= பட்டினத்தார் கோவில் வீதியில் இவரது பெயருள்ள மடம்
ஐகோர்ட் சாமி என்ற அப்புடுசாமி= பாடகச்சேரி ராமலிங்க சாமிகள் மடத்துள் இருக்கிறது.
அருள்மிகு யோகீஸ்வரர் சாமி=வடிவுடையம்மன் கோவில் அருகில் தட்சிணாமூர்த்தி ஆலயம் ஸ்தாபித்தவர்.
பரஞ்சோதி மகான்= டோல்கேட் பஸ் ஸ்டாப் அருகில் 4,தங்கம் மாளிகை அருகில்.
ஞானப்பிரகாச சாமிகள்= வடக்கு மாடவீதி 145/30 இல் சிவாமிர்த ஞான ஆசிரமத்தில் பஞ்சலோக சிலை பிரதிஷ்டை.
மவுன குரு சாமிகள்= கடற்கரையோரம் சமாதி கோவில்.
முத்துக்கிருஷ்ண பிரம்மம்=ஆஞ்சநேயர் கோவில் பஸ் ஸ்டாப் அருகில் உள்ள அருணாச்சலேஸ்வரர் கோவில் எதிரே சமாதி; கார்த்திகை மாத சதயம் நட்சத்திரத்தன்று குரு பூஜை;
ஞானசுந்தர பிரம்மம்= முத்துக்கிருஷ்ண பிரம்மம் சமாதி அருகில் ஞான சுந்தர பிரம்மம் சமாதி.சித்திரை மாத உத்திராடம் நட்சத்திரத்தன்று வருடாந்திர குர


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

சித்தர்பீடங்கள்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×