Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பாவத்பாவம் என்றால் என்ன?

எனது Facebbok Page இல் வாசகர் ஒருவரது கேள்வி :- ஜோதிஷ ஆசானிடம் ஒரு கேள்வி.
லக்னம் நான் என்றால் என் மனைவிக்கு ஏழாவது பாவம்
என் குழந்தை யின் பாவம் ஐந்து. என் மனைவி என் குழந்தைக்கு தாய் எனும்போது
ஐந்துக்கு. ஏழாம் பாவம் மூன்று என்றால் தாய்க்கு நான்காம் பாவம் என்று சொல்வது ஏன்?
மேலும்.......
என் தந்தை க்கு. ஒன்பதாம் பாவம். என் அம்மா என் தந்தக்கு மனைவிதானே... அப்படியானால். ஒன்பதுக்கு. ஏழாவது பாவம். மூன்று தானே.....
பிறகு ஏன்.... தாய்க்கு நான்காம் பாவம்....
எனது பதில் :- வணக்கம்,
ஒரு பாவத்திற்கு இன்னொரு பாவம் எடுத்து கணிப்பது பாவத்பாவை முறையாகும். பாரம்பரிய ஜோதிடத்தை ரிஷிகள் தெளிவாக வகுத்துள்ளனர். ஆனால் தற்போது ஜோதிடம் திரிபுபடுத்தப்பட்டு தவறான வகையில் ஜோதிடம் பரப்புரை செய்யப்படுகிறது. அந்த வகையில் மூலநூல்களில் உங்களின் கேள்விக்கு ஏற்ற விளக்கத்தினை மந்த்ரேஸ்வரர் அருளிய பலதீபிகையில் பாவத்பாவம் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி ஜாதகரிற்கும் குறித்த உறவுகளிற்குமான தொடர்பை ஸ்தானங்களை வைத்து அறிய வேண்டும். அதாவது தாய் என்றால் 4ம் ஸ்தானம். நம் சொத்து என்றால் 4ம் ஸ்தானம். ஆனால் பாவத்பாவ அடிப்படையில் ஜாதகபலன் அறிய வேண்டும் என்றால் உயிர்க்காரகத்துவத்திற்கு காரகனை (முதன்மையாக கொண்டு) முதற்கொண்டும் பொருள்காரகத்திற்கு ஸ்தானத்தை முதற்கொண்டும் பலன் அறிய வேண்டும். உதாரணமாக காலையில் பிறந்த ஒருவரின் தந்தையின் உடல்நலகோளாறு பற்றியறிய சூரியனிலிருந்து 6ம் இடத்தை பரிசீலிக்க வேண்டும். ஆனால் 99%மான ஜோதிடர்கள் ஒன்பதிற்கு ஆறாமிடத்தை ஆராய்கின்றனர். இது தவறானது. இப்படி தவறாக பார்ப்பதால்தான் தந்தையின்(9) மனைவி(7) ஸ்தானம் 4 என வராமல் ஏன் 3 என வருகிறது என்று குழம்பிக்கொள்கின்றனர். பாரம்பரிய ஜோதிடத்தை பொறுத்தவரை மூலநூல்களில் சொல்லப்பட்ட விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். நுனிப்புல் மேய்ந்துவிட்டு பாரம்பரிய ஜோதிடத்தை பலர் தவறான வகையில் கொண்டுசெல்வது கண்டிக்கதக்கது.  இக்கருத்தை ஜோதிடர்கள் மற்றும் ஜோதிட ஆர்வலர்கள் மத்தியில் இந்த பதிவு செல்லட்டும்...
 பதிவு புரிந்திருந்தால் கமெண்டில் இந்த கேள்விக்கான பதிலை கூறுங்கள்
கேள்வி :- பகலில் பிறந்த ஒருவரின் தாயின் சொத்தில் உள்ள எதிர்ப்புக்களை குறிக்கும் பாவம் எது?


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

பாவத்பாவம் என்றால் என்ன?

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×