Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பழமையான வாக்கிய பஞ்சாங்கங்கள் PDF வடிவில்

அனைவருக்கும் வணக்கம்.
உங்கள் அனைவருக்கும் தெரியும் நான் வாக்கிய பஞ்சாங்கத்தினை ஆதரிப்பவன் என்று. இன்று கணினி/ தொலைபேசியில் நொடிப்பொழுதில் ஜாதகம் கணித்துவிடுகின்றோம். பலரிற்கு இதன் பலன்கள் மற்றும் பலன் நடைபெறும் காலம் பொருந்துவதாக காணமுடியவில்லை. வாக்கியம், திருக்கணிதம் இரு முறைகளிலும் தனித்தனியாக ஜாதகம் எடுத்து அதன் தசா, புக்தி, அந்தரம் தொடங்கும், முடியும் காலத்தை குறித்துவைத்து உங்களிற்கு எதன்படி துல்லியமாக பலன் நடக்கின்றது என பாருங்கள். அப்புறம் முடிவு வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பது உங்களிற்கே தெரிய வரும். கம்ப்யூட்டர் ஜாதகம் நமது மேலான ஜோதிட சாஸ்திரங்களில் கூறப்பட்ட திருத்தங்களை அனுசரித்து ஜாதகம் கணிக்காது. உதாரணமாக லக்கினசந்தி, ராசிச்சந்தி, நட்சத்திர சந்தி. கம்ப்யூட்டர்/மொபைல் நாம் கொடுத்த நேரத்திற்கு இருப்பதை அப்படியே நேரடியாக தந்துவிடும். அவை ப்ரோகிராம் செயலிகள். அவற்றிற்கு அறிவு கிடையாது. சாஸ்திர நுட்பம் தெரியாது. இதனால்தான் வாக்கு சித்தி உடைய, பாரம்பரிய ஜோதிடசாஸ்திர நுணுக்கங்களை அறிந்த ஜோதிடர் மூலமாக கையால் ஜாதகம் எழுத வேண்டும். இந்த சாஸ்திர நுணுக்கங்கள் யாவும் பாரம்பரிய ஜோதிட மூலநூல்களில் விபரிக்கப்பட்டுள்ளது. எனவே அவற்றை பின்பற்றுவோர் பெரும்பாலும் வாக்கிய ஜோதிடர்களாகவே இருப்பர். எது எப்படி இருந்தாலும் கையால் எழுதி கணிக்கப்பட்ட ஜாதகமே உகந்தது. அது வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் இருப்பதே பலன் காண்பதில் சிறப்பையும் துல்லியத்தையும் தரும். வானவியல்படியும், ஜோதிடபடியும் கிரகண அளவுகள் மாறுகின்றன. அஸ்தங்க அளவுகள் மாறுகின்றன. இந்த மாற்றத்தை வானவியல் நூல்கொண்டும் ஜோதிடநூல்கொண்டும் அறிக. (நடந்து முடிந்த கிரகணமும், நாசாவானது சூரியனிற்கு பின்சென்ற கிரகங்களின் கதிர்கள் புவிக்கு வெளிப்படாமைக்கு கூறிய பாகையும் ஜோதிடத்தில் இதே கருத்தை அஸ்தங்கம் என்று கூறும் கிரக பாகையும் வேறுவேறு. அனைத்திற்கும் விஞ்ஞானம், தொழிநுட்பம் என கத்துபவர்களே! நீங்கள் நாசாகூறும் மேற்சொன்ன அளவுகளையே எடுத்து ஜோதிடம் கூறுங்கள். ஜோதிட சாஸ்திரத்தில் கூறியுள்ள தகவல்களை எடுக்காதீர்கள்!!!) இதுமட்டமல்ல; வானவியல்பிரகாரம் உள்ள தகவல்களை முறைப்படுத்தியே ஜோதிடத்தில் பயன்படுத்த முடியும். வானவெளியில் கிரகங்கள் உள்ள மிகசரியான அளவுகளை தருகிறோம் எனும் திருக்கணித பஞ்சாங்கம் அதாவது வானவியலை அப்படியே தரும் திருக்கணித பஞ்சாங்கம் ஜோதிடத்திற்கு நேரடியாக சரிவராது. அனைத்தையும் அறிந்து தொகுத்துதந்த முன்னோர்களிற்கு இது தெரியாதா? வாக்கிய பிரகாரம் வானவியலை; கிரகதாக்கம் மனிதனில் விளைவை ஏற்படுத்தும் காலத்தில் கணித்து எடுக்கப்பட்ட வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் பலன் அறிவதே அறிவு. எத்தனையோ நபர்கள் வாக்கிய பஞ்சாங்க பிரகாரம் கணித்த ஜாதக பிரகாரம் வரும் தசாபுக்தி பலன்கள் அந்தந்த காலத்தில் அப்படியே நடப்பதை உணர்ந்து; மோகத்தால் திருக்கணித பஞ்சாங்கத்திற்கு திரும்பியவர்கள் மீண்டும் வாக்கிய பஞ்சாங்கத்திற்கு திரும்பியுள்ளனர்... பல ஜோதிடர்கள் திருக்கணித முறைக்கு மாறியதற்கு ஒரு காரணம் உண்டு. ஜாதகத்தினை ஒரு நொடியில் கணினி/கைபேசியில் போட்டு கொள்ளலாம். தசா புக்தி அந்தரம் எல்லாம் உடனடியாகவே வந்துவிடும். பேனை எடுத்து கணிக்கவேண்டிய அவசியம் இல்லை. இந்த சோம்பேறித்தனத்தாலும் பலர் திருக்கணித பஞ்சாங்க முறைக்கு மாறியுள்ளனர்... இதுவரை சரியான முறையில் வாக்கிய ஜாதகம் கணிக்கும் சாப்ட்வேர் வரவில்லை. (பல வாக்கிய சாப்ட்வேர்கள் திருக்கணித கிரகநிலைகளை வாக்கியம் என்ற பேரில் போட்டு மக்களை ஏமாற்றுகின்றது.) ஆகவே உங்களிற்காக நான் 1952 இலிருந்து 60 வருட வாக்கிய பஞ்சாங்கம் தருகிறேன். இதனை சரியாக பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள்.

1952ம் ஆண்டில் இருந்து 2011ம் ஆண்டு வரையிலான வாக்கிய பஞ்சாங்கம் என்னிடம் pdf வடிவாக உள்ளது. இது 1952-1961, 1962-1971, 1972-1981, 1982-1991, 1992-2001, 2002-2011 ஆகிய பத்து வருட பஞ்சாங்க தொகுதியாக 6 உள்ளது. ஒவ்வொரு பஞ்சாங்க தொகுதியும் 32Mb  இலிருந்து 38 Mb வரை இருக்கும். ஆறு பஞ்சாங்க தொகுதியும் (60 வருட பஞ்சாங்கம்) 200Mb வரும். இதனை நீங்கள் அனைவரும் பயன்படுத்தும் வண்ணம் எனது கணினியில் இருந்து இவற்றை எனது இந்த இணைய தளத்தில் பதிவேற்றி உள்ளேன். நீங்கள் உங்களுக்கு தேவையான பஞ்சாங்கத்தினை download செய்யும் link கீழே தந்துள்ளேன். அதில் கிளிக் செய்து உங்களிற்கு தேவையான பஞ்சாங்க தொகுதியினை அல்லது முழு தொகுதியையும் நீங்கள் download செய்து கொள்ளலாம்.

1952 இலிருந்து 1961 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1962 இலிருந்து 1971 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1972 இலிருந்து 1981 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1982 இலிருந்து 1991 வரையிலான பஞ்சாங்கம் -  Download

1992 இலிருந்து 2001 வரையிலான பஞ்சாங்கம் -  Download

2002 இலிருந்து 2011 வரையிலான பஞ்சாங்கம் -  Download

இது தவிர என்னிடம் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கமும் உள்ளது. அது பிடிஎ வடிவில் இல்லை. (என்னிடம் புத்தகமாக உள்ளது.) உங்கள் யாரிற்கேனும் 1951ம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கம் தேவை என்றால் கமெண்ட் செய்யுங்கள். நான் அதனை ஸ்கேன் எடுத்து அல்லது போட்டோ எடுத்து உங்களிற்கு அனுப்பி வைக்கின்றேன்.

ஜாதகம் எழுத, பலன் பார்க்க, திருமண பொருத்தம் பார்க்க மற்றும் சகலவிதமான ஜோதிட ஆலோசனைகளும் தொடர்பு கொள்க;
பாரம்பரிய தெய்வீக ஜோதிடர் ஹரிராம் தேஜஸ்.
[email protected]



This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

பழமையான வாக்கிய பஞ்சாங்கங்கள் PDF வடிவில்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×