Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சூரியசந்திரர்க்கு மட்டும் ஏன் ஒருவீடு - ஆய்வு கட்டுரை.


அனைவருக்கும் வணக்கம்.

தந்தைகாரகன் சூரியன், தாய்காரகன் சந்திரன். ஒருவரிற்கு ஒருதாய்தந்தை மட்டுமே இருக்க முடியும். ஆகவே சூர்யசந்திரர்க்கு மட்டும் ஒருவீடு என்று சிலரால் கூறப்படுகிறது. இங்கு தாய், தந்தை எனும் அந்தஸ்து பெறும் கிரக காரகத்திற்கும் அவர்கள் உரிமைபெறும் ராசிகளிற்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை... இதுபோன்ற மேலோட்டமான கருத்துக்களையும் கிரகங்கள் இரு வீடு பெற்ற கதைகளையும் கேட்டிருப்போம்... ஆனால் எனது இந்த பதிவிலுள்ள எண்ணங்களானது வானவியலை அடிப்படையாக கொண்டு உண்மையான காரணத்தை அறிய வேண்டிய முயற்சியின் தேடலாக அமைகிறது...

ஒளிகிரகங்களான சூரியன், சந்திரனிற்கு தலா ஒரு வீடுகள். ஏனைய தாராகிரகங்கள் எனப்படும் புதன், சுக்கிரன், செவ்வாய், வியாழன், சனி சுயமாக ஒளிர்வதில்லை. இவை சூரியனின் ஒளியை உள்வாங்கி பிரதிபலிக்கின்றன... வானவெளியில் உள்ள பல கிரகங்களிற்கு உபகோள்கள் உள்ளன. அதில் நாம் வசிக்கும் புவியின் உபகோளான சந்திரன் புவிக்கு மிக அருகில் உள்ளது. இதன் ஒளி எனும் கதிர்வீச்சு மனிதர்களிலும் கடல், தாவரம், சமநிலை என புவியின் பல்தரப்பட்ட வஸ்துக்களிலும் செல்வாக்கு செலுத்துகிறது என்பது ஜோதிடத்தை ஏற்றுக்கொள்ளாத மனிதர்கள் கூட அறிவர்... எனவே பூமியில் வசிக்கும் நாம் கிரககதிர்வீச்சு என பார்க்கும்போது சூரியனை அடுத்து சந்திரனே முக்கியத்துவம் உடையதாக உள்ளது. அவ்வாறான சந்திரன் சூரியஒளியில் (மட்டும்) ஒளிர்கிறது.

பூமியில் வசிக்கும் எமது நிலையை கருத்தில் கொண்டு பார்க்கும் போது சூரிய, சந்திர ஒளியை பிரதிபலிக்கும் கிரகங்களிற்கு தலா இரண்டு வீடுகளை நமது முன்னோர்கள் அமைத்து கொடுத்துள்ளனர். எத்தனை ஒளிர்வுகிரகங்களின் ஒளியை ஒரு பருப்பொருள் மீது பிரதிபலிக்கின்றதோ அந்த பருப்பொருளை மையமாக வைத்து எடுக்க வேண்டும். எத்தனை ஒளிர்வை பிரதிபலிக்கின்றதோ அத்தனை வீடுகளாக எடுக்கலாம். சூரியன் சுயமாக ஒளிர்கிறது. சந்திரன் சூரியனின் ஒளியில் மட்டும் ஒளிர்கிறது. ஆகவே இருவருக்கும் தலா ஒருவீடுகள் சொந்தமாக உள்ளது. ஏனைய கிரகங்கள் அப்படியல்ல. அவை சூரிய, சந்திர ஒளியில் ஒளிர்கின்றன. எனவே அவை இருவீடுகளிற்கு உரிமை பெறுகின்றன (நாம் பூமியில் இருப்பது கிரக கதிர்களை கணிப்பதால் சந்திரஒளியில் கிரக பிரதிபலிப்பியல்பு உள்ளது.) ஏனைய கிரகங்கள் சந்திரனின் சொந்தவீடான கடகத்திலிரும் சூரியனின் சொந்தவீடான சிம்மத்திலிருந்தும் வரிசையாக தலா ஒரு வீடுகளை கொண்டமையிலிருந்து இதனை உறுதிப்படுத்தலாம். சந்திரஒளிக்கு; நீச்ச கிரகங்கள் கேந்திரத்தில் அதன் நீச்சம் பங்கமடைவதிலிருந்து புவிக்கு அருகில் உள்ள சந்திரனின் ஒளியின் மகத்துவத்தினை நாம் உணர முடியும்.


பூமியின் உபகோள் சந்திரன் போன்று சனியின் உபகோள் குளிகன். இது புவியின்
நேரடியான ஆளுகைக்குட்படாமையால் ஏனைய கிரகங்களின் உபகோள்களிற்கு ஜோதிடத்தை பொருத்தவரை சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. ராகுகேதுக்கள் உண்மையில் நாம் நினைப்பதுபோல தொட்டு உணரக்கூடிய திடமான (பருப்பொருளான) கிரகங்கள் அல்ல. அவை சூரியசந்திரரின் நிழல்கள். ஒளியை முன்னிறுத்து பார்க்கும்போது ராகுகேதுக்கள் சூரிய அல்லது சந்திர ஒளியை பிரதிபலிப்பதில்லை. ஆகவே அவைகளிற்கு சொந்தவீடுகள் ஒதுக்கப்படவில்லை. நிழல் கிரகங்கள் எனும் ரா/கே இருள் எனும் விரும்பத்தகாத இயல்பால் ஜாதகரை பாதிக்கிறது. ஒரு எளிய உதாரணமாக கடவுள் எனும் ஒளி இருக்கும் இடத்தில் தீயசக்தி(பேய்பிசாசு) எனும் இருள் இருப்பதில்லை. இதனை கடவுள் எனும் ஒளி இல்லாத இடத்தில் தீயசக்தி எனும் இருள் இருக்கும் என அறியலாம். இதுவே ராகுகேது பலன்தரும் முறையாகும். எனவேதான் ஒளிகிரகங்களான சூரிய சந்திரர்க்கு இருளெனும் இவை கடும் பகையாக கருதப்படுகிறது... சிலரிற்கு பகல் உத்தமம், சிலரிற்கு இருளே உத்தமம் என்ற அடிப்படையில் ரா/கே நன்மை தரும் அமைப்பில் உள்ள போது நன்மைசெய்துவிடுகிறது... ராகுகேது பற்றி மேலும் விபரித்தோமேயானால் அது இக்கட்டுரையின் தலைப்பை திசைமாற்றகூடும் என்பதனால் இத்துடன் இக்கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

ஜோதிடத்தை பொறுத்தவரை திருவருளும் குருவருளும் கைகூடி சிறிது நேரமெடுத்து சிந்தித்தோமானால் பல அற்புதமான விளக்கங்களும் குழப்பங்களும்? (அதற்கு தீர்வுகளும்) வருவதாலேயே ஜோதிடம் கடலாக உள்ளது போலும்... பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...
உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  [email protected]
இவன்;
ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.



This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

சூரியசந்திரர்க்கு மட்டும் ஏன் ஒருவீடு - ஆய்வு கட்டுரை.

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×