Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வலுவிழந்த ஜாதகம்


அனைவருக்கும் வணக்கம்.

இருதினங்கள் முன்பு என்னிடம் பலன் அறிய வந்த ஜாதகம். தற்போதுதான் நேரம் கிடைத்து கணித்துகொண்டு இருக்கின்றேன். இந்த ஜாதகத்தில் ஒரு சூட்சுமம் உள்ளது. அதனை இங்கு பகிர்கிறேன்.... (தேவையான தகவல்களை மட்டும் கொடுத்துள்ளேன். ஏனெனில் ஜாதகம் பார்க்க தந்தவரின் அனுமதி இன்றி அவர் ஜாதகத்தினை இங்கு பொதுவாக பதிவிட முடியாது...)

தனுசு லக்கினம், மீனராசி. குரு 4ல் கேந்திரபலம் பெற்று அஸ்தமனமாகி அம்சத்தில் துலாத்தில். கூடவே ராகுவால் சூரியன், சந்திரன், குரு என மூவரும் கிரகணம்... புதன் கும்பத்தில்.

• ஜாதகம் சரிபார்த்தாயிற்று...

• லக்ன, ராசி திருத்தம் செய்தாயிற்று...

• லக்கினம், ராசி இரண்டும் முற்றாக பலமிழந்துள்ளது...

• இப்போது லக்கினத்தினையோ அல்லது சந்திரலக்கினத்தையோ முன்னிறுத்தி பலன் கூற முடியாது.

பின்னர் எப்படித்தான் பலன் அறிவது என நீங்கள் கேட்பது புரிகிறது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜாதகர் கேட்ட கேள்விக்குரிய காரகனை மையமாக வைத்து பலன் அறிய வேண்டும் என்று பாரம்பரிய ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.

உதாரணமாக; இந்த நபர் சொத்து பற்றி கேள்விகேட்டுள்ளார். இங்கு செவ்வாய் நிற்குமிடத்தை லக்கினமாக கொண்டு ஜாதகரின் கேள்விக்கு பலன் உரைக்க வேண்டும் என்கிறது பிருகத்ஜாதகம். ஆனால் பலர் ஜோதிட மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுவதில்லை. எடுத்தவுடன் லக்கினத்தினை மையமாக வைத்து பலன் கூற தொடங்கி விடுகிறார்கள். இவர்களது பலன் ஒருகாலமும் குறித்த ஜாதகருக்கு பொருந்தாது... இதனாலேயே “எந்த ஜோதிடர் சொல்வதும் எமக்கு பலிக்கவில்லை” என்று மக்கள் புலம்புகின்றனர். ஆகவே ஜோதிடம் கற்பவர்களே! மற்றும் நவீன?கணினி ஜோதிடர்களே! கணினியை ஒதுக்கி பேனா எடுத்து கணிதம் போட்டு ஜாதகத்தினை சரிபார்த்து ஜாதக திருத்தங்களை முறையாக மேற்கொண்டு அதன்பின் மூலநூல்களில் கூறப்பட்ட விதிகளை அனுசரித்து பலன் கூறுங்கள்... இதுவே உங்களை நாடி வரும் மக்களுக்கு நீங்கள் செய்யும் உதவி... அதேபோல ஜோதிடம் பார்க்கும் மக்களே! அதிக கட்டணம் வாங்குபவர், Appointment  கொடுப்பவர்தான் சிறந்த ஜோதிடர் என எண்ணி செல்லாமல் முதலில் அந்த ஜோதிடர் ஜோதிடத்தினை தெளிவாக கற்று உணர்ந்தவரா என அறியுங்கள். பரிஹாரம் எனும் பெயரில் ஆயிர கணக்கில் வசூலிப்பவர்களை தவிருங்கள். வாக்கிய ஜாதகத்தினையே வைத்திருங்கள். திருக்கணித ஜாதகம்/ கம்பியூட்டர் ஜாதகம் எல்லாம் சரிவராது. வாக்கிய பஞ்சாங்க ஜாதகம் பற்றிய ஒரு கட்டுரையினை அடுத்த பதிவில் பார்ப்போம்...

ஜோதிடம் கற்பவர்கள், ஜோதிடர்களிற்கு சில பொறுப்புணர்ச்சிகள் வேண்டும்...

* ஜோதிடம் கற்றவுடன் தம் திறமை என்பதை துறந்து; தாம் கற்றவையாவும் எம் ஜோதிட மூலநூல்களிலேயே உள்ளது என்றும் அவற்றை அருளிய ரிஷிகளும் நம் முன்னோர்களும் நமக்காக விட்டுச்சென்ற ஆசீர்வாதம் எனவும் எண்ண வேண்டும்.

* எந்த ஜோதிடகலையாயினும் அவ்வவ் மூலநூல்களில் தரப்பட்ட விதிகளை, விளக்கங்களை அவமதிப்பது குற்றம் என்பதைவிட துரோகம் எனும் சொல்லே மிக பொருத்தமானது...

* ஜோதிடம் வளர உதவி செய்ய வேண்டும். அதனை சரியான முறையில் எடுத்து செல்ல வேண்டும். சமூகத்தில் ஜோதிடத்தின் புகழை உயர்த்த வேண்டும்.

* ஜோதிடம் கற்பவர் ஒரு அன்னப்பறவை போல இருக்க வேண்டும். குருவை மனதில் சுமந்து பல ஜோதிட தகவல்களை பல இடங்களில் படித்தாலும் பாலையும் நீரையும் பிரித்து பாலை அருந்துவதுபோல சரியான தகவல்களை மட்டும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்.

* அடிப்படை ஜோதிடம் கற்பவர்கள் மக்கள் கேட்கும் சில சென்சிடிவ்வான கேள்விகளிற்கு பதில் அளிப்பதை தவிர்க்க வேண்டும். மேலும் மக்களின் ஜாதகங்களிற்கு பலன்கூறி தம்மறிவை வளர்க்க நினைப்பது தப்பு. அது மக்களை பாதிக்கும். ஆகவேதான் குருமூலமாக கற்க கூறுவது... இவர்கள் ஜோதிடர்கள் கூறும் பதிலை/பலனை வைத்து தம் அறிவை உயர்த்தி கொள்ளலாம்.

* இறைவனிற்கு பணிந்து, ஆன்மீகத்துடன் தன்னை இணைப்பவராக ஒரு ஜோதிடர் இருக்க வேண்டும். புண்ணிய பலன்களை தேடுபவராக இருக்க வேண்டும்...

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  [email protected]

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.



This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

வலுவிழந்த ஜாதகம்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×