Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இருவித பஞ்சாங்கங்கள்



அனைவருக்கும் வணக்கம். கன்னி ராசியில் செவ்வாய் நட்பா பகையா என்று ஒருவர் கேட்டார். அதற்கு “வாக்கியப்படி நட்பு, திருக்கணித படி பகை.” என்று கூறியிருந்தேன்... வாக்கிய பஞ்சாங்கம் சரியா திருக்கணித பஞ்சாங்கம் சரியா? இதற்கு யாராலும் முடிவுகாண முடியவில்லை...
ஜோதிட சாஸ்திரத்தை எமக்கு அருளிய மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளை அடுத்த எமது தாத்தா, பாட்டன், முப்பாட்டன் என அனைவருமே வாக்கிய பஞ்சாங்கபடியே ஜாதகம் கணித்தனர்; பலன் கூறினர். இன்றும் அனுபவம் மிக்க வயதான ஜோதிடர்களும் , கிராமபுறங்களில் உள்ள ஜோதிடர்களும் வாக்கிய பஞ்சாங்க கணிதப்படி கணித்த ஜாதகத்தினையே பார்க்கின்றனர். அவர்களது வம்சாவழி முன்னோர்களும் அதனையே பின்பற்றி வந்தனர். அது ஒரு புறம் இருக்கட்டும்... விஞ்ஞானம் ஒன்று வந்து நன்றாக குழப்பிவிட்டு சென்றுவிட்டது... இன்று சொல்வர் நாளை இல்லையென்பர் விஞ்!ஞானிகள்.. நாம் வழிவழியாக பயன்படுத்திய எண்ணெயை பயன்படுத்தக் கூடாது என்று சொல்லிவிட்டு, இப்போது அது தான் சிறந்தது என்று சொல்லவில்லையா? அதுபோலத்தான்... 

வானவியல் (Astronomy) என்ற சொல் வேறு ஜோதிடம் (Astrology) என்ற சொல் வேறு...

வானவியலானது வானவெளியில் குறித்த நேரத்தில் கிரகங்கள் எந்ந நிலைகளில் உள்ளன என்பதை ‪#‎மட்டும்‬ காட்டும். அதனால் தான் திருகணித பஞ்சாங்கத்தினால் துல்லியமாக சூரிய கிரகண நேரத்தினை கூறமுடிகிறது...
ஆனால் ஜோதிடம் என்பது நவ கிரகங்களின் கதிர்வீச்சினால் பூமியில் ஜனித்த குழந்தையின் தாக்கத்தினை அக்குழந்தையின் இறப்புவரையான காலகட்டம் வரை கூறுவதாகும். இங்கு குழந்தை
சூரியனில் இருந்து புறப்படும் ஒளி சுமார் 8 நிமிடத்தின் பின்னரே பூமியை வந்தடைகிறது என்று படித்த ஞாபகம்.
அப்படி இருக்கும் பட்சத்தில் ஜாதகர் பிறந்தவுடன் அவனை அடையும் கதிர்கள் நிச்சயமாக 10 நிமிடத்திற்கு முன்னர் வானவெளியில் இருந்து வந்த கதிர்களேயாகும். இதனால் ஜாதகன் பிறந்த நேரத்தை ஏறத்தாள சுமார் 15 நிமிடங்கள் முன்னதாக போட்டு திருக்கணித முறையில் ஜாதககட்டம் போட ஜாதகனின் கர்ப்பசெல் இருப்பு நீக்கி ஜனனகால இருப்புதிசை சில மாதங்கள் வரை அதிகரிக்கும். அந்நேரத்தில் சந்திரன் நின்ற நட்சத்திர நாதனின் தசா ஆண்டு எண்ணிக்கைபடி ஒவ்வொரு தசாவும் ஜாதகனிற்கு வழமையாக தொடங்கவிருக்கும் தசாகாலத்திற்கும் சிலமாதங்கள் பின்னதாகவே ஆரம்பிக்கும். இது வாக்கிய பஞ்சாங்கம் மூலம் கணித்த ஜாதகத்திற்கு (சற்று) அருகில் செல்லும். அது அந்த ஜாதகரில் விளைவை ஏற்படுத்த சிலகாலம் எடுக்கும். வேறும்பல சூட்சும கணிதங்களிற்கு பிறகு இதன் நிலையானது மேலும் வாக்கிய ஜாதக அமைப்பிற்கு அருகில் கொண்டு செல்ல முடியும். இங்கு வாக்கிய பஞ்சாங்கம் ஜாதகமே வெல்கிறது. அத்துடன் இரண்டாவது கோட்பாடாக கிரக கதிர்வீச்சுக்கள் தமது பலனை எம்மில் தர நிச்சயமாக சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்.
  
எனது சிற்றறிவிற்கு தெரிந்தவரை இந்த இரு கோட்பாடுகளையும் உங்கள் முன் வைத்துள்ளேன். இது தவிர ஏராளமான பல கோட்பாடுகள் இருக்கும்.
இறுதியாக, குறிப்பிட்ட நேரத்தில் வானவெளியில் இருக்கும் கிரகநிலைகளை திருக்கணித பஞ்சாங்கம் துல்லியமாக காண்பிக்கும். அதாவது இந்த நேரத்தில் வானவெளியில் கிரகங்கள் எங்கெங்கு உள்ளன என்று காட்டும். இது வானவியல் (Astronomy) துறைக்கே அதிக பொருத்தமானது. கிரகங்களில் கதிர்கள் எம்மை வந்தடையும் நேரத்தையும் அது எம்மில் விளைவை ஏற்படுத்த எடுக்கும் நேரத்தினையும் துல்லியமாக அறிந்தே நேரடியாக ஜோதிட பலன் கூற வாக்கிய பஞ்சாங்கம் எமது மாமுனிவர்கள், சித்தர்கள், ரிஷிகளால் தருவிக்கப்பட்டது; ஜோதிட பலன் தசாபுக்தி அந்தர சூட்சும முறையில் துல்லியமாக கூற வாக்கிய பஞ்சாங்கம் உகந்தது என்ற என்னுடைய கருத்தை உங்கள் முன்வைத்துள்ளேன்... வாக்கியம்; வானசாஸ்திரத்தை நேரடியாக பலன்கூறும் பொருட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. எனது ஆதரவு என்றும் வாக்கியபஞ்சாங்கத்திற்கே... ஆனாலும் நேரநெருக்கடி காரணமாக திருக்கணித பஞ்சாங்க ஜாதகத்திற்கு திருக்கணித முறைப்படி பலன் கூறுவதுண்டு. வாக்கிய பஞ்சாங்கபடி கணித்த ஜாதகத்திற்கு சில விசேட விதிமுறைகள் உண்டு. அந்த உத்திகளை வாக்கிய ஜாதகத்தில் பயன்படுத்தி பலன் கூற வேண்டும். அதன்மூலமாகவே பலன் கூற வேண்டும். ஆனால் பலரோ வாக்கியஜாதகத்திற்கும் பாவகச்சக்கரம் போட்டு திருக்கணித முறையில் கையாளும் உத்திகளை கொண்டு பலன் கூறிவிடுகின்றனர்... 

பதிவை படித்து சுவைத்த நண்பர்களிற்கு நன்றி...

உங்கள் ஜாதகம் பார்க்க தொடர்புகொள்ளுங்கள் -  [email protected]

இவன்;
பாரம்பரிய வாக்கிய ஜோதிடர் & ஜோதிட ஆராய்ச்சியாளர் ஹரிராம்.



This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

இருவித பஞ்சாங்கங்கள்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×