Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அறிய வேண்டியவை-பதிவு-99


                ஜபம்-பதிவு-591
          (அறிய வேண்டியவை-99)

“இந்த உலகத்தில் உள்ள
இறந்து போன
சஷத்திரியர்களுடைய
பிணங்களின் மீதும்,.
கணவனை இழந்த
விதவைகளின்
கண்ணீரின் மீதும்
தந்தையை இழந்த
பிள்ளைகளிள்
அலறலின் மீதும்
உடல் அங்கங்களை
இழந்த வீரர்களின்
வேதனைகளின் மீதும்
அமர்ந்து கொண்டு
நான் ஆட்சி செய்ய
விரும்பவில்லை”

“உலகத்திலேயே
சிறந்த வீரர்களாக
கருதப்பட்ட பீஷ்மர்
துரோணர் கர்ணன்
ஆகியோரில்
பீஷ்மர் அம்புகளால்
காயப்படுத்தப்பட்டு
அம்புப் படுக்கையில்
படுத்துக் கொண்டு
இறப்பை எதிர்நோக்கிக்
காத்துக் கொண்டிருக்கிறார்
குரு துரோணாச்சாரியார்
மற்றும்
நண்பன் கர்ணன்
ஆகியோர் மரணத்தைத்
தழுவி விட்டனர்
இவர்கள் இல்லாத நாடு
சூன்யமான நாடு
இத்தகைய சூன்யமான
ஒரு நாட்டை
ஆள்வதற்கு யாரேனும்
விருப்பப்படுவார்களா
நான் சூன்யமாக
இருக்கும் இந்த
நாட்டை ஆள்வதற்கு
விரும்பவில்லை “

“பெரும்பான்மையான
உறவினர்கள்
கொல்லப்பட்டதும்
யானைகள் குதிரைகள்
அழிக்கப்பட்டதும்
ஆகிய பூமியை
யுதிஷ்டிரா நீயே
வைத்துக் கொள்
போரில் வீரர்கள்
கொல்லப்பட்டதும்
சிறந்த பொருள்கள்
அழிக்கப்பட்டதும்
சஷத்திரியர்கள்
சிதறிப் போனதுமாகிய
இந்த பூமியை
யுதிஷ்டிரா
நீயே வைத்துக் கொள்
நீயே ஆட்சி செய் “

“விருப்பமானவர்கள்
நம்முடைய அருகில்
இல்லாமல்
விரும்பிய வாழ்க்கையை
என்னால் அனுவிக்க
முடியாது என்பதை
உணர்ந்து கொண்டேன்
இந்த நாட்டை
நீயே வைத்துக்கொள்
நான் மான்தோலை
ஆடையாகக் கொண்டு
கானகம்
செல்லப்போகிறேன் “

யுதிஷ்டிரர் :
“துரியோதனா நீ பேசும்
வார்த்தைகளைப்
பார்க்கும் போது - நீ
சுய சிந்தனையுடன்
இருப்பதாகத்
தெரியவில்லை
புத்தி பேதலித்தவன்
போல் பேசிக்
கொண்டிருக்கிறாய்
என்ன பேசுவது என்று
தெரியாமல் உளறிக்
கொண்டு இருக்கிறாய்
என்று நினைக்கிறேன்”

“எந்த ஒன்றையும்
ஆராய்ந்து
பேசுபவனாகத்
தெரியவில்லை
உண்மை என்றால்
என்ன என்பதை
உணர்ந்து பேசுபவனாகத்
தெரியவில்லை”

“தர்மத்தைக்
கடைபிடிப்பவர்களிடம்
மோதினால் எத்தகைய
விளைவுகள் ஏற்படும்
என்பதை உணர்ந்து
பேசுபவனாகத்
தெரியவில்லை
தானமாக - நீ
உன்னுடைய பூமியைக்
கொடுத்தால் நான்
ஆள்வேன் என்று
நினைத்தாயா ?
இந்த உலகத்தில்
உள்ளவர்கள் யாராக
இருந்தாலும் அவர்கள்
எந்த ஒன்றை
தானமாகக் கொடுத்தாலும்
அதை சஷத்திரியர்கள்
வாங்க மாட்டார்கள்
என்பது உனக்குத்
தெரியாதா ?”

“உன்னுடன் போரிட்டு
உன்னை வீழ்த்தி விட்டு
கிடைக்கும் - இந்த
பூமியைத் தான் நான்
ஆள்வேனே தவிர
நீ தானமாகக்
கொடுக்கும் பூமியை
நான் ஆள மாட்டேன் “

“இப்போது ஆள்வதற்கு
பூமியையே கொடுக்க
நினைக்கும் நீ
தூதுவராக வந்த
வாசுதேவ கிருஷ்ணனிடம்
பாண்டவர்களிடமிருந்து
அபகரித்துக் கொண்ட
பாண்டவர்களுடைய
இந்திர பிரஸ்தத்தை
திருப்பித் தர மாட்டேன்
என்று ஏன் சொன்னாய் “

“முறைப்படி
பாண்டவர்களுக்கு
கிடைக்க வேண்டிய
பாதி ராஜ்ஜியத்தை
தாருங்கள் என்று
வாசுதேவ கிருஷ்ணன்
கேட்டதற்கு எதையும்
தரமாட்டேன் என்று
ஏன் சொன்னாய்”

“பாண்டவர்களுக்கு ஐந்து
கிராமங்களையாவது
கொடுங்கள் என்று
வாசுதேவ கிருஷ்ணன்
கேட்டதற்கு அதையும்
தர முடியாது என்று
ஏன் சொன்னாய்””

“அது மட்டுமல்ல
பாண்டவர்களுக்கு ஊசி
முனை இடம் கூட
தர முடியாது என்று
ஏன் சொன்னாய்”

“பாண்டவர்களுக்கு
ஊசி முனை இடம்
கூட தரமுடியாது
என்று சொன்ன நீ
இன்று உன்னுடைய
பூமியையே தானமாகக்
கொடுப்பதாகக் கூறிக்
கொண்டிருக்கிறாய்
விசித்திரமாக இருக்கிறது
உன்னுடைய வார்த்தைகள்
நினைப்பதற்கு
வேடிக்கையாக இருக்கிறது
நீ பேசும் பேச்சுக்கள்”

----------- ஜபம் இன்னும் வரும்
----------- K.பாலகங்காதரன்

----------- 09-07-2020
/////////////////////////////////

Share the post

அறிய வேண்டியவை-பதிவு-99

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×