Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பாஜக மகளிர் அணி தேசிய செயலாளராக இருந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவி


தமிழக பாஜக மகளிர் அணியின் தேசிய செயலாளராக இருந்தவர் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி. 

தற்போது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக விக்டோரியா கவுரியை நியமிக்க பரிந்துரை செய்துள்ளது உச்சநீதிமன்ற கொலிஜியம். 

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பது ' ஜிகாத்தா ' அல்லது ' கிறிஸ்துவ அமைப்புகளா ' என்ற தலைப்பிலும், இந்தியாவில் கிறிஸ்தவ அமைப்புகள் கலாச்சார படுகொலை செய்வதாகவும் வழக்கறிஞர் விக்டோரியா கெளரி பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளங்களில் உள்ளது எனவும், இப்படி வெறுப்பை தூண்டக் கூடிய நபரை நீதிபதியாக நியமிக்க கூடாது எனவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

ஏற்கனவே பிரித்த ரயில்வே கோட்டத்தை, மீண்டும் பிரிக்க கடிதம் எழுதிய பாஜக எம்எல்ஏ 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பாஜக-வின் விக்டோரியா கவுரியை நியமிக்க சென்னை நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

விக்டோரியா கெளரியை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கும் பரிந்துரையை கொலிஜியம் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஜி.ஆர் பிரசாத், வைகை, மோகன், வி.சுரேஷ், டி. மோகன், எஸ். தேவிகா, சுதா ராமலிங்கம், நந்தினி, டி. கீதா, உள்ளிட்ட 21 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

முதல்வர் சினிமாவில் நடிக்கிறாரோ?.. செல்லூர் ராஜூ

குடியரசுத் தலைவர் மற்றும் கொலீஜியத்துக்கு அனுப்பப்பட்ட மனுவில், விக்டோரியா கெளரி நீதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Former National Secretary of BJP Women's Team appointed Judge of Madras High Court


This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

பாஜக மகளிர் அணி தேசிய செயலாளராக இருந்தவருக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பதவி

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×