Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

G20 ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு, இபிஎஸ்ஸிடம் சரணாகதி அடைந்த பாஜக

அதிமுகவில் ஏற்பட்ட இபிஎஸ், ஓபிஎஸ், தினகரன், சசிகலா என்ற நான்கு கோண பிளவை ரசித்து வந்த பாஜக, அதன் மூலம் தமிழக அரசியலில், அரசியல் ஆதாயம் தேட முனைந்தது. கூகுள் தமிழ் செய்திகள்

ஆனால், தமிழக பாஜக தலைமையோ கட்சியை வளர்ப்பது பற்றி சிந்திக்காமல், டெய்ஸி, சூர்யா சிவா, காயத்ரி ரகுராம் ஆடியோ, வீடியோ என்று தமிழக மக்களுக்கு என்டேர்டைன்மென்ட் ஷோவை தொடர்ந்து அளித்து வந்தது. 

அதிமுக தலைமையை நம்பி வந்தால் பிஜேபி டெல்லி செல்லலாம் - ராஜு பாய்

இதனால் எதிர்பார்த்த அரசியல் பலன் பெரிதாக கிடைக்கவில்லை என்பதுடன், அதிமுக தொண்டர்களின் கடும் அதிருப்திக்கும் ஆளானது தமிழக பாஜக. 

நிலைமை கட்டுமீறி போவதை உணர்ந்த டெல்லி பாஜக தலைமை, அதிமுக வலிமையாக இருந்தால் தான் வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று முடிவு செய்து அதிமுக இணைப்பு முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. 

ஆனால், எடப்பாடி பழனிசாமியோ பாஜகவின் அதிமுக இணைப்பு கோரிக்கையை முற்றிலுமாக  நிராகரித்ததுடன், சென்னை வந்த அமித்ஷாவை சந்திப்பதை தவிர்த்தது டன், சந்திப்பு தேவையில்லை என்று  விமர்சனமும் பண்ணினார். மேலும் இபிஎஸ், பாஜக இல்லாமலேயே கூட்டணி அமைக்கும் முயற்சியில் இறங்கினார். 

மீண்டும் வாயில் வந்ததை உளறி சிக்கினாரா அண்ணாமலை ! 

தற்போது, தமிழகத்தில் இபிஎஸ் தலைமையிலான அதிமுக அணி தான் வலுவாக இருப்பதால், வேறு வழியின்றி பாஜக இபிஎஸ்ஸை சந்தோஷப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. 

அதன் தொடர்ச்சியாகத்தான், ஜி 20 ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள, தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது. 

Call for G20 summit, BJP surrenders to EPS



This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

G20 ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு, இபிஎஸ்ஸிடம் சரணாகதி அடைந்த பாஜக

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×