Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சீனாவை மிஞ்சும் இந்திய மக்கள் தொகை, நகரங்களை நோக்கி நகரும் மக்கள்

இந்தியாவில் மக்கள் தொகை சீரான வேகத்தில் உயர்ந்து வருகிறது. அடுத்த (2023) ஆண்டின் இறுதியில் சீனாவின் மக்கள் தொகையை, இந்தியா மிஞ்சி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

2011ல் சுமாராக 121 கோடி இருந்த இந்திய மக்கள் தொகை, 2020ல் 137 கோடியாக உயர்ந்துள்ளது என்று யுனைடெட் நேஷன்ஸ் டேட்டா சொல்கிறது. கூகுள் தமிழ் செய்திகள்

2023ல் மூளும் உலகப்போர், இருளில் மூழ்கும் உலகம் - நாஸ்டர்டாம் கணிப்பு

அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் உத்தரப் பிரதேசம் ( 23 கோடி), தொடர்ந்து மகாராஷ்டிரா( 12.5 கோடி) மற்றும் பீஹார் ( 12.5 கோடி) உள்ளது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், கிட்டத்தட்ட 35% மக்கள் இந்த மாநிலங்களில் உள்ளனர். 

குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக, வடகிழக்கு மாநிலமான சிக்கிம் ( 6.8 லட்சம்) உள்ளது. 
கடந்த 10 ஆண்டுகளில் டெல்லி மற்றும் ஹரியானா, சண்டிகர் மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துள்ளது. 

2035 ஆம் ஆண்டில், இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 42% பேர் ( 67.5 கோடி ) நகரங்களில் வசிப்பார்கள் என்று ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

உலக மக்கள் தொகை 2022 நவம்பரில் 800 கோடியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுவே 2080ல் 1000 கோடியாக உயர்ந்து, 2100 வரை அதே அளவில் நீடிக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகின் மக்கள் தொகை தற்போது ஆண்டு தோறும் சராசரியாக 1.07 % என்ற அளவில் அதிகரித்து வருகிறது. 

உலகம் முழுவதும் மனநல பிரச்சனைகளுடன் வாழும் 100 கோடி பேர்

உலகின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கையில், மூன்றில் ஒரு பங்கிற்கு சற்று குறைவான மக்கள் தொகை சீனா மற்றும் இந்தியாவில் மட்டும் இருக்கும். 

2050ம் ஆண்டு வரை அதிக மக்கள் தொகை பெருக்கத்தை கொண்ட நாடுகளாக காங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ் மற்றும் தான்சானியா ஆகிய 8 நாடுகள் இருக்கும். 

K. G. F -2, உலகம் முழுவதும் வசூல் 1200 கோடி, தமிழகத்தில் 100 கோடி

உலகளாவிய மனிதர்களின் சராசரி ஆயுள் காலம் 2019ல் 72.8 வருடங்களாக இருந்தது. இதுவே 2050ல் மரண விகிதம் குறைந்து, மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 77.2 வருடங்களாக அதிகரிக்கும் என்று தெரிகிறது

ஒவ்வொரு புதிய பிறப்பினாலும், கார்பன் புட் பிரிண்ட் (carbon footprint) அளவு புவியில் உயர்கிறது. 1960ல் இருந்ததை விட தற்போது கார்பன் டை ஆக்சைடு அளவு 18% அதிகரித்து உள்ளது. 

India's Population surpasses China's, with people moving to cities

 Tag : Tamil News World Population Day China India Mortality Life Urbanization Carbon footprint





This post first appeared on No 1 Tamil News, please read the originial post: here

Share the post

சீனாவை மிஞ்சும் இந்திய மக்கள் தொகை, நகரங்களை நோக்கி நகரும் மக்கள்

×

Subscribe to No 1 Tamil News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×