Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் - மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கீடு

மாலை மலர் 

மக்கள் நலக்கூட்டணியில் இன்று இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க.வை தங்கள் கூட்டணிக்கு இழுக்க தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நலக்கூட்டணி ஆகியவை முயற்சி செய்து வந்த நிலையில், சென்னையில் கடந்த 10-ந் தேதி நடந்த தே.மு.தி.க. மகளிர் தின பொதுக்கூட்டத்தில் பேசிய விஜயகாந்த், ‘‘சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. தனித்து போட்டி’’ என்று அறிவித்தார்.

தே.மு.தி.க. தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்த பிறகும், தி.மு.க., பா.ஜ.க., மக்கள் நலக்கூட்டணியை சேர்ந்த தலைவர்கள், தங்கள் கூட்டணிக்கு அழைப்பு விடுத்துக்கொண்டே இருந்தனர்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைவர் கருணாநிதி, பின்னர் பேட்டியளிக்கும்போது, ‘‘தி.மு.க. கூட்டணிக்கு தே.மு.தி.க. வரலாம்; இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை’’ என்று தெரிவித்தார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய மக்கள் நலக்கூட்டணி ஒருங்கிணைப்பாளர் வைகோ, ‘‘மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் கைகோர்க்க இருக்கிறார்’’ என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க. இணைவது உறுதியானது.

இதைத்தொடர்ந்து பங்குனி உத்திரமான இன்று (புதன்கிழமை) மக்கள் நலக்கூட்டணி தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், இரா.முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயகாந்தை சந்தித்து கூட்டணி தொடர்பாக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த பேச்சுவார்த்தையின்போது விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதிஷ் ஆகியோரும் உடனிருந்தனர்.

இந்நிலையில், இன்றைய பேச்சுவார்த்தையில் கூட்டணி தொடர்பாக சுமுகமுடிவு ஏற்பட்டதாகவும், மக்கள் நலக் கூட்டணியில் இணைந்துள்ள தே.மு.தி.க.வுக்கு 124 இடங்களை ஒதுக்க முடிவு செய்துள்ள மக்கள் நலக் கூட்டணி தலைவர்கள், விஜயகாந்தை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவித்துள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

110 தொகுதிகளில் மக்கள் நலக்கூட்டணியைச் சேர்ந்த இதர கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என தெரியவந்துள்ளது.

==============

மாலை மலர் 
புதன்கிழமை, மார்ச் 23, 10:59 AM IST
================

Share the post

முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் - மக்கள் நலக்கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 124 தொகுதிகள் ஒதுக்கீடு

×

Subscribe to தமிழ்ச் செய்திதாள்கள் /tamil Newspapers /tamil Epapers

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×