Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம்

ஆறுமணி அரவிந்தான வைபவ்வின் அறிமுக காட்சி சூப்பர். மாலை ஐந்தரை மணி ஆகிவிட்டால் எங்கு இருந்தாலும் வீட்டுக்கு ஓடி வந்துவிடும் வைபவக்கு மாலை ஆறுமணிக்கு மேல் கண் தெரியாது. தாத்தா கவுண்டமணியிடம் இருந்து பேரனுக்குத் தொத்திக் கொண்ட மாலை கண் நோய் வைபவை பாதிக்கிறது. வைபவக்கு பிரச்சினைக்கு ஆறு மணிக்கு மேல் பாதிப்பு  என்பதால் அவருடைய வண்டி நம்பர் கூட ஆறு தான். சைட் இன்ஜினியராக வேலை செய்யும் வைபவ் (அரவிந்த்) மீது ரிப்போர்ட்டராக இருக்கும் நாயகிக்கு (கிருத்திகா) காதல் வருகிறது. 

என்ன தான் காமெடி படமாக இருந்தாலும் வைபவின் உழைப்பு மனதை வெகுவாக கவர்கிறது, நடிப்பில் நல்ல முன்னேற்றம். இயக்குனர் சாச்சி பாராட்டுக்குரியவர். வித்தியாசமான கதை களத்தை தேர்ந்து எடுத்து குடும்பத்துடன் பார்க்க கூடிய படமாக மாற்றி தர முயன்று உள்ளார் இயக்குனர் சாச்சி. சதிஷ்ஷீன் ஒன்லைன் கவுண்டர்கள் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கின்றன. டப்பிங்கில் சில புதிய அப்டேட்டான ஒன்லைன் காமெடிகளை சேர்த்துள்ளார்.  நாயகி அழகாக இருக்கிறார். நன்றாகவும் நடித்துள்ளார். பெரிய நாயகியாக வலம் வர வாய்ப்பு உள்ளது. ஒளிப்பதிவு ஓகே ரகம். படத்தின் இசையமைப்பாளர் எந்த விதத்திலும் ரசிகர்களை திருப்திபடுத்த வில்லை. பாடல்களும் சுமார் பின்னணி இசையும் சுமார். கலக்கப் போவது யாரு சாம்பியன் குரேஷி இந்தப் படத்தில் நடித்து உள்ளார். அதே போல கேபிஒய் பாலா, என்னம்மா ராமர் என்று பல சின்னத்திரை நட்சத்திரங்கள் இருந்தும் சிரிப்பு வரவில்லை. அவர்கள் ஒரு காமெடி கூட செய்யவில்லை. 

வித்தியாசமான கதைக் களத்தில் மிக பழசான காதல் கண்றாவிகள், அரத பழசான லவ் பாட்டு, குத்துப் பாட்டு, லவ் பெயிலியர் பாட்டு என்று பழைய டெம்ப்ளேட்களை புகுத்தி படத்தை நாராசம் செய்துள்ளனர். 

” பாலும் பால்டாயிலும் ஒன்னா.,. “, ” தம்பி கொஞ்சம் ரோடு கிராஸ் பண்ணிவிட முடியுமா… நானும் அதுக்காக தான் வெயிட் பண்றேன்… “, ” இவனுங்களுக்கு இதே வேலையா போச்சு… போராட்டம் போராட்டம்னு தமிழ்நாட்ட சுடுகாடு ஆக்குறாங்க.., “, ” நண்பன்: நைட் இருந்து வேலை முடிச்சுக் கொடுத்துட்டு போங்க.. 

வைபவ்: புலி பசித்தாலும் புள்ளை தின்னாது… “, ” அண்ணி பேசிட்டு இருக்கும்போது பன்னி குறுக்க பேசக் கூடாது… ” போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. 

முதல்வன் படம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஓரின சேர்க்கையாளர்கள் போன்றவற்றை கலாய்த்தது படத்தின் மைனஸ்கள் எனலாம். கமலின் காமெடி படங்களை போல ஒரு பொய்யை சொல்லி அந்த பொய்யை சமாளிக்க பல பொய்களை சொல்லி சமாளிக்கும் டைப் காமெடி படமாக சிக்சரை தர முயன்றுள்ளனர். முயற்சி பலிக்கவில்லை என்பதே உண்மை. 

The post வைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம் appeared first on TON தமிழ் செய்திகள்.This post first appeared on Tamil News Online, please read the originial post: here

Share the post

வைபவ் நடித்த சிக்சர் திரைப்பட விமர்சனம்

×

Subscribe to Tamil News Online

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×