Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !


அந்த ஆறு நாட்கள்
பார்த்ததில் பிடித்தது.
Six days
1980ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி ஈரானைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய ஆறு பேர் லண்டனில் உள்ள ஈரானின் எம்பஸியை ஆக்ரமித்து அதிலிருந்த 26 பேரை பிணைக்கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். சலீம் என்பவரின் தலைமையில் இயங்கிய இந்தக்குழு ஈரானில் அடைபட்டிருக்கும் 91அரேபிய கைதிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும். இல்லையெனில் பிணைக் கைதிகளை ஒவ்வொருவராகக் கொல்வோம் என்று எச்சரித்தான். இந்த உண்மை நிகழ்வின் அடிப்படையில்  எடுக்கப்பட்ட படம்தான் 6 Days.
சீஃப் இன்ஸ்பெக்டர் மேக்ஸ் வெர்னன்  தலைமையில் பக்கத்துக் கட்டிடத்தில் ஒரு குழு இயங்கி சலீமிடம் தொலைபேசியில் பேச்சு வார்த்தையைத் தொடங்கினார்கள். உள்ளே இருந்த பிணைக்கைதிகளோடு அங்கிருந்த தீவிரவாதிகளுக்கும் சேர்த்து உணவினை அனுப்புகிறார் மேக்ஸ். இங்கிலாந்தின் அதிகாரிகளோடு ஒத்துழைக்க மறுத்த ஈரான் அரசாங்கம் திவீரவாதிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சம்மதிக்கவில்லை. இதற்கிடையில் அவர்களுடைய கோரிக்கை BBC -யில் ஒலி பரப்பப்பட வேண்டும் என்றும் ஒரு கோரிக்கையை வைத்தான் சலீம்.
இறுதியாக சலீம் இரண்டு பஸ்களைக் கேட்டு, அவர்களை பத்திரமாக விமானமேற்றி அனுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தான். இப்படியே நாட்கள் கடந்துபோக சுகமில்லாதிருந்த ஒரு பிணைக்கைதியை விடுதலை செய்தார்கள். ஆனால் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதற்கு மேலும் பொறுக்காத அதிரடிப்படை பின்புறமாக உள்ள கட்டிடத்திலிருந்து உள்ளே நுழைந்தார்கள். எப்படிச் சண்டையிட்டார்கள்?  பிணைக் கைதிகள் எல்லோரும் காப்பாற்றப்பட்டனரா? தீவிரவாதிகளுக்கு என்ன ஆயிற்று என்பவற்றை வெள்ளித்திரையில் அல்லது சின்னத்திரையில் காண்க.
Kate Adie
இந்த நிகழ்வு முழுவதையும் தொடர்ந்து ஒலிபரப்பிய BBC ரிப்போர்ட்டர் கேட் ஆடி (Kate Adie) இதன்பின் மிகவும் பிரபலமானார்.
இந்தப் படத்தை  பிரிட்டிஷ் - நியூசிலாந்து கூட்டுத் தலைமையில் ஜெனரல் ஃபிலிம் கார்ப்பரேஷன், xyz  ஃபிலிம்ஸ், மற்றும் நியூசிலாந்து   ஃபிலிம் கமிஷன் ஆகிய நிறுவனங்கள்  இணைந்து தயாரித்தன. நியூசிலாந்தில் நவம்பர் 2017ம் இது வெளியிடப்பட்டது. இதற்கு திரைக்கதை அமைத்தவர் கிளன் ஸ்டாண்ட்ரிங் (Glen Standring) இயக்கியவர் டோவா ஃபிரேசர் (Toa Fraser)

Mark Strong
மேக்ஸ் வெர்னன் ஆக மார்க் ஸ்ட்ராங்கும், கேட் ஆடியாக ஆபி கார்னிஷ் -ம் (Abbie Cornish) சலீமாக பென் டர்னரும் ( Ben Turner) நடித்திருக்கிறார்கள்.
இந்த மாதிரி வரலாற்று நிகழ்வுகளில் ஆர்வமுள்ளவர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழலாம்.
-முற்றும்.
 



This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

ஈரான் தீவிரவாதக்குழுவுடன் போராடிய லண்டன் போலீஸ் !

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×