Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இதய ஆரோக்கியத்திற்கான எளிய வழிகாட்டி

நமது வளர்ந்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, நொறுக்குத் தீனி பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பல்வேறு காரணிகள் உலகம் முழுவதும் மாரடைப்புகளின் அதிகரிப்புக்கு காரணமாகின்றன. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சியின்படி, மாரடைப்பு முன்பைவிட இப்போது இளம் பெண்களை அதிகம் தாக்குகிறது.

இதய ஆரோக்கியத்துக்கு 5 வழிகள்

  1. பாரம்பரிய நடைமுறைகளைப் பயன்படுத்தி வீட்டில் சமைக்கப்படும் உணவில் இருந்து நல்ல கொழுப்பு கிடைக்கிறது. நம் வீடுகளில் முன்னோர்கள் பயன்படுத்திய சமையல் முறைகள் குழந்தைப் பருவத்திலிருந்தே நம் உடலுக்குப் பழக்கப்பட்டவை. அவற்றைப் பின்பற்றுவதே சிறந்த வழி. வெலியே விற்கப்படும் விலையுயர்ந்த பொருட்கள் நல்ல கொழுப்பின் ஆதாரமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. பாரம்பரிய சமையல் முறைகளைப் பயன்படுத்துவதில் மட்டுமே நல்ல கொழுப்பு கிடைக்கிறது.
  2. டீப் ப்ரையை விட ஏர் ஃப்ரை செய்வது சிறந்தது அல்ல. சமோசாவை பொரிப்பதற்குப் பதிலாக ஏர் ஃப்ரை செய்தால், நமக்கு திருப்தி ஏற்படாது, பின்னர் அதிக சமோசாக்கள் அல்லது பிற ஆரோக்கியமற்ற நொறுக்குத்தீனிகளை உள்ளே தள்ளுவோம். பாரம்பரிய சமையல் முறைகளைப் பின்பற்றி, நாம் விரும்பும் பொருட்களைத் தயாரிக்கும்போது நம் மனநிறைவு அளவுகள் அதிகரிக்கும். உணவில் திருப்தி அடைந்து விடுவோம் என்பதால் அதிகமாகச் சாப்பிட வேண்டியதில்லை.
  3. நம் இதயத்திற்கு உடற்பயிற்சி தேவை. வாராந்திரத் திட்டத்தில் வலிமைப் பயிற்சியையும் (ஸ்டெரென்த் எக்சர்சைஸ்) சேர்க்க வேண்டும்.மனித உடல் வழக்கமான செயல்பாடு மற்றும் இயக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. உணவு உண்பது, உறங்குவது போல் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். தினமும் குறைந்தது 30 நிமிட உடற்பயிற்சி செய்யுங்கள். வாரத்தில் குறைந்தது ஒரு நாள் வலிமைப் பயிற்சி தேவை.
  4. புகையும் மதுவும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும். லைட்டான சிகரெட், நிகோடின் குறைவான சிகரெட் அல்லது உங்களுக்கு நல்லது என்று எந்த மதுபானமும் இல்லை. இது ஒரு கட்டுக்கதை. உண்மையில்,உற்பத்தியாளர்கள் வழக்கமான விளம்பரங்களுக்குப் பதிலாக ஆர்வமூட்டும் விளம்பரங்களை உருவாக்குகிறார்கள், உண்மையில், அந்தத் தயாரிப்புகள் மிகவும் தீங்கு விளைவிக்கும்.நீங்கள் உங்கள் இதயத்தை கவனித்துக்கொள்ள விரும்பினால், நீங்கள் நீங்கள் புகைபிடிக்காமல் இருப்பதே நல்லது.
  5. உங்கள் இதயத்திற்கு மோசமான 3 P: மாசுபாடு (Pollution), மோசமான நகர திட்டமிடல் (Bad City Planning), பேக்கேஜிங் உணவு (Packaged Food),முதல் பி: நாம் ஆரோக்கியமாக இருக்க மாசு அளவானது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். மாசுபாட்டைக் குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இரண்டாவது பி: நகரத் திட்டமிடல். நமது நகரம் சரியாக திட்டமிடப்படவில்லை என்றால் நாம் இயற்கைச் சூழலில் அல்லது வெளியில் உடற்பயிற்சி செய்ய முடியாது. மூன்றாவது பி: பேக்கேஜ் செய்யப்பட்ட அல்லது பதப்படுத்தப்பட்ட உணவைக் குறிக்கிறது. இவற்றை எவ்வளவு அதிகமாக சாப்பிடுகிறோமோ அவ்வளவு அதிகமாக வயிறு பெருக்கும். வயிறு எவ்வளவு அதிகமாகப் பெருக்கிதோ, அந்த அளவு இதயத்துக்குப் பிரச்சினை அதிகரிக்கும்.

போனஸ் குறிப்பு:

உங்கள் இதயம் இதமாக இருந்தால், அது ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆகவே, எந்த வெறுப்பையும் எதிர்மறை உணர்ச்சிகளையும் வைத்திருக்காதீர்கள்.


The post இதய ஆரோக்கியத்திற்கான எளிய வழிகாட்டி first appeared on .



This post first appeared on Health Care Articles For The Layperson, please read the originial post: here

Share the post

இதய ஆரோக்கியத்திற்கான எளிய வழிகாட்டி

×

Subscribe to Health Care Articles For The Layperson

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×