இடியாப்பம்- 1 பெரிய கிண்ணம்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
தேங்காய் துருவல் - 2 டேபிள் ஸ்பூன்
Related Articles
கறிவேப்பிலை - சிறிதளவு
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
இடியாப்பம் எடுத்து வைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். உளுத்தம் பருப்பை சேர்த்து லேசாக வதக்கவும்.
நறுக்கிய பச்சை மிளகாய்,வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் இஞ்சி சேர்க்கவும்.
வெங்காயம் சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
இப்போது இடியாப்பம் சேர்த்து மெதுவாக கலக்கவும்.
எலுமிச்சை சாறு மற்றும் சிறிது உப்பு சேர்க்கவும்.
இறுதியாக தேங்காய் துருவல் சேர்த்து மீண்டும் நன்கு கிளறவும்.இடியாப்பம் உப்மா தயார்.