இட்லி மாவு - 1 கிண்ணம்
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
Related Articles
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
முந்திரிப் பருப்பு - சிறிதளவு
நிலக்கடலை - ஒரு கைப்பிடி
பச்சை மிளகாய் - 1 முதல் 2 வரை
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
பூண்டு - 2
கறிவேப்பிலை - சிறிதளவு
இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு போடவும். பருப்பு சேர்த்து, பருப்பு பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும்.
பிறகு நறுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை சேர்க்கவும். இன்னும் சில நொடிகள் வறுக்கவும். இந்த மசாலாவை மாவில் சேர்க்கவும். நன்றாக கலந்து இட்லி செய்யவும்.
சட்னி, சாம்பார் அல்லது இட்லி பொடியுடன் பரிமாறவும்.