கடலை மாவு - 1 கப்
சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் - 1/4 தேக்கரண்டி
அரிசிமாவு - 1/4 தேக்கரண்டி
Related Articles
பச்சை மிளகாய் - 1
கொத்தமல்லி - சிறிதளவு
வெங்காயம் - 1
தக்காளி - 1
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 4 தேக்கரண்டி
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கவும்.ஒரு பாத்திரத்தில் கடலை மாவு , சிவப்பு மிளகாய் தூள், மஞ்சள்தூள், அரிசிமாவு, உப்பு போட்டு நன்கு கலக்கவும். தேவையான தண்ணீர் சேர்த்து தோசை மாவு போல் செய்து கொள்ளவும். பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி தழையை மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
நான்-ஸ்டிக் தவாவை சூடாக்கி, ஒரு பெரிய கரண்டி ஊற்றவும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை மேலே தூவவும். தோசையைச் சுற்றி சிறிதளவு எண்ணெய் ஊற்றி சில நிமிடங்கள் வேக வைக்கவும். அதை புரட்டி மற்றொரு பக்கத்தையும் சமைத்து அகற்றவும். தோசை தயார்,
ஏதேனும் சட்னியுடன் பரிமாறவும்.