தமிழ் பெயர் "கீரணி பழம்" அல்லது "முலாம் பழம்".
முலாம்பழங்கள் பல்வேறு அளவுகள், வடிவங்கள் மற்றும் வண்ணங்களில் கிடைக்கின்றன. முலாம்பழம் கோடைகால தாகத்தைத் தணிப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இது உடலில் வெப்பத்தை பெருமளவு குறைக்கிறது, சோர்வை நீக்குகிறது, பசியை அதிகரிக்கிறது. மேலும் இது நெஞ்செரிச்சலை போக்குகிறது மற்றும் அல்சரை குணப்படுத்த உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, பொட்டாசியம் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக கலோரிகள் குறைவாக உள்ளது.
Related Articles
சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள், மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் அல்சருக்கு ஆயுர்வேதம் பரிந்துரைக்கிறது.
இதை அப்படியே சாப்பிடலாம் அல்லது "ஜூஸ்", "மில்க் ஷேக்" "டெசர்ட்" அல்லது ஒருவர் விரும்பும் விதத்தில் சாப்பிடலாம்.
தோலை உரித்து, விதைகளை நீக்கி, சிறிய க்யூப்ஸாக நறுக்கி, சிறிது சர்க்கரையைத் தூவி, அப்படியே சாப்பிடலாம். mixi இல் அடித்து ஜூஸ் ஆக சாப்பிடலாம்