பீட்ரூட் - 1
சர்க்கரை - 5 தேக்கரண்டி
முந்திரி - சிறிதளவு
திராட்சை - சிறிதளவு
ஏலக்காய் தூள் - ½ தேக்கரண்டி
Related Articles
சோள மாவு - 1 தேக்கரண்டி
நெய் – 1 டேபிள் ஸ்பூன்
இந்த "ஸ்வீட் பச்சடி" தென்னிந்திய திருமணங்களில் தக்காளி அல்லது பீட்ரூட் அல்லது கலவையான பழங்களுடன் தயாரிக்கப்படுகிறது.
பீட்ரூட்டை கழுவி தோலை உரிக்கவும்.
கடாயில் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுக்கவும். அதே கடாயில் பீட்ரூட் துருவலைப் போட்டு ஐந்து முதல் ஆறு நிமிடங்கள் வதக்கவும். அதை ஆறவைத்து நன்றாக விழுதாக அரைக்கவும்.
ஒரு தடிமனான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை கொதிக்க ஆரம்பித்ததும் பீட்ரூட் விழுதை சேர்த்து நன்கு கிளறவும். சில விநாடிகள் கொதிக்க அனுமதிக்கவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கலந்து பீட்ரூட்டில் சேர்த்து மீண்டும் ஒரு முறை கிளறவும். மீண்டும் கொதிக்க ஆரம்பித்ததும் வறுத்த முந்திரி, திராட்சை, ஏலக்காய்த்தூள் சேர்க்கவும். நன்றாக கலக்கவும். பீட்ரூட் ஸ்வீட் பச்சடி தயார்.