குடமிளகாய் - 2
நறுக்கிய வெங்காயம் - சிறிதளவு
நறுக்கிய தக்காளி - சிறிதளவு
கடலை மாவு - 2 தேக்கரண்டி
Related Articles
சிவப்பு மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
அரிசிமாவு- 2 சிட்டிகை
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 2 முதல் 3 தேக்கரண்டி
குடமிளகாயைக் கழுவி 1/2 அங்குல அளவு வட்ட துண்டுகளாக வெட்டவும். விதைகள் மற்றும் உள் பகுதிகளை அகற்றவும். துண்டுகள் மீது சிறிது உப்பு தூவி மெதுவாக தேய்த்து தனியாக வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசிமாவு, சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள், மஞ்சள் தூள், மற்றும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு போல் மாவை உருவாக்கவும். நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளி சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
ஒரு தவாவை சூடாக்கவும். ஒரு தேக்கரண்டி எண்ணெய் தெளிக்கவும். கேப்சிகம் வட்ட துண்டுகளை தவா மீது வைக்கவும். ஒவ்வொரு துண்டுகளிலும் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் கடலைமாவை ஊற்றவும். அப்படியே இரண்டு பக்கமும் வறுத்து எடுக்கவும். குடமிளகாய் வறுவல் தயார்.