வெண்டைக்காய் – 10 அல்லது 15
வெங்காயம் - 1
தக்காளி - 1
சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
Related Articles
கொத்தமல்லி தூள் - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
சீரகம்- ½ தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
வெண்டைக்காயை 2 அங்குல துண்டுகளாக சிறிது குறுக்காக வெட்டுங்கள்.
வெங்காயம் மற்றும் தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
ஒரு தவாவில் ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெண்டைக்காய் துண்டுகளை சேர்க்கவும். தீயை மிதமாக வைத்து வறுக்கவும்.
அதே தவாவில் மீதமுள்ள எண்ணெயை போட்டு சூடானதும் கடுகு போடவும். சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வறுத்த வெண்டைக்காய் துண்டுகளை சிவப்பு மிளகாய் தூள், கொத்தமல்லி தூள், மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும். இறுதியாக தக்காளி துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒருமுறை கிளறவும். வெண்டைக்காய் வருவல் தயார்.
இது சாதம் மற்றும் சப்பாத்தியுடன் நன்றாக இருக்கும்.