பிரஞ்சு பீன்ஸ் - 200 கிராம், தேங்காய் துருவல் - 3 தேக்கரண்டி, சிவப்பு மிளகாய் - 2, ஜீரகம் - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, அரிசிமாவு - ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, பீன்ஸை 2 அங்குல நீள துண்டுகளாக நறுக்கவும். தேங்காய், சிவப்பு மிளகாய் மற்றும் சீரகத்தை விழுதாக அரைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு போடவும். கடுகு பொரிந்ததும் கறிவேப்பிலையையும் போடவும். சிறிது நேரம் வறுக்கவும். பீன்ஸ் துண்டுகளை உப்பு,அரிசிமாவு, சேர்த்து நன்கு கலக்கவும். பீன்ஸ் மீது ஒரு கைப்பிடி தண்ணீர் தெளிக்கவும். ஒரு மூடியால் மூடி, காய்கறி மென்மையாகவும், தண்ணீர் முழுவதும் உறிஞ்சப்படும் வரை சமைக்கவும். அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கவும்.பீன்ஸ் பொரியல் தயார்