பெருங்காயத்தூள் - ¼ தேக்கரண்டி ஜவ்வரிசி - 1/2 கப் தயிர் - 2 கப் எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1/2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 2 முதல் 3 கறிவேப்பிலை - சிறிதளவு கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு உப்பு - சுவைக்கேற்ப ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி ஜவ்வரிசி சேர்த்து வறுக்கவும். ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் சேர்த்து, குறைந்தது அரை மணி நேரம் ஊற வைத்து வேக வைக்கவும். பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலையை நறுக்கவும். தயிரை நன்றாக அடித்து, ஊறவைத்த ஜவ்வரிசி சேர்க்கவும். ஒரு சிறிய கடாயில் மீதமுள்ள ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கடுகு, நறுக்கிய பச்சை மிளகாய், கொத்தமல்லி மற்றும் கறிவேப்பிலை, உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கிளறி தயிருடன் கலக்கவும். ஜவ்வரிசி தயிர் பச்சடி தயார்.