Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

டிஎன்பிஸ்சி:தமிழ் அறிஞர்களும்,தமிழ் தொண்டும்-முத்துராமலிங்கதேவர்

தந்தை        : திரு:உக்கிரபாண்டித்தேவர்
தாய்            : திருமதி:இந்திராணி அம்மையார்
பிறப்பு         : 30.10.1908(திங்கள்)
இறப்பு         : 30.10.1963


*சிறு வயதிலேயே தாயை இழந்தார்.அவருடைய பாட்டியும் இஸ்லாமிய பெண் ஒருவரும் வளர்த்தனர்.
குறிப்பு:”தேசியம் காத்த செம்மல் மற்றும் டிஎன்பிஸ்சி பாடத்திட்டத்தின்படி கீழ் உள்ளவற்றில் சமுதாய தொண்டு சம்பந்தமான பகுதிகள் நன்கு படிக்கவும்

கல்வி


ஆசிரியர்        : குறைவற வாசித்தான் பிள்ளை(முத்துராமலிங்கதேவர் பாட்டியிடம் வளர்ந்தபோது)
தொடக்க        :
கல்வி            
1.கமுதி தொடக்கப் பள்ளி(கிறித்துவப் பாதிரியார்களிடம் கற்றார்)
2.பசுமலை உயர்நிலைப் பள்ளி(சில ஆண்டுகள் படித்தார்)
பத்தாம்           : வகுப்பு             ராமநாதபுரம் உயர்நிலைப் பள்ளி(ராமநாதபுரத்தில் பிளேக் பரவியது.அத்துடன் இவர் கல்வியும் நின்றது)

பொதுத் தொண்டு

  • 32 சிற்றூர்களில் இருந்த தன்னுடைய  சொந்த நிலங்களை உழவர்களுக்கும் , தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் கொடுத்தார்.
  • மேலும்(அகர வரிசையில்),
  1. ஆலய நுழைவு போராட்டம்
  2. குற்றபரம்பரை சட்டத்தில் இருந்த மக்களின் துயர் நீக்க போராடினார்
  3. சமபந்திமுறை ஆதரித்தல்
  4. நிலக்கிழார் ஒழிப்பு

நாட்டுப் பற்று மற்றும் பிற தகவல்

அரசியல் வழிகாட்டியாக கொண்டவர் பெயர் சுபாஷ் சந்திர போஸ்
வாய்ப்பூட்டு சட்டம் 1.முத்துராமலிங்கதேவர் (தென்னிந்தியா)
2.திலகர்(வட இந்தியா)
சிறப்பு பெயர் தேசியம் காத்த செம்மல்(திரு.வி.க கூறினார்)
தேர்தல் வெற்றிகள் போட்டியிட்ட 5 முறையும் வெற்றி.
1.1937
2.1946
3.1952
4.1957
5. 1962
பாராட்டப்பட்ட பெயர்கள் (அகர வரிசையில்)
1.இந்து புத்த சமய மேதை
2.சமய சான்றோர்
3.சன்மார்க்க சண்டமாருதம்
4.பிரணவ கேசரி
5.வேதாந்த பாஸ்கர்
1939 6.9.1939 அன்று போஸ் அவர்கள் தேவர் விருப்பத்திற்கிணங்க மதுரைக்கு வந்தார்
1995 முத்துராமலிங்கதேவர் அஞ்சல் தலை நடுவணரசு வெளியிட்டு சிறப்பித்தது
சொத்தை தேவர் பிரித்தல் தன் சொத்து முழுவதையும் 17 பாகம் பிரித்து,1 பாகம் மட்டும் தனக்கும்,16 பாகம் 16 பேருக்கு இனாம் சாசனமாக எழுதினார்
தேவரின் நினைவு சின்னம் தமிழக அரசு,தேவரை போற்றும் வகையில்,சென்னை மாநகரில் உருவச் சிலையும், அச்சிலை உள்ள சாலைக்கு தேவர் என சூட்டப்பட்டுள்ளது 

முத்துராமலிங்கதேவர் குறிப்பிட்டவை

சாதி பற்றி,
சாதியையும் நிறத்தையும் பார்த்து மனிதனை மனிதன் தாழ்வுபடுத்துவது பெருங்கொடுமை ;ஆண்டவன் மனித குலத்தைத்தான் படைத்தானே தவிரச் சாதியையும் நிறத்தையும் அல்ல;சாதியும் நிறமும் அரசியலுக்குமில்லை;ஆன்மிகத்திற்கும் இல்லை
இறப்பு பற்றி,
பனைமரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு.வயல் வரப்பில் வழுக்கி விழுந்து இறந்தவனும் உண்டு
வாழ்வும்,வீரமும் பற்றி,
வீரமில்லாத வாழ்வும்,விவேகமில்லாத வீரமும் வீணாகும்

தேர்வில் வெற்றி பெற,
வாழ்த்துக்கள்!!!வாழ்த்துங்கள்!!!


This post first appeared on Jobcareer Needs, please read the originial post: here

Share the post

டிஎன்பிஸ்சி:தமிழ் அறிஞர்களும்,தமிழ் தொண்டும்-முத்துராமலிங்கதேவர்

×

Subscribe to Jobcareer Needs

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×