Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

என்னை அறிந்தால்..... (SWOT)

ஒரு ஊரில் ஒரு வயதான தாத்தா இருந்தார். அவருக்கு ஒரு பேரன் இருந்தான். அவன் பெயர் குமார். அவன் மிகவும் சோம்பேறியாக இருந்தான். பலர் பல அறிவுரை சொல்லியும் கேட்காமல் இருந்தான். ஒரு நாள் அவனுடைய தாத்தா அவனைக் கூப்பிட்டு குமார் நான் உனக்கு ஒரு புராதான பொருளை பரிசாக தருகின்றேன் இதை நீ எப்பொழுதும் வைத்துக் கொள் . இதனுடைய விலை மதிப்பு 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தேரும். இது என்னுடைய தாத்தா எனக்கு பரிசாக கொடுத்தார் . இதனுடைய வயது 200 வருடங்களுக்கு மேல் இருக்கும். இது ஒரு ஐம்பொன்னால் செய்யப்பட்ட சிலை என்றார்.

காலங்கள் சென்றன பேரன் வேலைக்கு செல்லாமல் இருந்ததால் நிறைய கடன்கள் வாங்கி பண கஷ்டத்தில் மாட்டிக் கொண்டான். எனவே அவன் அந்த சிலையை விற்க முடிவு செய்தான் ஒரு அடகு கடையில் சென்று அதனை விலைக்கு எடுத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டான். அவர் அதை பரிசோதித்து விட்டு ஐந்தாயிரம் ரூபாய் எடுத்துக் கொள்வதாக சொன்னார். அவன் அதை விற்க மனம் இல்லாமல் வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தான். அதை விலை கேட்டு மற்றொருவன் வந்தான் அதனை மூன்றாயிரம் ரூபாய்க்கு எடுத்துக் கொள்வதாக கூறினான். அதைக் குமார் தர மறுத்து விட்டான். 
மறுபடியும் அடகு கடைக்கு குமார் சென்றான். அந்த ஐம்பொன் சிலையை 6000 ரூபாய்க்கு வைத்துக் கொள்ள முடியுமா என்று கேட்டான் அந்த கடைக்காரர் 5500 க்கு வைத்துக் கொள்வதாக சொல்லி இறுதியில் பெற்றுக் கொண்டார்.

நாட்கள் சென்றன தாத்தா அந்த பேரனை ஒரு நாள் சந்தித்தார் , அவனைப் பற்றி நலம் விசாரித்தார் அப்பொழுது அந்த சிலையை பற்றியும் விசாரித்தார். அவன் அதை 5500 ரூபாய்க்கு விற்று விட்டதாக கூறினான். மேலும் அந்த சிலையை உண்மையான ஐம்பொன் இல்லை என்றும் கூறினான். அதற்கு அந்த தாத்தா கூறினார் அது உண்மையில் ஐம்பொன் சிலை தான் அதனுடைய மதிப்பு 50 ஆயிரம் ரூபாய் க்கு மேல் தேறும் என்றார். 
நடந்த அனைத்தையும் குமார் அவன் தாத்தாவிடம் கூறினான். அதற்கு அந்த தாத்தா கூறினார், " இரண்டாவதாக வீட்டிற்கு வந்த நபர் அந்த அடகு கடைக்காரர் அனுப்பிய நபராக தான் இருக்க வேண்டும். குறைந்த விலைக்கு அந்த நகையை உன்னிடம் கேட்டு உன்னை ஏமாற்றி இருக்கிறார் எனவே நீயும் ஏமாந்து அதிக விலைக்கு விற்பதாக நினைத்து அடகு கடையில் சென்று அந்த ஐம்பொன் சிலையை விற்று விட்டாய்".
அதற்கு குமார் கேட்டான் இப்படித்தான் அவர்கள் அனைவரையும் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களா தாத்தா?  என்றான்.
அதற்கு தாத்தா கூறினார் "அப்படி இல்லை, தன்னிடம் இருக்கும் பொருளின் மதிப்பை அறியாதவர்களை யார் வேண்டுமானாலும் ஏமாற்றலாம். அதேபோலத்தான் தன்னிடம் இருக்கின்ற குணாதிசயங்கள்,  திறமைகள் பற்றி தானே அறியாமல் இருப்பவர்களை யார் வேண்டுமானாலும் எளிதாக ஏமாற்றலாம்" என்று கூறினார். 

இந்தக் கதையில் இருந்து நாம் தெரிந்து கொள்வது, நாம் எங்கே இருந்தாலும் நமக்கு மதிப்பு இருக்க வேண்டும் நம்மை பற்றி மற்றவர் அறிந்திருக்க வேண்டும் அதற்கு முன் நம்மைப் பற்றி நாம் அறிந்து கொண்டிருக்க வேண்டும். 
"உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம் ,உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் தலை வணங்காமல் நீ வாழலாம" திரைப்பட பாடல் இருக்கின்றது எனவே முதலில் நீங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
இதற்கு  SWOT அனலைசிஸ் உதவி செய்யும்.
S - Strength
W- Weakness
O- Opportunity
T - Thread 
என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
அதாவது முதலில் உங்களுடைய பலம் என்ன என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
அடுத்தது உங்களுடைய பலவீனம் என்ன என்ன என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
நீங்கள் முன்னேறுவதற்கு உண்டான வாய்ப்புகள் என்ன இருக்கின்றன என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
நீங்கள் முன்னேறுவதற்கு தடைக்கல்லாக என்ன இருக்கின்றன என்பதை எழுதிக் கொள்ளுங்கள்.
பலத்தையும் வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேறுவதற்கு தயாராகுங்கள். உங்களது பலவீனத்தை எவ்வாறு குறைப்பது அல்லது பலவீனத்தை எவ்வாறு பலமாக மாற்றிக் கொள்வது என்பதற்கான வரைமுறை செய்யுங்கள். உங்களுடைய வளர்ச்சிக்கு தடைக்கல்லாக எங்கள் முன்னேறுவதை இருக்கின்ற விஷயங்களை அப்புறப்படுத்துங்கள். நீங்கள் முன்னேறுவதை யாரும் தடுக்க முடியாது.
 வெற்றி நிச்சயம்.


This post first appeared on CAM Programming , Windows Tips, please read the originial post: here

Share the post

என்னை அறிந்தால்..... (SWOT)

×

Subscribe to Cam Programming , Windows Tips

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×