Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கரும்பு

கரும்பு என்பது ஒருவகைப் புல்

1. சொல் பொருள்

(பெ) 1. ஒருவகைப் புல், செங்கரும்பு.

2. சொல் பொருள் விளக்கம்

சர்க்கரை உற்பத்தி செய்யப் பயன்படும் ஒரு தாவரமாகும். இது வெள்ளை, மஞ்சள், சிவப்பு, ஊதா என நிறத்தை அடிப்படையாகக் கொண்டு நான்கு வகைப்படும்.

மொழிபெயர்ப்புகள்

Englishsugarcane, Sugar cane العربية: قصب السكر المخزني مصرى: قصب السكر المخزنى azərbaycanca: Şəkər qamışı تۆرکجه: شکر قامیشی Basa Bali: Tebu български: обикновена захарна тръстика bosanski: Šećerna trska català: Canya de sucre čeština: Cukrová třtina kaszëbsczi: Cëkrowô strzëna dansk: Almindelig sukkerrør Deutsch: Zuckerrohr Ελληνικά: Ζαχαροκάλαμο Esperanto: Sukerkano eesti: Suhkruroog euskara: Azukre-kanabera فارسی: نیشکر suomi: Sokeriruoko Nordfriisk: Sokerröör galego: Cana de azucre Avañe’ẽ: Takuare’ẽ

hrvatski: Šećerna trska hornjoserbsce: Prawa cokorina Kreyòl ayisyen: Kann հայերեն: Շաքարեղեգ 日本語: サトウキビ ქართული: შაქრის ლერწამი 한국어: 사탕수수 Limburgs: Sókkerreet македонски: шеќерна трска кырык мары: Сакыр шуды Nederlands: Suikerriet norsk nynorsk: Sukkerrøyr ирон: Сæкæры хъæз polski: Cukrowiec lekarski, Trzcina cukrowa pinayuanan: tjevus Runa Simi: Misk’i wiru română: Trestie de zahăr русский: Сахарный тростник ᱥᱟᱱᱛᱟᱲᱤ: ᱟᱸᱠ slovenčina: Cukrová trstina slovenščina: Sladkorni trs shqip: Kallam Sheqeri svenska: Sockerrör தமிழ்: செங்கரும்பு తెలుగు: సెకారం అఫిష్ననారమ్ ไทย: อ้อย lea faka-Tonga: Tō Türkçe: Şeker kamışı reo tahiti: Tō українська: цукровий тросник 粵語: 蔗 中文: 秀貴甘蔗 中文(臺灣): 秀貴甘蔗

கரும்பு

3. ஆங்கிலம்

Saccharum officinarum, Linn.,

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

சொல்ல பயன்படுவர் சான்றோர் கரும்பு போல்
கொல்ல பயன்படும் கீழ் - குறள் 108:8

கரும்பில் கொண்ட தேனும் பெரும் துறை - புறம் 42/15

அறை கரும்பின் அரி நெல்லின் - பொரு 193

கரும்பின் தீம் சாறு விரும்பினிர் மிசை-மின் - பெரும் 262

கரும்பின் எந்திரம் கட்பின் ஓதை - மது 258

கார் கரும்பின் கமழ் ஆலை - பட் 9

உரு கெழு கரும்பின் ஒண் பூ போல - பட் 162

கழை கண் உடைக்கும் கரும்பின் ஏத்தமும் - மலை 341

இரும் பன் மெல் அணை ஒழிய கரும்பின்/வேல் போல் வெண் முகை விரிய தீண்டி - நற் 366/7,8

கனைத்த கரும்பின் கூம்பு பொதி அவிழ - குறு 35/3

தேம் பொதி கொண்ட தீம் கழை கரும்பின்/நாறா வெண் பூ கொழுதும் - குறு 85/4,5

வான் பூ கரும்பின் ஓங்கு மணல் சிறு சிறை - குறு 149/3

அறை மடி கரும்பின் கண் இடை அன்ன - குறு 180/3

ஒருங்கு உடன் இயைவது ஆயினும் கரும்பின்/கால் எறி கடிகை கண் அயின்று அன்ன - குறு 267/2,3

பூத்த கரும்பின் காய்த்த நெல்லின் - ஐங் 4/4

கரை சேர் வேழம் கரும்பின் பூக்கும் - ஐங் 12/1

கரும்பின் அலமரும் கழனி ஊரன் - ஐங் 18/2

கரும்பின் எந்திரம் களிற்று எதிர் பிளிற்றும் - ஐங் 55/1

கரும்பின் பாத்தி பூத்த நெய்தல் - பதி 13/3

விரி பூ கரும்பின் கழனி புல்லென - பதி 13/13

அறை-உறு கரும்பின் தீம் சேற்று யாணர் - பதி 75/6

ஏக்கழுத்து நாணான் கரும்பின் அணை மென் தோள் - பரி 7/55

தீம் கண் கரும்பின் கழை வாங்கும் உற்றாரின் - கலி 40/28

இலங்கு பூம் கரும்பின் ஏர் கழை இருந்த - அகம் 13/22

நீடு கழை கரும்பின் கணை கால் வான் பூ - அகம் 217/4

கிளை விரி கரும்பின் கணை கால் வான் பூ - அகம் 235/12

இரும் கதிர் அலமரும் கழனி கரும்பின்/விளை கழை பிழிந்த அம் தீம் சேற்றொடு - அகம் 237/11,12

கழனி கரும்பின் சாய் புறம் ஊர்ந்து - அகம் 306/6

மென் கழை கரும்பின் நன் பல மிடைந்து - அகம் 346/7

ஆய் கரும்பின் கொடி கூரை - புறம் 22/15

பூ கரும்பின் தீம் சாறும் - புறம் 24/13

புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரை - புறம் 28/12

ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் - புறம் 35/10

கழை கரும்பின் ஒலிக்குந்து - புறம் 137/6

கரும்பின் எந்திரம் சிலைப்பின் அயலது - புறம் 322/7

அறை கரும்பின் பூ அருந்தும் - புறம் 384/3

வயலே நெல்லின் வேலி நீடிய கரும்பின்/பாத்தி பன் மலர் பூ ததும்பின - புறம் 386/10,11

ஒய்யும் நீர் வழி கரும்பினும்/பல் வேல் பொறையன் வல்லனால் அளியே - பதி 87/4,5

கரும்பு உடை தோளும் உடையவால் அணங்கே - நற் 39/11

கரும்பு உடை பணை தோள் நோக்கியும் ஒரு திறம் - நற் 298/7

கரும்பு மருள் முதல பைம் தாள் செந்தினை - குறு 198/2

கரும்பு நடு பாத்தி அன்ன - குறு 262/7

உழுந்து உடை கழுந்தின் கரும்பு உடை பணை தோள் - குறு 384/1

கரும்பு நடு பாத்தியில் கலித்த ஆம்பல் - ஐங் 65/1

கரும்பு குணிலா மாங்கனி உதிர்க்கும் - ஐங் 87/2

காலம் அன்றியும் கரும்பு அறுத்து ஒழியாது - பதி 30/14

கரும்பு அமல் கழனிய நாடு வளம் பொழிய - பதி 50/3

கரும்பு கவழம் மடுப்பார் நிரந்து - பரி 19/34

கரும்பு கருமுக கணக்கு அளிப்போரும் - பரி 19/39

கரும்பு எழுது தொய்யிற்கு செல்வல் ஈங்கு ஆக - கலி 63/8

கரும்பு எல்லாம் நின் உழவு அன்றோ ஒருங்கே - கலி 64/14

தெரி வேய் தோள் கரும்பு எழுதி தொய்யில் செய்தனைத்தற்கோ - கலி 76/15

நடாஅ கரும்பு அமன்ற தோளாரை காணின் - கலி 112/6

அன்று தான் ஈர்த்த கரும்பு அணி வாட என் - கலி 131/29

பெய் கரும்பு ஈர்க்கவும் வல்லன் இள முலை மேல் - கலி 143/32

ஆய் கரும்பு அடுக்கும் பாய் புனல் ஊர - அகம் 116/4

காஞ்சியின் அகத்து கரும்பு அருத்தி யாக்கும் - அகம் 156/6

கரும்பு அமல் படப்பை பெரும் பெயர் கள்ளூர் - அகம் 256/15

கரும்பு என கவினிய பெரும் குரல் ஏனல் - அகம் 302/10

கரும்பு அல்லது காடு அறியா - புறம் 16/15

அரும் பெறல் மரபின் கரும்பு இவண் தந்தும் - புறம் 99/2

கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே - புறம் 392/21

எல்லா நல் தோள் இழைத்த கரும்புக்கு நீ கூறு - கலி 64/19

ஆலைக்கு அலமரும் தீம் கழை கரும்பே/புயல் புனிறு போகிய பூ மலி புறவின் - மலை 119,120

ஓங்கு நிலை கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த - முல் 32

வெண் பூ கரும்பொடு செந்நெல் நீடி - பட் 240

தீம் கரும்போடு அவல் வகுத்தோர் - பொரு 216

பெரும் பொய் உரையாதி பாண கரும்பின்
கடை கண் அனையம் யாம் ஊரற்கு அதனால் - நாலடி:39 10/2,3

கரும்பின் கோது ஆயினேம் யாம் - திணை50:39/4

கடித்து கரும்பினை கண் தகர நூறி - நாலடி:16 6/1

சிறை இல் கரும்பினை காத்து ஓம்பல் இன்னா - இன்னா40:5/1

பெரும் பயனும் ஆற்றவே கொள்க கரும்பு ஊர்ந்த - நாலடி:4 4/2

கரும்பு ஆட்டி கட்டி சிறு காலை கொண்டார் - நாலடி:4 5/1

கரும்பு ஆர் கழனியுள் சேர்வர் சுரும்பு ஆர்க்கும் - நாலடி:13 2/2

நுனியின் கரும்பு தின்று அற்றே நுனி நீக்கி - நாலடி:14 8/2

தீம் கரும்பு ஈன்ற திரள் கால் உளை அலரி - நாலடி:20 9/1

குருத்தின் கரும்பு தின்று அற்றே குருத்திற்கு - நாலடி:22 1/2

இரும் கோட்டு மென் கரும்பு சாடி வரும் கோட்டால் - திணை150:137/2

சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய் பைம் கரும்பு
மென்றிருந்து பாகு செயல் - பழ:289/3,4

நிலத்துக்கு அணி என்ப நெல்லும் கரும்பும்
குளத்துக்கு அணி என்ப தாமரை பெண்மை - நான்மணி:9/1,2
செங்கரும்பு
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து - புகார்:10/82

கழனி செந்நெல் கரும்பு சூழ் மருங்கின் - புகார்:10/112

தீம் கரும்பு நல் உலக்கை ஆக செழு முத்தம் - வஞ்சி:29/177

கரும்பும் வல்லியும் பெரும் தோள் எழுதி - புகார்:2/29

ஐவன வெண்ணெலும் அறை கண் கரும்பும்
   கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் - மது: 11/80,81

காயமும் கரும்பும் பூ மலி கொடியும் - வஞ்சி:25/45

காசு அறு விரையே கரும்பே தேனே - புகார்:2/74

கரும்பு உடை தட கை காமன் கையற - மணி:23/27

பூ கொடி வல்லியும் கரும்பும் நடு-மின் - மணி:1/47

நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் - மணி:6/41

கரும்பார் தீம் சொல்லினாய் காணார்-கால் கேள்வர் - சிந்தா:3 734/4

வயல் வளர் கரும்பில் பாயும் மகதநாடு என்பது உண்டே - சிந்தா:13 3042/4

நீள் கழை கரும்பின் நெற்றி நெய்ம் முதிர் தொடையல் கீறி - சிந்தா:5 1198/2

ஆலை கரும்பின் அக நாடு அணைந்தான் - சிந்தா:7 1613/4

கரும்பின் மேல் தொடுத்த தேன் கலி கொள் தாமரை - சிந்தா:8 1936/1

வேய் நிற கரும்பின் வெண் நிற பூ போல் மிடைந்து ஒளிர் குந்தமும் வாளும் - சிந்தா:10 2158/1

கணை நிலை கரும்பினில் கவரும் பண்டியும் - சிந்தா:1 61/3

தேன் கண கரும்பு இயல் காடும் செந்நெலின் - சிந்தா:1 54/2

கரும்பு கண் உடைப்பவர் ஆலை-தோறெலாம் - சிந்தா:1 60/1

கரும்பு ஆர் தோள் முத்தம் கழன்று செ வாய் விளர்த்து கண் பசலை பூத்த காமம் - சிந்தா:1 231/1

கரும்பு உடை காளை அன்ன காளை நின் வலைப்பட்டு என்றான் - சிந்தா:1 401/4

தீம் கரும்பு எருத்தில் தூங்கி ஈ இன்றி இருந்த தீம் தேன் - சிந்தா:3 712/1

கழை முற்று தீம் தேன் கரும்பு ஆர் வயல் ஐந்து மூதூர் - சிந்தா:4 1064/3

கரும்பு எறி கடிகையோடு நெய் மலி கவளம் கொள்ளாது - சிந்தா:4 1076/2

கொண்டு உலப்ப அரிய செந்நெல் கொடி கரும்பு உடுத்த வேலி - சிந்தா:5 1184/3

கை வளர் கரும்பு உடை கடவுள் ஆம் எனின் - சிந்தா:5 1263/1

கரும்பு அணி வள வயல் காமர் தாமரை - சிந்தா:6 1442/1

கழை கரும்பு எறிந்து கண் உடைக்கும் எந்திரம் - சிந்தா:7 1614/2

தீம் கரும்பு அனுக்கிய திருந்து தோள்களும் - சிந்தா:8 1942/1

தீம் கரும்பு மென்று அனைய இன் பவள செ வாய் - சிந்தா:9 2034/3

மா மணி மகரம் அம்பு வண் சிலை கரும்பு மான் தேர் - சிந்தா:9 2057/3

கள் நக்க கண்ணி கமழ் பூம் குழல் கரும்பு ஏர் தீம் சொலாள் கதிர் முலைகளின் - சிந்தா:9 2066/1

காய் தெங்கு சூழ்ந்த கரும்பு ஆர் தம் பதிகள் புக்கார் - சிந்தா:11 2348/3

கரும்பு அலால் காடு ஒன்று இல்லா கழனி சூழ் பழன நாடும் - சிந்தா:13 2902/1

கரும்பு என திரண்ட தோள் கால வேல் கணீர் - சிந்தா:13 2935/4

தூம்பு ஆர் நெடும் கைம்மா தீம் கரும்பு துற்றாவாய் - சிந்தா:13 2980/2

கரும்பு எறி கடிகை போன்றும் கதலிகை போழ்கள் போன்றும் - சிந்தா:13 3078/1

வீணையும் குழலும் பாலும் அமுதமும் கரும்பும் தேனும் - சிந்தா:6 1500/1

அருவி ஐவனம் கரும்பும் அடக்கரும் கவை கதிர் வரகும் - சிந்தா:7 1561/3

கரும்பும் தேனும் அமிழ்தும் பாலும் கலந்த தீம் சொல் மடவாட்கு - சிந்தா:12 2438/1

கரும்பே தேனே அமிர்தே காமர் மணி யாழே - சிந்தா:12 2453/1

கவழம் ஆர் களிறு போன்றான் காதலி கரும்பை ஒத்தாள் - சிந்தா:1 191/2

கடி நல கரும்பொடு காய் நெல் கற்றையின் - சிந்தா:1 81/1

நெட்டு இரும் கரும்பொடு செந்நெல் மேய்ந்து நீர் - சிந்தா:8 1938/3

கரும்பொடு காய் நெல் துற்றி கருப்புர கந்தில் நின்ற - சிந்தா:12 2522/2
உடை கரும்பின் சுவையினும் இனிய கட்டுரை நெறி கலிமாவை - சீறா:1448/2

ஆலை வாய்-தொறும் கரும்பு உடைத்து ஆறு எடுத்து ஓடும் - சீறா:74/3

கரும்பு எனும் மொழி அனார் காளைமாருடன் - சீறா:315/3

கனி பல அருந்தி துண்ட கரும்பு அடு சாறு தேக்கி - சீறா:806/1

நெடிய பச்சிலை கரும்பு உடை கழனியும் நிறைந்த - சீறா:858/3

தறித்த பூம் கரும்பு ஆட்டு சாறு அடு புகை தயங்கி - சீறா:864/2

கரும்பு என தோன்றி செம்பொன் கதிர் உமிழ்ந்திருந்த கொம்பே - சீறா:1043/1

பூ நறும் கரும்பு என பொருவு இல் மாதரார் - சீறா:1152/3

கரும்பு எனும் அமுத தீம் சொல் கன்னியர் செறிந்த தோற்றம் - சீறா:1168/2

கரும்பு எனும் நபி கலிமாவை காமுற - சீறா:1318/1

கதிர் மணி கரும்பு இளம் கமுகு அரும் கனி கதலி - சீறா:3124/1

கரும்பு எனும் மொழியாள் ஆசை கவின் முளைத்து என்ன தோட்டு உள் - சீறா:3191/1

கொடி கரும்பு எழுது தோள் மேல் கொழும் மணி கோவை சேர்த்தார் - சீறா:3213/4

புடைபடும் கதலி சூழல் பூம் கரும்பு அடவி மாய - சீறா:3381/3

கரும்பு அடைகிடக்கும் தீம் சொல் கதி மறை கபீபு அன்பாகி - சீறா:4907/2

கரையிலா உவகை கடலிடை குளித்து கரும்பு எனும் மறை கலிமாவை - சீறா:4916/3

தீம் கரும்பு எருத்தில் தூங்கு தேன் உடைந்து சிதறிடும் பணை புடை சூழும் - சீறா:4923/3

அரும் கரும்பு உடைந்து சாறு எழ கய வாய் அசைத்து அசைபோட்டு கண் துயில - சீறா:5007/3

கடி நறா ஒழுகிட கொடி கரும்புகள் நடுவார் - சீறா:1105/3

கூறு மென் கரும்பே நின்றன் வயிற்று உறு குழந்தை - சீறா:200/2

பேரழகு ஒழுகும் பெண் நலம் கனியை பிரசம் ஊறிய மொழி கரும்பை
ஆரண கடலுக்கு அமுத நாயகியை அரிவையர் முறைமுறை வாழ்த்தி - சீறா:1207/1,2

விரி கதிர் மணி பூண் தாங்கும் மென் கழுத்தாள் வேயினை கரும்பை மெல் அணையை - சீறா:1964/2

கனிந்து இனிது ஒழுகும் பெண்மை கரும்பை தேன் கனியை வாசம் - சீறா:3066/1

ஏறு பாய் ஒலி எருமை நீர் பாய் ஒலி கரும்பின்
சாறு பாய் ஒலி சங்கு ஒலி வயிர் ஒலி மற்ற - தேம்பா:12 46/2,3

காய்ந்த ஆலையின் கரும்பினை முறுக்குதற்கு அளவில் - தேம்பா:6 61/3

இட்டு இரட்டின கரும்பு இன்பு ஈன்ற கள் - தேம்பா:1 27/3

கரும்பு உலாவிய சாறு இல காய்ந்தன ஆலை - தேம்பா:5 15/1

கரும்பு வில் ஏவிய வெம் கணையாய் மனமே கருக - தேம்பா:10 47/2

தேன் இரும் தலை கரும்பு உறழ் ஆடிய செந்நெல் - தேம்பா:12 53/2

கம் உகும் படர் கதலி கனிகள் நக்கும் கரும்பு ஒரு-பால் - தேம்பா:20 16/1

வேய் நிற கரும்பு நக்கும் விரி தலை கதலி ஊழ்த்து - தேம்பா:29 39/1

கரவ நீள் பசும் பூ நெற்றி கரும்புகள் நிறுவி ஊக்கி - தேம்பா:12 13/2
செங்கரும்பு
கன்னல்அம் கரும்புதான் கமுகை காய்ந்து எழும் - வளையா:70/2

ஆலையில் கரும்பின் கண்களில் தெறித்த ஆரம் அ வயல் புறத்து அடுத்த - வில்லி:6 19/1

தசும்பு உறும் அகிலின் தூபம் சாறு அடு கரும்பின் தூபம் - வில்லி:6 32/1

கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் - வில்லி:5 65/4

மாரன் கரும்பு வளரும்படி வார்த்த நீரால் - வில்லி:5 97/1

வண்டு மலர் கரும்பு ஆம் வண்ண படையானை - வில்லி:10 80/1

தரை எலாம் பொன்னும் வெள்ளியும் பழன வேலி சூழ் சாலியும் கரும்பும் - வில்லி:6 18/4
முடி கையினால் தொடும் மோட்டு உழவர் முன்கை தருக்கை கரும்பு இன் கட்டி - தேவா-சம்:50/1

கரும்பு இன்மொழியாளோடு உடன் கை அனல் வீசி - தேவா-சம்:494/2

தேனினும் இனியர் பால் அன நீற்றர் தீம் கரும்பு அனையர் தம் திருவடி தொழுவார் - தேவா-சம்:832/1

கழை ஆர் கரும்பு கண்வளர் சோலை கலி காழி - தேவா-சம்:1106/2

கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே - தேவா-சம்:1368/4

கரும் சகடம் இளக வளர் கரும்பு இரிய அகம் பாயும் கழுமலமே - தேவா-சம்:1388/4

தென்றலார் அடி வருட செழும் கரும்பு கண்வளரும் திரு ஐயாறே - தேவா-சம்:1400/4

முறித்து மேதிகள் கரும்பு தின்று ஆவியில் மூழ்கிட இள வாளை - தேவா-சம்:2581/3

கரும்பு கார் மலி கொடி மிடை கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை - தேவா-சம்:2598/3

கலவ மா மயில் ஆர் இயலாள் கரும்பு அன்ன மென்மொழியாள் கதிர் வாள் நுதல் - தேவா-சம்:2821/1

கரும்பு தேன் கட்டியும் கதலியின் கனிகளும் - தேவா-சம்:3184/1

கரும்பு அன வரி சிலை பெருந்தகை காமனை கவின் அழித்த - தேவா-சம்:3770/1

கரும்பு அமர் வில்லியை காய்ந்து காதல் காரிகை-மாட்டு அருளி - தேவா-சம்:3872/1

கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே - தேவா-சம்:4029/4

கறுத்தானை கருதாதே கரும்பு இருக்க இரும்பு கடித்து எய்த்த ஆறே - தேவா-அப்:51/4

கரும்பு கொப்பளித்த இன்சொல் காரிகை பாகம் ஆக - தேவா-அப்:239/2

கரும்பு பிடித்தவர் காயப்பட்டார் அங்கு ஓர் கோடலியால் - தேவா-அப்:990/1

கரும்பு அற்ற சிலை காமனை காய்ந்தவன் - தேவா-அப்:1072/3

கரும்பு ஒப்பானை கரும்பினில் கட்டியை - தேவா-அப்:1093/1

கன்னலை கரும்பு ஊறிய தேறலை - தேவா-அப்:1989/1

கரும்பு அமரும் மொழி மடவாள் பங்கன்-தன்னை கன வயிர குன்று அனைய காட்சியானை - தேவா-அப்:2091/1

கரும்பு தரு கட்டியை இன் அமிர்தை தேனை காண்பு அரிய செழும் சுடரை கனக குன்றை - தேவா-அப்:2415/2

கரும்பு அனையாள் உமையோடும் கருகாவூரார் கருப்பறியலூரார் கரவீரத்தார் - தேவா-அப்:2599/3

கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை - தேவா-அப்:2877/1

கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர் - தேவா-சுந்:126/3

கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே - தேவா-சுந்:156/4

கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில் - தேவா-சுந்:164/2

கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர் - தேவா-சுந


This post first appeared on சொலல்வல்லன், please read the originial post: here

Share the post

கரும்பு

×

Subscribe to சொலல்வல்லன்

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×