Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...



உங்கள்பலசந்தேகங்களுக்கு இதில்தீர்வுஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்மீண்டும் மீண்டும் படியுங்கள்பலவரிகள்மிகமிகஆழமானபரந்தபொருளைகொண்டவை.
* சுவாமி விவேகானந்தர் : நாம்ஏன்எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனைசெய்துகொண்டிருப்பது உன்வழக்கமாகிவிட்டது. அதனால்உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியவில்லை.
* சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டைதீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால்அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்தசோதனையின் மூலம்அவர்கள் மேன்மையடைவார்களே தவிரகீழேசெல்லமாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
* சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்றுசொல்கிறீர்களா?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விடபெரியஆசிரியர் வேறுயாருமில்லை. அதுமுதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகுதான்பாடத்தை போதிக்கும்.
* சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கிதவிப்பதால் நாங்கள் எங்கேபோகிறோம் தெரியவில்லை….
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியேபார்த்தால் எங்கேபோகிறோம் என்றுஉனக்குபுரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான்முடியும். ஆனால்உள்ளத்தால் தான்வழியைகாட்டமுடியும். (Eyes provide sight. Heart provides the way.)
* சுவாமி விவேகானந்தர் : சரியானபாதையில் போகும்போதும் தோல்விஅடிக்கடி ஏற்படுகிறதே?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றிஎன்பதுபிறரால் அளக்கப்படுவது. ஆனால்அதில்கிடைக்கும் திருப்தி என்பதுஉன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
* சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படிநீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனிஎப்படிபோகப்போகிறோம் என்றுஅச்சப்படுவதைவிட இதுவரைநீஎப்படிவந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்துவந்திருக்கிறாய் என்றுபார். உனக்குகிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
* சுவாமி விவேகானந்தர் : இந்தமக்களைநினைத்து நீங்கள் வியக்கும் விஷயம்எது?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போதுஎனக்குஏன்? என்னைமட்டும் ஏன்??” என்றுகேட்பவர்கள் இன்பத்தின் போதுஅந்தகேள்வியை கேட்பதில்லை. அதைநினைத்து தான்வியக்கிறேன்.
* சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை நான்அடைவதுஎப்படி?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன்கடந்தகாலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவேவாழ்க்கையில் சிறந்தவைகளை பெறகடைபிடிக்கவேண்டிய நியதி.
* சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரேஒருகேள்வி. சிலநேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன்கேட்கவில்லையோ என்றுதோன்றுகிறது.
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்றுஎதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பதுதீர்வுகாணப்படவேண்டிய ஒருபுதிர்தானேதவிரபிரச்னை அல்ல. எப்படிவாழவேண்டும் என்றுமட்டும் நாம்அறிந்து கொண்டால் வாழ்க்கை மிகமிகஇனிமையாக மாறிவிடும். என்னைநம்பு.



This post first appeared on போஜராஜ் [Pojaraj], please read the originial post: here

Share the post

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடல்...

×

Subscribe to போஜராஜ் [pojaraj]

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×