Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :



இந்தகடிதத்தோடு உங்களின் தேர்வு முடிவுகள் இணைக்கப்பட்டுஉள்ளன. இந்தசிக்கலான தேர்வுவாரத்தில் நீகாட்டிய அளவில்லாதஅர்ப்பணிப்பு மற்றும் முயற்சியைக்கண்டநாங்கள் பெரிதும்பெருமைப்படுகிறோம்.

ஆனால்,இந்ததேர்வுகள் உன்னைதனித்தவராகவும்,சிறந்தவராகவும் ஆக்கும்பண்புகளை முழுமையாகஎடை போடாதுஎன்பதை நாங்கள்அறிந்தே இருக்கிறோம். இந்த வினாத்தாள்களைதயாரிப்பவர்கள்,இவற்றை திருத்துபவர்கள்ஆகிய ஒவ்வொருவருக்குமஉங்கள் ஒவ்வொருவரைப்பற்றியும்தனித்தனியாக தெரியாது. உங்களை உங்கள் ஆசிரியரோ,பெற்றோரோ,நான்அறிய முயல்கிறமாதிரியோ அவர்கள்அறிந்திருக்கவில்லை. நீ அற்புதமாகஒரு இசைக்கருவியைமீட்டுவாய் என்றோ,பிரமிக்க வைக்கிற வகையில்ஓவியம் வரைவாய்என்றோ அல்லதுஅழகாக நடனம்ஆடுவாய் என்றோஅவர்களுக்கு தெரியாது.

உன் நண்பர்களுக்குநீ எவ்வளவுமுக்கியமானவர் என்றோ,உன்னுடைய ஒரு புன்னகைஅவர்களின் ஒருநாளை எவ்வளவுசிறப்பானதாக ஆக்கிவிடும் என்றோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. நீ கவிதையோ,பாடலோ எழுதுவாய்என்றோ அல்லதுவிளையாட்டுகளில்பங்கு பெறுகிறாய்என்றோ அல்லதுசிலசமயங்களில் பள்ளி முடிந்த பின்னர் உன்னுடையகுட்டித்தம்பி அல்லது தங்கையை கவனித்துக்கொள்கிறாய் என்றோ அவர்களுக்குதெரியாது. நீகச்சிதமான ஒருஇடத்துக்கு பயணம் போய் வந்திருக்கிறாய்என்றோ,ஒரு சிறந்த கதையைஅசந்து போகிறவகையில் உனக்குசொல்லத்தெரியும்என்றோ, முக்கியத்துவம்வாய்ந்த நண்பர்கள்அல்லது குடும்பஉறுப்பினர்களோடுநேரம் செலவிட்டாய்என்றோ அவர்களுக்குதெரியாது. நீநம்பிக்கைக்குரியவன்,கருணையானவன அல்லது யோசிக்கக்கூடியவன்என்பதோ,நீஒவ்வொரு நாளும்உன்னுடைய பெஸ்ட்டைதர முயல்கிறாய்என்பதோ அவர்களுக்குதெரியாது. இந்தமுடிவுகள் எதோசிலவற்றை சொல்கின்றன,ஆனால,அவைஉன்னைப்பற்றி எல்லாவற்றையும் சொல்லவில்லை.

இந்த முடிவுகளைகொண்டாடுங்கள்,வற்றை பற்றி பெருமிதப்படுங்கள். அதே சமயம்நீ சாமர்த்தியசாலியாகஇருப்பதற்கு எண்ணற்ற வழிகள் இருக்கின்றன என்பதையும்நினைவில் கொள்

https://m.facebook.com/photo.php?fbid=789173177780427&id=100000632559754&set=a.272060919491658.69030.100000632559754&refid=7&_ft_=qid.6036966059671400313%3Amf_story_key.-1876577079999907819&__tn__=*s


This post first appeared on போஜராஜ் [Pojaraj], please read the originial post: here

Share the post

இங்கிலாந்தில் தேர்வு முடிவுகளோடு பள்ளி மாணவர்களுக்கு இணைக்கப்பட்ட கடிதம் இது :

×

Subscribe to போஜராஜ் [pojaraj]

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×