Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

காதலா கனவா ?




ஹலோ ரீனாவா...? 
எஸ் நீங்க 
நான் தான் ராஜ் பேசுறேன் எப்படி இருக்க 
ம்ம் நல்லா இருக்கேன் நீ 
நான் நல்லாவே இல்லடி 
ஏன்டா ......... 
நான் உன்ன சந்திக்கணும் வரலாமா ...? 
ஒ எஸ் தாராளமா ..... 
இருவரும் சந்தித்தார்கள் 
ஒருவரை ஒருவர் பார்த்த சந்தோசத்தில் 
தன் மனம் விட்டு பேசினார்கள் தனது கடந்த கால நினைவுகளை 

அப்போது ரீனா உன் காதல் எப்படி போகுது என்று கேட்டாள் 

அதற்கு ராஜ் 
ம்ம் அது வந்து அந்த பொண்ணு வேற ஒரு பையனை திருமணம் செய்து கொள்ள போறாளாம் 

ஏன்டா ....என்ன ஆச்சு ....? 

நான் போய் பொண்ணு கேட்டேன் ஆனா அவுங்க வீட்டுல தற மாட்டேன்னு சொல்லிடங்க வாடி ஓடி போகலாம் என்று சொன்னேன் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டாள் , 

4 வருசமா காதலிச்ச பொண்ணே என்ன புரிஞ்சிக்கல சாகலாம்முனு முடிவெடுத்தேன் வீட்டுல காப்பாத்திட்டாங்க 

தினமும் தண்ணியடிச்சேன் இனிமேல் தண்ணி அடிச்சா என் உயிருக்கு ஆபத்துன்னு டாக்டர் சொல்லிடங்க என்ன பண்ண என் அம்மாவுக்காக உயிரோடு இருக்கேன் என் வாழ்க்கைய பாத்தியா ரீனா ........ 

அப்போதான் உன் யாபகம் வந்தது போன் பண்ணுனேன். நான் வேண்டாம்னு சொல்லியும் நீ என்ன love பன்னுனேயே உன்னோட உண்மையான அன்பு இப்போதான் எனக்கு புரிஞ்சது 

என்ன மனசுல நினைத்த பாவத்திற்காக நீ வேற யாரையும் மணக்காம நான்கு வருசமா காத்திருக்கியே உன்ன வேண்டாம்னு சொன்னேன் பாரு நான் ஒரு முட்டாள், பாவி அழுதுகொண்டே 

இப்போம் உன்ன தேடி வந்திருக்கேன் நீ முதல் முதலா பார்த்த ராஜ் 
என்ன ஏற்றுக்கொள்வாயா ........? 

உன் மனசுல இடம் கிடைக்குமா ? என்னை மாதிரியே மாட்டேன்னு சொல்லிடாத என்று அழுதவாறே உனக்கு நான் பண்ணுன துரோகத்துக்கு கடவுள் நல்ல தண்டனை கொடுத்துட்டாரு ............ 

ஏன் டா இப்படி பேசுற நீனா எனக்கு உயிர் உன்ன வேண்டான்னு சொல்வேன் என்று சொல்ல அவள் மனம் ஆசைப்பட்டது இருந்தும் சொல்லாமல் மனதிற்குள்ளே பூட்டி வைத்தாள் 

காரணம் ஒரு உறவு போன பின்புதான் என் நினைவு அவனுக்கு வந்ததை நினைத்து இல்லை என்றால் என் காதல் அவனுக்கு புரியாமலே போயிருக்குமே என்று மனதில் நினைத்தால் இருந்தும் அவனை விட்டு கொடுக்க முடியாமல் தடுமாறினாள் ............. 

அவளின் தடுமாற்றத்திற்கு அளவே இல்லாமல் போனது 

நினைத்தாள் ......... 
அன்று அவனுக்காக ஏங்கிய நாட்கள் இன்று அவனே அவள் கையில் பூத்ததை நினைத்து சூடிக்கொள்ள ஆசைபட்டாள் 

ஆனால் அவளின் கனவு அதற்கு தடை விதித்தது காரணம் 

சிறு வயதிலே இருந்து ஒருவனையே காதல் செய்து ஒரு வனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போது தவறாக போய் விட்டதே என்று அழுதாள் 

காதலித்தவன் கிடைத்து விட்டான் ஆனால் கனவை அழித்தவனாய் 
இருக்கிறானே என்று குமுறினாள் 

இருந்தும் அவனை தொடர்ந்து சந்திக்க ஆசைப்பட்டாள் 
அவனும் சந்தித்தான். அவளின் தூய அன்பை கண்டு மேலும் அவள் மேல் 
காதல் பொங்கியது ..... 

ஆனால் அவள் மனதில் உள்ள பாரத்தை இறக்க ஓர் நாள் அவனிடம் கேட்டால் நீங்கள் காதலிக்கும் போது எதாவது தவறு நடக்க வாய்ப்புகள் உண்ட என்றால் கண்ணீருடன் ..... 

அவன் அதற்கு உண்மையான பதில் சொன்னான் எஸ் நானும் அவளும் கணவன் மனைவியாகவே வாழ்ந்துவிட்டோம் ஆனால் அவள் தான் என்னை ஏமாற்றிவிட்டாள் என்ன செய்வது திருமணம் நடக்கும் என்ற ஆசையில் தான் அப்படி தவறு செய்தோம் இப்போது நடக்கவில்லை. அதை நினைத்து நினைத்து நான் பைத்தியமா ஆனது தான் மிச்சம் அவள் சந்தோசமாக இருக்கிறாள் என்ன செய்ய என்றான் 

இதை கேட்டதும் அவள் மனது செத்து விட்டது. மனத்தால் பிரிந்திருந்தால் போதும் என்ற ஆசை இப்போது உடலால் பிரிந்ததை நினைத்து விலக என்னினாள் 

ஆனால் அவன் நான் செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தவறு தான் 
இருந்தும் என்னை முழுமையாக புரிந்து கொள்ளும் பெண்மை உன்னிடம் உள்ளதால் தான் உன்னை தேடி வந்தேன் 

அன்று நீ என்னை விட பெரியவள் என்று வேண்டாம் என்று சொன்னேன் இன்று அதைவிட பெரிய காதல் உன் மனதில் இருப்பதை உணர்ந்தேன் உன்னை மீண்டும் காதலிக்க 
ஏற்றுக் கொள்வாயா? என்று அழுதான் 

அவள் எனக்கு கொஞ்சம் டைம் வேணும் என்றாள் 

அவனோ எவ்வளவு டைம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள் ஆனால் 
என்னை வேண்டாம் என்று கூறிவிடாதே என்றான் 

நீ கூறும் வார்த்தையில் தான் நான் வெளிநாடு செல்லவா? வேண்டாமா? என்று முடிவெடுக்கணும் என்று சொல்லி விடை பெற்று விட்டன 

அவளோ காதலா கனவா ? புரியாமல் திகைத்தாள். 

என்னை தீண்டுபவன் இன்னொரித்தியின் சொந்தமானவன் என்ற உண்மை தெரிந்தும் சம்மதம் சொல்ல முடியவில்லை 

காரணம் அவனோடு வாழும் நாட்கள் எல்லாம் அந்த நினைவு அவளை அறுத்துக்கொண்டே இருக்கும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழமுடியாது சோ வேண்டாம் என்ற முடிவிற்கு வந்தாள் 

போன் செய்தாள் ராஜ் நீ வெளிநாடு எப்போ போற என்றால் 

அவன் இன்னும் ஓரிரு மாதத்திற்குள் சென்று விடுவேன் என்னா,...? 

இல்லை என்னால் உன் நிகழ காலம் வீண் போக வேண்டாம் நீ தாரளமாக செல் என்று போனை கட் செய்துவிட்டு அழுதால் 

உடனே அவனும் கால் செய்து ஓகே உன் விருப்பமே என் விருப்பம் ஏனா நான் உன்னை மணக்கும் தகுதியை இழந்துவிட்டேன் நீ எங்கிருந்தாலும் நலமாக வாழ் வாழ்த்துக்கள் என்றன் ..... 

மாதம் முடிந்தது ராஜ் போன் செய்தான் ரீனாவுக்கு 
நான் நாளை மலேசியா செல்கிறேன்.உனது திருமத்திற்கு என்னை அழைப்பாயா என்றான் ..... 

ம்ம்ம் என்று அழுதால் 
ஏன் அழுகிறாய் 
மனதாலும் நினைவாலும் உன்னுடன் வாழ்ந்துவிட்டேன் 
இன்னொரு மனதை என்னால் ஏற்க முடியாது டா என்றால் 

அதற்கு அவன் சொன்னான் உன் நல்ல மனதிற்கு ஒரு நல்ல 
வரன் அமையும் அழுகாதே என்று போனை வைத்துவிட்டான். 

மறுபடியும் போன் செய்தால் ரீனா 
நான் இப்போதும் உன்னை மனதார உயிருக்குயிராய் லவ் பண்ணுறேன் டா நீ இல்லாத ஒரு வாழ்க்கையை என்னால் ஏற்று கொள்ள முடியாது 
என்னை விட்டு போகாதே என்று சொல்ல காதல் துடிக்குது மனசு தடுக்குது இருந்தும் காதலிக்கிறேன் உன்னை மட்டும் என் வாழ்க்கை முடியும் வரை. 

காரணம் நான் ஒரு தமிழ் பெண் ஒருவனுக்கு ஒருத்தி என்பது நம் பண்பாடு அதை மாற்ற என்னால் முடியாது உன்னையே நினைத்து கொண்டே வாழ்கிறேன் என்றும் உன் ரீனாவாக ok 

ராஜ் sorry ரீனா என்னை மன்னித்துவிடு இன்னொரு பிறவியில் உன்னை நான் மணக்க இறைவனை யாசிக்கிறேன் பை...பை 

இருந்தும் ஐந்து வருடம் கழித்து வருவேன் நீ காத்திருந்தால் உன்னையே மணப்பேன் காரணம் உன் இறுதிகாலம் முடியும் வரை ஒரு நல்ல பாதுகாவலானாய் 
மட்டுமே என்னால் போன உன் வாழ்க்கையை என்னால் திருப்பி தர முடியாது இருந்தும் காவல் காதலனாய் சேர்கிறேன் உன் சம்மதத்துடன். இதற்கு இடையில் காலம் கற்பிக்கும் பாடம் உனக்கு புரியும் போது கண்டிப்பாக உன் அருகில் நான் இருப்பேன் என்றும் உன்னுயிர் ராஜ். 

கதை எழுதியவர் 
உங்கள் ஹிஷாலீ .


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

காதலா கனவா ?

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×