Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கவிதை செய்வோம் வா..

கவிதைகளில் நிறைய ஆர்வமுண்டு ஆனால் எழுத வரவில்லை என்பவர் இங்கு வாங்க..

முதலில் ஒரு உண்மை எனக்கும் கவிதை எழுத தெரியாது. அப்புறம் ஏன்டா எங்கள வர சொன்ன? என்று கேட்டால் . சொல்றேன். எனக்கென்ன தெரியுமோ அத சொல்லிதரேன்.

முதல்ல கவிதை எழுத சில எளிய குறிப்புகள் இருக்கு. அதுக்கு மேல நிறைய இருக்கு நமக்கு இது போதும்..

1)சப்தம்
2) எதுகை
3)மோனை
4) இயைபு
5)சீர்
6)அடி
எல்லாரும் இததான் சொல்றாங்க. அது புரியாமதான சும்மா இருக்கோம் என்பவர்களுக்கு . நான் அவ்ளோ ஆழமாலாம் சொல்ல போறதில்ல..

1) சப்தம் ..
    இங்க்லிஷ்ல இத சிலபல்னு சொல்வாங்க. ஒன்னுமில்லங்க ஒரு வார்த்தை ஓட சப்தம். அங்கே. னு நீங்க சொல்லும் சப்தம் தான் அது . சிம்பிளா சொல்லனும்னா சினிமா பாட்டுல  லாலாலா .. இல்ல தனனா தனனா. மாதிரி .

அந்த சப்தத்த புடிச்சி அதுக்கு ஏத்த மாதிரி ஒரு நாலு வரி எழுதி படிச்சி பாருங்க கொஞ்சம் கவிதை மாதிரி தெரியும்.

உதாரணமா..   தென்றல் வந்து தீண்டும் போது  பாட்டு எல்லாருக்கும் தெரியுமில்ல.. அதுல பாருங்க

தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசில
திங்கள் வந்து காயும் போது என்ன எண்ணமோ நெனப்புல..

இந்த ரெண்டு வரியில .. முதல் வரிக்கும் இரண்டாவது வரிக்கும் சப்தம் ஒன்னுதான்.

இப்ப அந்த சப்தத்துக்கு நீங்களே ரெண்டுவரி எழுதி பாருங்க கவிதைனு நீங்க நம்புற மாதிரி இருக்கும்...


அடுத்து...

2) எதுகை..  மோனை ... இயைபு..

   இதெல்லாமே ரைமிங் தாங்க.. பட் இடத்துக்கு இடம் ஒரு பேரு.. வரியோட முதல் வார்த்தை முதல் எழுத்து எல்லாம் ஒரே மாதிரி வந்தா எதுகை..

வரியோட முதல் வாரத்தை இரண்டாவது எழுத்து எலலாம் ஒரே மாதிரி ரைமிங்கா வந்தா மோனை..

வரியோட கடைசி வார்த்தை கடைசி ஒன்னு இல்ல சில எழுத்துக்கள் ரைமிங்கா வந்தா இயைபு..

உதாரணமா..
எப்படி இருந்த என் மனசு - இப்ப
எப்படி மாறி போயிடுச்சு..

எஎ எதுகை...

மின்னலே நீ வந்ததேனடி - என்
கண்ணிலே ஒரு காயமென்னடி

ன் ண் மோனை..

நான் ஏன் பிறந்தேன்
கண் ஏன் திறந்தேன்

பிறந்தேன்  திறந்தேன்  இயைபு...

அவ்ளோ தாங்க எழுதும் வரிகளில் இந்த மூணும் பாத்துக்கோங்க..

5) சீர் ..

   சீர் னா  வரிசையா அடுக்குறது .. சீருடை. சீர்வரிசை மாதிரி .. ஒரு பேட்டரன். நாலு வாரத்தை ஒரு லைன் ஆறு வார்த்தை ஒரு லைன் மாதிரி ஆன அடுக்குதல்..

உதாரணமா

அவளும் நானும்  முகிலும் காற்றும்
இது நாற்சீர் அதாவது நாலு சீர்

அவளும் நானும்
மோகமும் முத்தமும்
இது இருசீர்  அதாவது ரெண்டு சீர்

அன்பே அமுதே அழகே ஆசைத்தீவே அடயே
இது ஆறுசீர்..

இந்த அடுக்குறத பழகிக்கோங்க..

6)அடி

  அடி னா ஸ்டெப் . அடி மேல் அடிவைத்து அவள் வந்தாள் ங்கிற ஸ்டெப்.. இங்க வரி .. ஒரு வரி ஒரு அடி..

உதாரணமா..

அகர முதல எழுத் தெல்லாம்
ஆதிபகவ ன்முதற்றே  உலகு

இது ரெண்டு அடி..

நான் என்ன நஞ்சோ  சொல்லாயோ
நாயகி உனக்கு நற்றமிழ் நான்றோ
தாமரை இலை நீரோ நானுனக்கு
தாமரை பூவே நீவளர் நீரடி நானுனக்கு...

இது நான்கு அடி..

இப்போதைக்கு இத பாலோ பண்ணி . உங்களுக்கு புடிச்ச சினிமா பாட்டுக்கெல்லாம்  உங்களுக்கு பிடிச்ச மாதிரி வரி எழுதி தனியா  படிச்சி பாருங்க அது கவிதை தான் புதுக்கவிதை ரகத்துல சேர்க்க முடிஞ்ச கவிதை..

இனி  இன்னும் சில அடுத்த கட்டுரையில்...

    



This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

கவிதை செய்வோம் வா..

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×