Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

அற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்! | #StandwithArputhamAmmal


தீர்ப்பு தவறென்று முறையிட வந்த பெண்ணுக்கு நீதியும் வழங்கி, தவறான தீர்ப்புக்கு வருந்தி மன்னன் தன் உயிரையும் விட்ட இதே கண்ணகி மண்ணில்தான் தன் மகனுக்கு அளிக்கப்பட்ட தவறான தீர்ப்புக்கு நீதி வேண்டி 30 ஆண்டுகளுக்கும் மேலாய்ப் போராடி வருகிறார் இந்த ஈகத் தாய்

இவர்களுக்குத் தண்டனை அளித்ததே தவறு என்கிறார் அந்தத் தீர்ப்பைக் கூறிய நீதியரசர்!...

எந்த அடிப்படையில் அவர் தீர்ப்பளித்தாரோ அந்த வாக்குமூலமே பிழை என்கிறார் அதைப் பதிவு செய்த காவல்துறை அதிகாரி!...

எந்தச் சட்டத்தின் கீழ் அந்த வாக்குமூலம் பெறப்பட்டதோ அந்தச் சட்டமே தவறு என்று திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது அரசு!...

தவறான சட்டத்தின் கீழ் கைது செய்து... பொய்யான வாக்குமூலத்தைப் பதிவு செய்து... பொருந்தாத குற்றச்சாட்டின்படி தண்டனை அளித்து... எத்தனை கொடுமைகள்!!!

இவ்வளவுக்கும் பின்னர் உச்சநீதிமன்றமே சொன்ன பிறகும் இவர்களை விடுவிக்காமல் இருப்பது கொடுமையின் உச்சம் இல்லையா?

அந்தத் தாய் கேட்பதெல்லாம் என்ன? தன் கடைசி காலத்திலாவது சில ஆண்டுகள் மகனுடன் வாழ வேண்டும் என்பதுதானே? இத்தனை கொடுமைகளுக்கும் மாற்றாக இதையாவது செய்யக்கூடாதா இந்த அரசு?

பி.கு.: முப்பது ஆண்டுகளாகத் தன் மகனின் விடுதலைக்காகப் போராடி வரும் அற்புதம் அம்மாள் அவர்களின் குரலுக்கு வலுச் சேர்க்கும் வகையில் #StandWithArputhamAmmal எனும் சிட்டையின் கீழ் இன்று மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கத் தமிழர் போராட்ட அமைப்பான மே பதினேழு இயக்கம் விடுத்த அழைப்புக்காக என் சிறிய பங்கு இது! 👆

படம்: நன்றி துவிட்டர்.

தொடர்புடைய பதிவு:
✎ மூவர் விடுதலையும் ஈழ விடுதலையும் - திறந்திருக்கும் புதிய வாசல்!

Share the post

அற்புதம் அம்மாளுக்குத் துணை நிற்போம்! | #StandwithArputhamAmmal

×

Subscribe to அகச் சிவப்புத் தமி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×