Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

வறு செய்பவர் தலைவராகவே இருந்தாலும் எதிர்க்க வேண்டும் எனும் கொள்கை காரணமாகப் பிறந்த கட்சி தி.மு.க. ஆனால் இன்று, செய்தவர் உங்கள் தலைவர் என்பதற்காக, ஒரு மாபெரும் குற்றத்தை நியாயப்படுத்துவதையே முழு நேரப் பணியாக வைத்துக் கொண்டிருக்கிறீர்கள் அவர்தம் உயிரினும் மேலான உடன்பிறப்புக்கள்!

கடந்த வாரம் தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்ததையொட்டி, ஈழத் தமிழினப்படுகொலையின் பொழுது அவர் நடந்து கொண்ட விதம் சரியே என நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் திராவிடவாத அன்பர்கள். கருணாநிதி கவலைக்கிடமாக இருந்தபொழுதே இது குறித்து உங்களுக்கும் தமிழ்த் தேசியவாதிகளுக்கும் இணையத்தில் சொற்போர் துவங்கி விட்டது என்றாலும், இப்பொழுது இன்னும் தீவிரமடைந்திருக்கிறது. இதில் தாள முடியாத வேதனை என்னவென்றால், நான் மிக மிக மிக மதிக்கிற வலையுலக நண்பர்கள் பலரும் கூட இந்த நியாயப்படுத்தும் இழிசெயலைத் தயங்காமல் செய்கிறீர்கள் என்பதுதான்!

தோழர்களே, தமிழர்களான நம்மைப் பொறுத்த வரையில், கருணாநிதி என்பவர் வெறும் அரசியல்வாதியோ முதலமைச்சரோ கட்சித் தலைவரோ மட்டுமில்லை; இவை எல்லாவற்றையும் தாண்டி அவர் மீதும் அவர் ஆளுமை மீதும் அவர் தமிழ் மீதும் அவர் குடும்பத்தினர் மீதும் தனிப்பட்ட முறையில் உணர்வார்ந்த ஒரு பிணைப்பு நம் அனைவருக்கும் உண்டு; அஃது எனக்கும் இருந்தது உண்டு. ஆனால் அதற்காக, அவர் மீதான இவ்வளவு பெரிய குற்றச்சாட்டையும் போகிற போக்கில் புறங்கையால் தட்டி விட முடியுமா என்ன?

முழுக்கப் படிக்க»

Share the post

கருணாநிதி மீதான ஈழ துரோகக் குற்றச்சாட்டு! - பழி துடைக்க உடன்பிறப்புகள் செய்ய வேண்டியது என்ன?

×

Subscribe to அகச் சிவப்புத் தமி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×