Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

தற்போது தலைமுடி உதிர்வது தான் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. தினமும் பலருக்கு வருத்தத்தைத் தரும் ஒன்றும் இதுவே. இதன் காரணமாகவே பலருக்கு மன அழுத்தம், டென்சன் போன்றவை ஏற்படுகிறது.
தலைமுடிக்காக செலவழிப்போர் ஏராளம். இருப்பினும் எந்த பலனும் கிடைத்திருக்காது. சிலர் தலைமுடி அதிகம் கொட்டுகிறது என்று டிவிக்களில் விளம்பரப்படுத்தும் கண்ட ஹேர் ஆயில்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
இப்படி கண்டதை தலைமுடிக்கு பயன்படுத்தினால், முடியின் ஆரோக்கியம் போய், முடி அதிகம் கொட்டி வழுக்கை கூட ஏற்படும். எனவே உங்களுக்கு முடி அதிகம் கொட்டினால், முதலில் இயற்கை வழிகள் என்னவென்று தெரிந்து முயற்சித்துப் பாருங்கள்.
இங்கு முடி உதிர்வதைத் தடுக்கும் மற்றும் வழுக்கை ஏற்பட்ட இடத்தில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
தேங்காய் பால்
தேங்காய் பாலில் மயிர்கால்களுக்குத் தேவையான ஊட்டச்சத்து அதிகம் உள்ளது. எனவே வாரம் ஒருமுறை தேங்காயை அரைத்து பால் எடுத்து, அந்த பாலைக் கொண்டு தலைமுடியை மசாஜ் செய்து ஊற வைத்து அலசுங்கள். இப்படி செய்து வர, முடி உதிர்வதை தடுக்கலாம்.
கற்றாழை
கற்றாழை ஜெல்லில் உள்ள மருத்துவ குணத்தால், ஸ்கால்ப்பில் உள்ள தொற்றுக்கள் மற்றும் வறட்சியால் முடி உதிர்வது தடுக்கப்படும். அதற்கு கற்றாழை ஜெல்லை ஸ்காலப்பில் தடவி மசாஜ் செய்து, 1 மணநேரம் ஊற வைத்து பின் வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இப்படி செய்வதால் முடி உதிர்வது நிற்பதோடு, வழுக்கைத் தலையிலும் முடியின் வளர்ச்சி தூண்டப்படும்.
ஆயில் மசாஜ்
வாரம் ஒருமுறை தேங்காய் எண்ணெய், ஆலிவ் ஆயில், கடுகு எண்ணெய், பாதாம் எண்ணெய், விளக்கெண்ணெய் போன்றவற்றில் ஏதேனும் ஓர் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி நன்கு மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் அதிகரித்து, மயிர்கால்களின் வளர்ச்சி தூண்டப்படும்.
வேப்பிலை
வேப்பிலையில் ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-வைரல், ஆன்டி-டயாபடிக், ஆன்டி-செப்டிக் போன்றவை உள்ளது. இத்தகைய வேப்பிலை நோய்களை குணப்படுத்த மட்டுமின்றி, முடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு வேப்பிலையை 1 கப் நீரில் போட்டு நீர் பாதியாக வரும் வரை நன்கு கொதிக்க விட்டு, அந்த நீரைக் கொண்டு வாரம் ஒருமுறை தலைமுடியை அலச, ஸ்கால்ப் பிரச்சனைகள் அனைத்தும் வெளியேறி, தலை நன்கு சுத்தமாக இருக்கும்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயை நன்கு உலர வைத்து, அதனை தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு கருமையாகும் வரை ஊற வைத்து, பின் அந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர வேண்டும். அதுமட்டுமின்றி வாரம் ஒருமுறை நெல்லிக்காயை, சீகைக்காயுடன் சேர்த்து அரைத்து, தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். வறட்சியான முடி உள்ளவர்கள், சீகைக்காயைப் பயன்படுத்த வேண்டாம், அந்த எண்ணெயை மட்டும் தினமும் தலைக்கு தடவி வந்தால் போதும்.

வெங்காயம்
வெங்காயத்தில் சல்பர் அதிகம் உள்ளது. இது முடியின் வளர்ச்சியைத் தூண்டும். எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்தாலோ அல்லது வழுக்கைத் தலை இருந்தாலோ வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும்.
பூண்டு
பூண்டிலும் சல்பர் ஏராளமாக உள்ளது. அதற்கு தேங்காய் எண்ணெயில் பூண்டை சேர்த்து கொதிக்க வைத்து, பின் அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்ய வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், முடி உதிர்வது குறைந்து, முடி வளர்ச்சி அடைவதைக் காண்பீர்கள்.
செம்பருத்தி
செம்பருத்தி பூவிலும் தலைமுடிக்கு தேவையான சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது. இது முடி உதிர்வதைத் தடுப்பதில் இருந்து, முடியின் வளர்ச்சியை அதிகரிப்பது, நரைமுடியைத் தடுப்பது, பொடுகைப் போக்குவது என்ற பல நன்மைகளை வழங்கும். அதற்கு செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை ஒன்றாக சேர்த்து அரைத்து தலையில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து ஷாம்பு பயன்படுத்தாமல் தேய்த்து கழுவ வேண்டும்.
முட்டை
முட்டையில் சல்பர், இரும்புச்சத்து, புரோட்டீன், பாஸ்பரஸ், அயோடின் மற்றும் ஜிங்க் போன்றவை அதிகம் உள்ளது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
மைசூர் பருப்பு
மைசூர் பருப்பை அரைத்து பொடி செய்து, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து குளிர்ந்த நீரில் அலச முடி உதிர்வது தடுக்கப்படும்.
எலுமிச்சை மற்றும் மிளகு
எலுமிச்சையின் விதை மற்றும் மிளகை தண்ணீர் சேர்த்து அரைத்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, தலைமுடி உதிர்வது குறையும் மற்றும் முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
வெந்தயம்
வெந்தயமும் முடி உதிர்வதைத் தடுக்கும். முக்கியமாக வெந்தயம் தலைமுடியை மென்மையாக்கி, பட்டுப்போன்று வைத்துக் கொள்ளும். அதற்கு வெந்தயத்தை நீரில் ஊற வைத்து அரைத்து பேஸ்ட் செய்து, தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும்.
தயிர் மற்றும் கற்பூரம்
தயிர் மற்றும் கற்பூரத்தை சரிசமமாக எடுத்து, அதனை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 2 மணிநேரம் ஊற வைத்து, பின் அலச, தலைமுடி உதிர்வது குறைந்து, வழுக்கைத் தலையிலும் முடி வளர ஆரம்பிக்கும்.
கொத்தமல்லி
கொத்தமல்லியை அரைத்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து அலச, முடி உதிர்வது குறைவதோடு, ஸ்கால்ப்பில் ஏற்படும் நோய்த்தொற்றுக்களும் தடுக்கப்படும்.
கறிவேப்பிலை
கறிவேப்பிலை முடிக்கு நல்ல கருமை நிறத்தைத் தருவதோடு, தலைமுடி உதிர்வதையும் தடுக்கும். அதற்கு கறிவேப்பிலையை நீரில் போட்டு தண்ணீர் பச்சையாக மாறும் வரை நன்கு கொதிக்க விட்டு, பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதனைக் கொண்டு ஸ்கால்ப்பை 20 நிமிடம் மசாஜ் செய்து, பின் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், தலையில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Share the post

வழுக்கைத் தலையில் முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில எளிய இயற்கை வழிகள்!

×

Subscribe to வாங்க சார்..வந்து ஒ

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×