Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மலேஷியாவில் விஸ்வரூபம் படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ.............

 
Vijohn - Kuala lumpur,மலேஷியா

கோலாலும்பூரில் உள்ள Berjaya Time Square இல் இபொழுதுதான் நான் படம் பார்த்து வெளியே வந்தேன். இந்த படம் எப்படி இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று படம் பார்காமலேயே எப்படி கருதுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. சொல்லப்போனால் தீவிரவாதத்தால் இஸ்லாமியர்கள் படும் அவஸ்தையை தான் காண்பிக்கிறார். கருத்து தெரிவிப்பவர்கள் படம் பார்த்த பிறகு தெரிவிப்பதே நன்று....I appreciate him...


Indsing Guy - Singapore,சிங்கப்பூர்
நான் நேற்று இரவு மலேசியா சென்று இந்த படத்தை பார்த்து விட்டேன். ரொம்ப நல்லா இருக்கு. இதுல யாரையும் புன்படுத்த இல்லையே, அப்புறம் எதுக்கு இந்த கோமாளிகளுக்காக அரசு தடை செய்து இருக்கிறது. முஸ்லிம் நாடான மலேசியாவில் கூட தடை இல்லை. ஆனால் இந்தியாவில்? இந்தியாவில் உண்மையான மக்கள் ஆட்சி நடக்கவில்லை என்று பலமுறை தினமலரில் நான் கருத்து எழுதி இருக்கிறேன். அதற்கு இந்த சம்பவமும் ஒரு சான்று. இங்கு சில சுயநலம் கொண்ட கும்பல்கள்தான் ஆட்சி மற்றும் அதிகாரம் செலுத்துகின்றன. மக்கள் கருத்துக்கும் மதிப்பு கிடையாது. மக்களுக்கும் மரியாதை கிடையாது. ஒரு சாதாரண சினிமா வை பிரச்சினை ஆக்கியது இந்த சினிமா அல்ல. சுயநலம் கொண்ட கும்பல் தான் காரணம். இந்த சினிமா பத்தி யாரும் கண்டுகொள்ளவே இல்லை நேற்று வரைக்கும். எந்த பிரச்சினையும் இல்லை நேற்று வரைக்கும். ஆனால் இன்று? காரணம் யார்? இந்த சினிமா வா அல்லது இந்த இந்த சுயநல கும்பலா? இதிலிருந்தே தெரிகிறது பிரச்சினையை தூண்டி விடுவது இந்த சுயநல கும்பல் என்று. ஏராளமான சினமாக்களில் திருநெல்வேலிகாரன் ரொம்ப மோசமானவங்கடா என்று வசனம் இருக்கிறது. அதற்காக திருநெல்வேலி மக்களுக்கு இந்த திரைபடத்தை காண்பித்துவிட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? ஒரு ஜாதியினரை பல திரைப்படங்களில் நாட்டாமையாக காண்பித்து இருக்கிறார்கள். அதற்காக மற்ற ஜாதியினர் அனைவரும் என் ஜாதியினை எப்படி நீ இரண்டாம்பட்சமாக படம் எடுக்கிறாய் என்று புகார் செய்து வெளியிட முடியாமல் செய்தால் முட்டாள்தனம் இல்லையா? பல திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி தொடர்களிலும் அண்ணாச்சியை வில்லனாக காண்பிக்கிறார்கள். அன்னாசிமார்களுக்கு திரையிட்டு விட்டு ஓசியில் படம் பார்த்துவிட்டு மற்றவர்களுக்கு இந்த படம் வெளியிட கூடாது என்று சொல்வது முட்டாள்தனம் இல்லையா? சின்ன கவுண்டர் என்று எப்படி நீ தலைப்பு வைக்கலாம் என்று கவுண்டர் ஜாதியினர் அனைவருக்கும் ஓசியில் படத்தை பார்த்துவிட்டு வெளியிட கூடாது என்று சொன்னால் முட்டாள்தான் இல்லையா? இது திரைப்பட துறையினருக்கு ஒரு வெட்ககேடு. சும்மா சும்மா போராடும் இந்த திரைப்பட மகா நடிகர்கள் ஒரு உண்மையான கலைஞனுக்காக மட்டுமின்றி சினிமாவின் மைய வேருக்கு வந்த பிரச்சினை என்று என் போராட வில்லை? இந்த சிறுமான்மை கும்பல் என்றாவது தங்கள் மத மக்களின் ஜீவாராதன பிரச்சினைகளுக்காக போராடி இருக்கிறார்களா? தங்கள் மத வழிபாட்டுக்கு அருகில் இருக்கும் சாராய கடையை மூட கூட துப்பு இல்லை உங்களுக்கு. அவர்களுக்கு தேவையான கல்வியை குடுக்க உங்களுக்கு துப்பு இல்லை. உங்களை நம்ப கூட உங்கள் மத மக்கள் தயாராக இல்லை. ஏனென்றால் நீங்கள் ஒரு சுயநலவாதிகள்.

vinu - frankfurt,ஜெர்மனி

படம் நன்றாக இருக்கிறதாம். மலேசியாவில் இருந்து நண்பன் தொலை பேசியில் தெரிவித்தான். முஸ்லிம் நாடான மலைய்சிவில் இந்த படம் பார்க்க கட்டுகடங்காத கூட்டமாம். படத்தில் முஸ்லிம் கல் பற்றி மோசமான கருத்துகள் இல்லியாம். பிறகு என்ன இந்த தமிழ் நாடு ஆட்றேச்ஸ் இல்ல கட்சிகளுக்கு.

Share the post

மலேஷியாவில் விஸ்வரூபம் படம் பார்த்தவர்களின் விமர்சனம் இதோ.............

×

Subscribe to வாங்க சார்..வந்து ஒ

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×