Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

செல்ஃபி எடுக்க முயற்சி.. கடுப்பாகி போனை தட்டிவிட்ட ஷாருக் கான்! – வைரல் வீடியோ

மும்பை விமான நிலையத்தில் செல்ஃபி எடுக்க முயன்ற ரசிகரின் போனை தட்டிவிட்ட ஷாருக்கானின் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.

அமோக வரவேற்பு

ஹிந்தி சினிமாவின் சூப்பர் ஸ்டார் என அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் ஷாருக் கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘பதான்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த திரைப்படம், ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

ரீலீசுக்கு ரெடி

பதான் படத்தை தொடர்ந்து தற்போது இயக்குநர் அட்லீ இயக்கும் “ஜவான்” திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஷாருக் கான். இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. ஜூன் மாதம் ‘ஜவான்’ திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

கடுப்பான ஷாருக் கான்

இந்நிலையில், இன்று காலை மும்பை விமான நிலையத்தில் வந்து இறங்கிய நடிகர் ஷாருக் கான் வெளியே நடந்து வரும் பொழுது அவரது ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயற்சி செய்துள்ளார். அப்பொழுது கோபமடைந்த நடிகர் ஷாருக்கான், அவரின் செல்போனை தட்டிவிட்டு முறைத்தார். அவர் தட்டிவிட்டதில் செல்போன் கீழே விழுந்தது. பின்பு வேகமாக நடந்து தன் காரை நோக்கி சென்றார் ஷாருக் கான். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

The post செல்ஃபி எடுக்க முயற்சி.. கடுப்பாகி போனை தட்டிவிட்ட ஷாருக் கான்! – வைரல் வீடியோ appeared first on Little talks - Entertainment News Website.



This post first appeared on Get Updated News Through Little Talks!, please read the originial post: here

Share the post

செல்ஃபி எடுக்க முயற்சி.. கடுப்பாகி போனை தட்டிவிட்ட ஷாருக் கான்! – வைரல் வீடியோ

×

Subscribe to Get Updated News Through Little Talks!

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×