Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மோசமான வீடியோ அனுப்பியவரை கிழித்து தொங்க விட்ட ஐஸ்வர்யா!

தனது செல்போனுக்கு ஆபாசமான வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பிய நடபரை லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் நடிகை ஐஸ்வர்யா.

துணை நடிகை

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை லட்சுமி. அவரது மகள் ஐஸ்வர்யா பாஸ்கரன் நியாயங்கள் ஜெயிக்கட்டும் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன்பிறகு ராசுகுட்டி, எஜமான், பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சுயம்வரம், பெண்ணின் மனதை தொட்டு, எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி, குத்து, ஆறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார் ஐஸ்வர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளிலும் தற்போது துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சவுண்ட் சரோஜா

ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு படத்தில் சவுண்டு சரோஜா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார். ஐஸ்வர்யா படங்களில் நடித்து வந்தாலும் சொந்தமாக யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். அதில் பெண்களுக்கு அழகு சாதன பொருட்கள் மற்றும் சோப்பு ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தும் வருகிறார். யூடியூப் சேனலில் ஆர்டரை பெறுவதற்காக வாட்ஸ் அப் நம்பரை பதிவிட்டதிலிருந்து நிலையில், அந்த எண்ணிற்கு ஆபாச மெசேஜ்கள் வந்து கொண்டே இருப்பதாக நடிகை ஐஸ்வர்யா கூறியுள்ளார். இதுகுறித்து பேசாமல் இருந்து விடலாம் என நினைத்தேன், ஆனால் என் மகள் தான் இதுபோன்ற பிரச்சனை வந்தால் பெண்கள் முன் வந்து பேச வேண்டும் என்று வற்புறுத்தியதால், வீடியோவை பதிவிடுவதாக கூறியுள்ளார்.

ஆபாச மெசேஜ்

அந்த வீடியோவில் ஐஸ்வர்யா பேயிருப்பதாவது; “இதுபோல் ஆபாச கமெண்ட்டுகளையும், வீடியோக்களையும் பதிவிடும் உங்களுக்கு அசிங்கமாக தெரியவில்லையா. நான் சோப்பை மட்டும் தான் விற்கிறேன், என்னை விற்கவில்லை. வாட்ஸப் நம்பரிலேயே காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை என்று தெளிவாக பதிவிட்டு இருக்கிறேன். எதற்காக இரவு 11 மணிக்கு மேல் மெசேஜ் அனுப்ப வேண்டும்” எனக் கூறியிருக்கிறார். மேலும் ஆபாச புகைப்படம் அனுப்பியவரின் போட்டோவையும் வீடியோவில் காட்டி “இந்த பையன பெற்ற புண்ணியவதி நீயே பாரு” என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கியுள்ளார் ஐஸ்வர்யா. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

The post மோசமான வீடியோ அனுப்பியவரை கிழித்து தொங்க விட்ட ஐஸ்வர்யா! appeared first on Little talks - Entertainment News Website.



This post first appeared on Get Updated News Through Little Talks!, please read the originial post: here

Share the post

மோசமான வீடியோ அனுப்பியவரை கிழித்து தொங்க விட்ட ஐஸ்வர்யா!

×

Subscribe to Get Updated News Through Little Talks!

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×