Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குங்குமப்பூவின் ஆரோக்கிய பயன்கள்


குங்குமப்பூ 


குங்குமப்பூ சிவப்பு தங்கம்' என்னும் பெயரில்  அழைக்கபடுகிறது. குங்குமப்பூ உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாக உள்ளது. பொலிவான சரும அழகைத் தரும் குங்குமப்பூ, பொதுவாக நிறத்திற்காக சேர்க்கப்படுகிறது. குங்குமப்பூ உணவு  பதார்த்தங்கள், அழகு சாதன பொருட்கள் தயாரிப்பு போன்றவற்றில் பயன்படுகிறது. குங்குமப்பூவில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. ஏனெனில் குங்குமப்பூ அழகு, உணவு பொருட்களில் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், உடல் நல பிரச்சனைகளான மன இறுக்கம், மன அழுத்தம், பார்வை கோளாறு மற்றும் ஞாபக சக்தி போன்றவற்றை சரி செய்யவும் பயன்படுகிறது.



குங்குமப்பூ உற்பத்தி


குங்குமப்பூ ‘க்ரோகஸ் சட்டிவஸ்’ என்று அழைக்கப்படும் மலரிலிருந்து கிடைக்கிறது. குங்குமப்பூ க்ரோகிஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு மற்றும் சிவப்பு  சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடியானது மத்தியதரைக் பகுதிகளில் தோன்றியதாக நம்பப்படுகிறது. உலகின் 94 சதவீத குங்குமப்பூ உற்பத்தி இரான் வசம் உள்ளது. இந்தியாவில், ஜம்மு & காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் குங்குமப்பூ பயிரிடப்படுகிறது. அதைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளிளும் அதிகம் விளைகிறது. உலகளவில் ஸ்பெயின் நாட்டு குங்குமப்பூவிற்கு அதிக வரவேற்பு உள்ளது. 

குங்குமப்பூ சாகுபடி


குங்குமப்பூவின் மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். குங்குமப்பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில் தான் அதிகமா பூக்கிறது. இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக நேரம் மற்றும் காலம் தேவைப்படும், அதனால் தான் இதன் விலையும் மிகவும் அதிகம். இதனால்தான் உலகத்தில் விலையுயர்ந்த மசாலா பொருளாக குங்குமப்பூ இருக்கிறது.

குங்குமப்பூ வகைகள்


குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் தான் அதிகம் விளைகிறது. பண்டைய காலம் முதலே குங்குமப்பூவிற்கு அதிகமான தேவை இருந்து வருகிறது. குங்குமப்பூவில் பல வகைகள் உள்ளது, அவற்றில் முக்கியமான வகைகள் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல்.

குங்குமப்பூவில் உள்ள சத்துக்கள்


குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்துகிறது. குங்குமப்பூவில் உள்ள ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் மங்கனீசு சத்துக்கள் எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது.

குங்குமப்பூவின் ஆரோக்கிய நன்மைகள்


சரும பொலிவு கூடும்


பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும். முகம் பிரகாசமடையும்.

நல்ல தூக்கத்தை கொடுக்கும்


குங்குமப்பூவில் சப்ரனால் என்னும் பொருள் உள்ளது. இது ஒரு மயக்க மருந்து போல் செயல்படுகிறது. மேலும் குங்குமப்பூவில் ஆன்டிசெப்டிக் தன்மை உள்ளது. இது நரம்பு மண்டலத்தை இறுக்கத்திலிருந்து தளர்த்துகிறது. இது இயற்கையான நிம்மதியான தூக்கத்தை கொடுக்கிறது.



கர்ப்பிணிகளுக்கு ஏற்றது


கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி எவ்வித குறையும் இல்லாமல் முழுமையடையும். கருவுற்ற பெண்களுக்கு மூன்றாம் மாதத்திலுருந்து பாலில் காய்ந்த குங்குமப்பூவை கலந்து கொடுத்து வந்தால், சிசுவிற்கும், தாய்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தையின் நிறம் கூடும் என்பதெல்லாம் கட்டுக்கதை. மசக்கையாக இருக்கும்போது பெண்களுக்கு எதை சாப்பிடாலும் வாந்தி உணர்வு தோன்றும். குங்குமபூவில் உள்ள வேதிப்பொருள் அந்த வாந்தி உணர்வை கட்டுப்படுத்தும். அதற்க்கு தான் குங்குமபூ கலந்த பாலை கொடுக்கிறார்கள். கர்ப்பிணி மட்டுமல்லாமல் மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம்.


முகம் ஜொலிக்கும்


குங்குமப்பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் போல செய்து அரை மணி நேரம் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் ரத்த ஓட்டம் அதிகரித்து முகம் பொலிவு பெறும்.

மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும்


மன உளைச்சல், மனச் சோர்வு உள்ளவர்கள் குங்குமப் பூவினை எடுத்துக் கொள்ளும்போது செரடோனின் என்ற பொருள் உடலில் சுரக்கிறது. வயது முதிர்வினால் வரும் கண் பார்வை பாதிப்பு குங்குமப்பூ எடுத்துக் கொள்வதான் மூலம் பாதிப்பின் தீவிரம் குறைகிறது. பாதிக்கப்பட்ட திசுக்களை புதுப்பிக்கவும் குங்குமப் பூ உதவுகின்றது.

பாலுணர்ச்சியை தூண்டும்


பாலுணர்வு குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது. விறைப்புத்தன்மை பிரச்சினை உள்ளவர்கள் குங்குமப்பூ எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி அதிக பலன் தரும். மேலும் ஆணின் இனப்பெருக்க மண்டலத்திற்கும் உதவுகிறது. இதிலுள்ள க்ரோசின் என்னும் பொருள் வழக்கமான செயல்முறையை விட அதிகளவு சக்தியுடன் படுக்கையில் செயல்பட வைக்கக்கூடியது என ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்மைக்குறைபாட்டை சரிசெய்யும்.

இதய செயல்பாடு மேம்படுகிறது


குங்குமப்பூவில் உள்ள கேமம்ஃபிரோல் என்னும் இதயத்தை பாதுகாக்கும் மூலக்கூறு, இதயத்தின் உந்து சக்தியை அதிகரிக்கிறது. இது இதய செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது


குங்குமப்பூவில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ப்ரீ ராடிக்கல்ஸ்களை சமநிலை செய்ய உதவுகிறது. இந்த புற்றுநோய் போன்ற நாட்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.

சுவாச பிரச்சனைகள் தீரும்


குங்குமப்பூ ஆஸ்துமா நோயாளிகளின் நுரையீரலில் உள்ள திசுக்களின் வீக்கத்தினை குறைத்து ரத்த நாளங்களை சீராக செயல்பட வைக்கிறது. இதனால் காற்றுக் குழாய்கள் சீராக  இயங்குகின்றன.

ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்தது

குங்கும்ப்பூவில் ஆன்டிஆக்சிடெண்ட் நிறைந்து காணப்படுகிறது. க்ரோசின், க்ரோசிட்டின், சபிரனால் , கேம்ஃபிரோல் போன்ற வேதி பொருள்கள் குங்குமப்பூவில் உள்ளன. இவை மனநலம், உணவு, உடல் ஆரோக்கியம் போன்ற ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன.

மூட்டுகள் பலமாகும்


மூட்டு வலி உடையோர் குங்குமப் பூ எடுத்துக் கொள்வதன் மூலம் மூட்டு சதை வீக்கங்கள் குறைகின்றது. மூட்டு பலவீனம் நீங்கி, மூட்டுகள் பலமாகிறது. 



நல்ல குங்குமப்பூவை எவ்வாறு கண்டறிவது


நீங்கள் வாங்கிய குங்குமப் பூ சுத்தமானது என்பதை கண்டறிய குங்கமப்பூவின் ஓரிரு இதழ்களை தண்ணீரில் போட்டால் உடனே தண்ணீர் சிவப்பு நிறமானால் அது போலியானது. 10 அல்லது 15 நிமிடங்களில் கழித்து நிறம் மாறி நல்ல மணமும் வந்தால் அதுவே உண்மையான குங்குமப் பூ என்பதை கண்டறியலாம்.

தரமான குங்குமப்பூ


குங்குமப்பூ 80 சதவீதம் சிவப்பாகவும் 20 சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும். தரமற்றது எனில் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.

குங்குமப்பூ கலப்படம்


விலைக்குறைவாக குங்குமப்பூ விற்கும் வியாபாரிகள் குங்குமப்பூவுடன் தேங்காய் துருவல் மற்றும் மெல்லிய நூலிற்கு சாயம் பூசி கலந்துவிடுவார்கள். இது பார்க்கும் போது வித்தியாசம் தெரியாது. ஆனால் உண்ணும்போது வலிப்பு போன்ற பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.

எனவே விலை குறைவாக கிடைக்கிறதே என்று தரமற்ற குங்குமப்பூவை வாங்கி பயன்படுத்தாதீர்கள். 



This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

குங்குமப்பூவின் ஆரோக்கிய பயன்கள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×